சினிமா
கங்கனா ரணாவத்

அவதூறு வழக்கில் கங்கனா ஆஜராகாவிட்டால் கைது வாரன்ட் பிறப்பிக்கப்படும் - நீதிமன்றம் எச்சரிக்கை

Published On 2021-09-15 10:20 GMT   |   Update On 2021-09-15 10:20 GMT
வழக்கை இழுத்தடிக்கவே கங்கனா ரணாவத் ஏதாவது ஒரு சாக்கு சொல்லி வருவதாக ஜாவேத் அக்தர் தரப்பு வழக்கறிஞர் குற்றம் சாட்டினார்.
நடிகை கங்கனா ரணாவத் மீது, 'டிவி' பேட்டி ஒன்றில் தன்னைப் பற்றி அவதுாறாகக் கூறியதாக, திரைப்படப் பாடலாசிரியர் ஜாவேத் அக்தர் வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த வழக்கை ரத்து செய்யக் கோரி கங்கனா ரணாவத் தாக்கல் செய்த மனுவை, மும்பை உயர் நீதிமன்றம் ஏற்கனவே தள்ளுபடி செய்திருந்தது. 

இந்த நிலையில், கங்கனா மீதான அவதுாறு வழக்கு, மும்பை பெருநகர மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது, கங்கனாவின் வழக்கறிஞர் திரைப்பட விளம்பரத்திற்காக கங்கனா சென்றபோது, அவருக்கு கொரோனா அறிகுறி தோன்றி இருப்பதால், நீதிமன்றத்தில் ஆஜராவதில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் எனக் கேட்டுக் கொண்டார்.



இதற்கு ஆட்சேபம் தெரிவித்த ஜாவேத் அக்தர் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், வழக்கை இழுத்தடிக்கவே கங்கனா ரணாவத் ஏதாவது ஒரு சாக்கு சொல்லி வருவதாக குற்றம் சாட்டினார். இதையடுத்து, அடுத்தமுறை வழக்கு விசாரணைக்கு, கங்கனா நேரில் ஆஜராகத் தவறினால் கைது வாரன்ட் பிறப்பிக்கப்படும் என நீதிபதி ஆர்.ஆர்.கான் எச்சரித்து, வழக்கை 20-ந் தேதிக்கு தள்ளிவைத்தார்.
Tags:    

Similar News