சினிமா

மீண்டும் விஜய் படத்தின் புகைப்படங்கள் லீக் - அதிர்ச்சியில் படக்குழு

Published On 2018-03-02 13:56 GMT   |   Update On 2018-03-02 13:56 GMT
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் ‘தளபதி 62’ படத்தின் ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படங்கள் வெளியானதால் படக்குழுவினர் அதிர்ச்சியடைந்துள்ளனர். #Thalapathy62
விஜய் தற்போது ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ‘தளபதி 62’ நடித்து வருகிறார். இதில் விஜய்க்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடித்து வருகிறார். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வரும் இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்து வருகிறார்.

இப்படத்தின் முதல் கட்ட படப்பிடிப்புகள் மும்முரமாக நடைபெற்று வந்து, சமீபத்தில் நிறைவடைந்தது. இதையடுத்து தரமணியில் நடைபெற்றது. தற்போது சன் பிக்சர்ஸ் நிறுவனம் அலுவலகத்தில் நடைபெற்று வருகிறது. இந்த படப்பிடிப்பு புகைப்படங்கள் தற்போது வெளியாகி வைரலாகி இருக்கிறது.

இதில் புகைப்படத்தில் ஸ்டைலிசான விஜய்யை பார்க்க முடிகிறது. மேலும் ரசிகர்கள் டுவிட்டர் பக்கத்தில் இந்த புகைப்படத்தை அதிகமாக பகிரப்பட்டு டிரெண்டாக்கி உள்ளனர்.



ஏற்கனவே இந்தப் படத்தின் போட்டோ ஷூட்டிங்கின் போது புகைப்படங்கள் வெளியானது. தற்போது இந்தப் புகைப்படங்களும் வெளியாகி இருப்பதால், படக்குழுவினர் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
Tags:    

Similar News