இது விஜய் அண்ணனுக்கான தம்பி பொங்கல்..!- நடிகர் ஜீவா நெகிழ்ச்சி
தலைவர் தம்பி தலைமையில் படம் ரிலீஸாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ள நிலையில், நடிகர் ஜீவா செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.
அப்போது அவர் கூறியதாவது:-
விஜய் அண்ணனின் நடனம், ஆக்ஷன் அவருடைய படங்கள், அவருடைய நடிப்பு என நாங்க பார்த்து வளர்ந்திருக்கிறோம். அவருடன் நண்பன் படத்தில் நடித்திருக்கிறேன்.
அதுவும் பொங்கல் ரிலீஸ் தான். 14 ஆண்டுகளுக்கு பிறகு அண்ணனுக்காக தம்பி (டிடிடி) பொங்கலில் ரிலீஸ் செய்திருக்கிறோம்.
என்னைக்குமே மக்கள் என்னை கொண்டாடி இருக்கிறார்கள். அவருக்காக பூவே உனக்காக படத்தில் இருந்து படங்கள் பண்ணிட்டு வந்திருக்கிறோம்.
தலைவர் தம்பி படத்திலேயும் தாங்க்ஸ் நண்பன் என இருக்கும். உண்மையிலேயே அது அவருக்கு தான் சொல்லி இருக்கிறோம்.
எனக்கும், அவருக்கும் இடையே இருக்கும் பாண்ட் எப்படி சொல்றதுனு தெரியல. என்னைக்குமே அவருடைய ஆதரவு எங்களுக்கு எப்போதுமே இருக்கும்.
எங்களுடைய ஆதரவும் அவருக்கு எப்போதும் இருக்கும். இந்த பொங்கலை தம்பி பொங்கலாக எடுத்துக் கொள்ளலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.