search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Vijay"

    • 'தி கோட்' திரைப்படம் செப்டம்பர் 5-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
    • கோட் படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது.

    நடிகர் விஜய், வெங்கட் பிரபு இயக்கும் 'தி கிரேட்டஸ்ட் ஆப் ஆல் டைம்' (தி கோட்) படத்தில் நடித்துள்ளார். இந்தப் படத்தில் பிரசாந்த், மோகன், பிரபுதேவா, ஜெயராம், கணேஷ், யோகிபாபு, அஜ்மல் அமீர், சினேகா, லைலா, மீனாட்சி சவுத்ரி உள்ளிட்ட பலர் நடித்திருக்கின்றனர்.

    இந்த படத்தில் விஜய் இரண்டு வேடங்களில் நடிக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. சமீபத்தில் இந்த படத்தின் 2 பாடல்கள் வெளியாகி வைரலாகின. 'தி கோட்' திரைப்படம் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு செப்டம்பர் 5-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என்று படக்குழு அறிவித்துள்ளது.

    ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்துக்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். இந்நிலையில், இயக்குனர் வெங்கட் பிரபு தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் புகைப்படத்துடன் கூடிய பதிவு ஒன்றை வெளியிட்டு 'தி கோட்' படத்தின் இசைப்பணியை யுவன் சங்கர் ராஜா தொடங்கியுள்ளதாக தெரிவித்துள்ளார். இந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அதில் தெ மெஜிஷ்யியன் ஹாஸ் ஸ்டார்டட் ஹிஸ் வொர்க் என தலைப்பில் பதிவிட்டுள்ளார்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • அந்தகன் வரும் ஆக்ஸ்ட் 15 ஆம் தேதி வெளியாகிறது.
    • சந்தோஷ் நாராயணன் இசையில் அனிருத் மற்றும் விஜய் சேதுபதி இப்பாடலை பாடியுள்ளனர்.

    தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகனாக திகழ்ந்த நடிகர் பிரசாந்த், பின்னர் திரை துறையில் இருந்து சில ஆண்டுகளாக விலகி இருந்தார். தற்போது கம் பேக் கொடுக்கும் வகையில், மீண்டும் படங்களில் நடிக்க தொடங்கியுள்ளார்.

    வெங்கட் பிரபு இயக்கும் கோட் திரைப்படத்தில் விஜய், பிரபுதேவாவுடன் இணைந்து பிரசாந்த் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார்.

    மேலும், நடிகர் பிரசாந்த், 'அந்தகன்' என்ற திரைப்படத்தில் மீண்டும் கதாநாயகனாக நடித்துள்ளார். 2021ம் ஆண்டு முதல் 2022ம் ஆண்டு வரையிலான காலகட்டத்திலேயே எடுத்து முடிக்கப்பட்ட இந்த படம் சில சிக்கல்களால் வெளிவராமல் இருந்த நிலையில் தற்பொழுது வெளியீட்டிற்கு தயாராகியுள்ளது.

    இந்தப்படம் வரும் ஆக்ஸ்ட் 15 ஆம் தேதி வெளியாகிறது.

    இந்நிலையில், 'அந்தகன்' படத்தின் தீம் பாடலை நடிகர் விஜய் வரும் 24ம் தேதி வெளியிடுவார் என படக்குழு ஏற்கனவே அறிவித்திருந்தது.

    அதன்படி, அந்தகன் படத்தின் தீம் பாடலை நடிகர் விஜய் இன்று வெளியிட்டுள்ளார்.

    சந்தோஷ் நாராயணன் இசையில் அனிருத் மற்றும் விஜய் சேதுபதி இப்பாடலை பாடியுள்ளனர்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • கோட் திரைப்படம் வருகிற செப்டம்பர் 5-ந் தேதி திரைக்கு வர இருக்கிறது.
    • தி கோட் படத்தின் வி.எப்.எக்ஸ் பணிகள் லாஸ் ஏஞ்சல்சில் நடந்தது.

    வெங்கட்பிரபு இயக்கத்தில் விஜய் தி கோட் என்ற படத்தில் நடித்து வருகிறார். படத்தில் மீனாட்சி சவுத்ரி, சினேகா, மோகன், பிரசாந்த், பிரபுதேவா உள்பட பலர் நடித்துள்ளனர். யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.

    படத்தின் படப்பிடிப்பு பணிகள் முடிவடைந்து வருகிற செப்டம்பர் 5-ந் தேதி திரைக்கு வர இருக்கிறது.

    விஜய் இந்த படத்தில் மூன்று வேடங்களில் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. படத்தின் 2-வது பாடலான சின்ன சின்ன கண்கள் என்ற பாடல் சமீபத்தில் வெளியாகி பெரிய வரவேற்பை பெற்றது. 

    தி கோட் படத்தின் வி.எப்.எக்ஸ் பணிகள் லாஸ் ஏஞ்சல்சில் நடந்தது. ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள படத்தின் பாடல் வெளியீட்டு விழா வருகிற ஆகஸ்ட் மாதம் பிரமாண்டமாக நடைபெற இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது

    சிங்கப்பூர் அல்லது மலேசியாவில் விழாவை நடத்த படக்குழுவினர் ஆலோசித்து வருகின்றனர். விஜய் தமிழக வெற்றிக்கழகம் என்ற அரசியல் அமைப்பை தொடங்கி கலந்து கொள்ளும் முதல் இசை விழா என்பதால் விழாவில் என்ன பேசப்போகிறார்? என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • `அந்தகன்' திரைப்படம் வரும் ஆக்ஸ்ட் 15 ஆம் தேதி வெளியாகவுள்ளது.
    • சந்தோஷ் நாராயணன் இசையில் அனிருத் மற்றும் விஜய் சேதுபதி இப்பாடலை பாடியுள்ளனர்.

    ஒருகாலத்தில் தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகனாக பிரசாந்த் திகழ்ந்தார். பின்னர் திரை துறையில் இருந்து சில ஆண்டுகளாக விலகி இருந்த அவர் தற்போது மீண்டும் சினிமாக்களில் நடிக்க துவங்கியுள்ளார்.

    தற்போது 'அந்தகன்' என்ற திரைப்படத்தில் மீண்டும் கதாநாயகனாக அவர் நடித்துள்ளார். 2021 முதல் 2022 வரையிலான காலகட்டத்திலேயே எடுத்து முடிக்கப்பட்ட இந்த படம் சில சிக்கல்களால் வெளிவராமல் இருந்த நிலையில் தற்பொழுது வெளியீட்டிற்கு தயாராகியுள்ளது.

    நீண்ட நாட்களாக தள்ளிப்போன `அந்தகன்' திரைப்படம் வரும் ஆக்ஸ்ட் 15 ஆம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது..

    இந்நிலையில், 'அந்தகன்' படத்தின் தீம் பாடலை நடிகர் விஜய் வரும் 24ம் தேதி வெளியிடுவார் என படக்குழு அறிவித்துள்ளது.

    சந்தோஷ் நாராயணன் இசையில் அனிருத் மற்றும் விஜய் சேதுபதி இப்பாடலை பாடியுள்ளனர்.

    வெங்கட் பிரபு இயக்கும் கோட் திரைப்படத்தில் விஜய், பிரபுதேவாவுடன் இணைந்து பிரசாந்த் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • 'அந்தகன்' என்ற திரைப்படத்தில் மீண்டும் கதாநாயகனாக நடித்துள்ளார்.
    • திரைப்படம் வரும் ஆக்ஸ்ட் 15 ஆம் தேதி வெளியாகவுள்ளது.

    வைகாசி பொறந்தாச்சு படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் கதாநாயகனாக அறிமுகமானவர் பிரசாந்த். இவர் 90களின் காலகட்டத்தில் கொடிகட்டிப் பறந்த முன்னணி நடிகர்களில் ஒருவர்.

    நீண்ட இடைவேளைக்குப் பிறகு மீண்டும் திரைப்படங்களில் நடிக்கத்தொடங்கிய பிரசாந்த் , தெலுங்கில் வினய விதய ராமா படத்தில் ராம்சரணுக்கு அண்ணனாக நடித்திருந்தார். அதன்பின் பார்வையற்றவர் கதாபாத்திரத்தில் 'அந்தகன்' என்ற திரைப்படத்தில் மீண்டும் கதாநாயகனாக நடித்துள்ளார். 2021 முதல் 2022 வரையிலான காலகட்டத்திலேயே எடுத்து முடிக்கப்பட்ட இந்த படம் சில சிக்கல்களால் வெளிவராமல் இருந்த நிலையில் தற்பொழுது வெளியீட்டிற்கு தயாராகியுள்ளது.

    திரைப்படம் வரும் ஆக்ஸ்ட் 15 ஆம் தேதி வெளியாகவுள்ளது. நாளை மிகப் பெரிய அறிவிப்பை வெளியிடப்போவதாக படக்குழுவினர் போஸ்டர் ஒன்றை வெளியிட்டுள்ளனர். அதில் நடிகர் விஜய் , பிரசாத் மற்றும் பிரபு தேவா இடம் பெற்றுள்ளனர்.

    படத்தின் முதல் பாடலை நடிகர் விஜய் வெளியிடப்போவதாக தகவல் வெளியாகியுள்ளது. வெங்கட் பிரபு இயக்கும் கோட் திரைப்படத்தில் விஜயுடன் இணைந்து பிரசாந்த் முக்கிய கதாப்பாத்திரத்தில் குறிப்பிடத்தக்கது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • விஜய் நீட் தேர்வுக்கு எதிராகவும் குரல் கொடுத்துள்ளார்.
    • மதுரையில் பிரமாண்ட மாநாட்டை நடத்தவும் விஜய் முடிவு செய்து இருக்கிறார்.

    சென்னை:

    தமிழகத்தில் 2026-ம் ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தல் களம் இப்போதே எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

    தமிழகத்தில் தி.மு.க. தலைமையில் ஒரு கூட்டணியும் அ.தி.மு.க. தலைமையில் இன்னொரு அணியும் செயல்பட்டு வரும் நிலையில் பா.ஜ.க. புதிதாக ஒரு கூட்டணியை ஏற்படுத்தி இருக்கிறது.

    நாம் தமிழர் கட்சி வழக்கம் போல தனித்து போட்டியிடும் நிலையில் தமிழக வெற்றி கழகம் என்ற பெயருடன் நடிகர் விஜய் அரசியலில் குதித்துள்ளார்.

    தேர்தல் களத்தில் வெற்றி பெற வேண்டும் என்கிற எண்ணத்தில் விஜய்யின் ஒவ்வொரு நடவடிக்கைகளும் இருந்து வருகிறது. மாணவ-மாணவிகளுக்கு உதவிகளை செய்வது, தமிழகத்தின் நலன் சார்ந்த செயல்களுக்காக குரல் கொடுப்பது என விஜய்யின் அரசியல் பயணம் திட்டமிட்ட திசையில் சென்று கொண்டிருக்கிறது என்றே கூறலாம்.

    தமிழக தேர்தல் களத்தில் கருணாநிதி, ஜெயலலிதா ஆகிய இரண்டு தலைவர்களும் மரணம் அடைந்த பிறகு கூட்டணி அரசியல் தான் கை கொடுத்து வருகிறது. அந்த வகையில் விஜய்யும் கூட்டணி அரசியலுக்கு தயாராக இருப்பதாகவே தகவல்கள் வெளியாகி உள்ளன. அ.தி.மு.க., நாம் தமிழர் ஆகிய கட்சிகளோடு விஜய் கூட்டணி சேர வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது. அதே நேரத்தில் தனித்து களம் காண விஜய் ஆலோசித்து வருவதாகவும் தெரிகிறது.

    விஜய்யின் அரசியல் பயணம் தமிழக தேர்தல் களத்தில் தி.மு.க. மற்றும் பாஜக ஆகிய கட்சிகளுக்கு எதிராகவே இருக்கும் என்று அரசியல் நோக்கர்கள் கணித்துள்ளனர். மறைந்த தலைவர்களான அம்பேத்கர், பெரியார், காமராஜர் ஆகியோரது கொள்கைகளை பின்பற்றி அரசியல் களத்தில் நடைபோட உள்ள விஜய் பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்கிற திருவள்ளுவரின் வார்த்தைகளையும் பயன்படுத்தியே அரசியல் மேற்கொண்டு வருகிறார்.

    சமூக நீதிக் கொள்கைகள், இரு மொழிக் கொள்கை ஆகியவற்றை முன்னெடுத்து செல்ல முடிவு செய்துள்ள விஜய் நீட் தேர்வுக்கு எதிராகவும் குரல் கொடுத்துள்ளார்.

    கல்வியை தமிழக பட்டியலில் இடம்பெற செய்ய வேண்டும் என்பதும் தமிழக வெற்றி கழகத்தின் கோரிக்கையாக உள்ளது. இப்படி தமிழ் தமிழர்களின் நலன் சார்ந்த பிரச்சனைகளை முன்னிறுத்தி சட்ட மன்றத் தேர்தலை அவர் சந்திக்க இருக்கிறார்.

    ஆன்லைன் மூலமாக தமிழக வெற்றி கழகத்தின் உறுப்பினர்கள் சேர்க்கப்பட்டு வருகிறார்கள். 48 லட்சம் பேர் இதுவரை உறுப்பினர்களாக இணைந்துள்ளனர். அடுத்த கட்டமாக தமிழகம் முழுவதும் பிரமாண்டமான வகையில் பொதுமக்களை சந்திக்கவும் விஜய் திட்டமிட்டுள்ளார்.

    சட்டமன்ற தேர்தலுக்குள் 5 மண்டல மாநாடுகளை நடத்துவதற்கு முடிவு செய்துள்ள விஜய் 10 மாவட்டங்களில் பொதுக் கூட்டங்களை நடத்த உள்ளார். 100 தொகுதிகளில் பாதயாத்திரை மேற் கொள்ளவும் முடிவு செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. மாநிலம் முழுவதும் தனது ரசிகர்கள் மற்றும் கட்சியில் சேரும் இளைஞர்களை ஒருங்கிணைத்து புதிய நிர்வாகிகளை நியமிக்கவும் விஜய் முடிவு செய்திருக்கிறார்.

    2 லட்சம் நிர்வாகிகளை நியமிப்பதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளது. மகளிர் அணி, வக்கீல் அணி, இளைஞரணி என 30 அணிகளை தமிழக வெற்றிக் கழகத்தி்ல் உருவாக்குவதற்கும் விஜய் முடிவு செய்திருக்கிறார்.

    விஜய் நடிப்பில் உருவாகி வரும் 'தி கோட்' திரைப்படம் வருகிற செப்டம்பர் மாதம் வெளியாகிறது. அதன் பிறகு அக்டோபர் மாதத்தில் திருச்சி அல்லது மதுரையில் பிரமாண்ட மாநாட்டை நடத்தவும் விஜய் முடிவு செய்து இருக்கிறார்.

    2026-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலை எதிர் கொள்வது தொடர்பாக பல்வேறு அதிரடியான அறிவிப்புகளை விஜய் வெளியிட உள்ளார். கட்சியின் கொடியையும் அவர் மாநாட்டில் ஏற்ற உள்ளார். இப்படி வருகிற சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்வதற்கு விஜய் அதிரடியாக தயாராகி வருவதால் நிச்சயம் 2026-ம் ஆண்டு நடைபெற உள்ள தேர்தலில் அதிரடி மாற்றங்கள் ஏற்பட வாய்ப்பு இருப்பதாகவும் அரசியல் நோக்கர்கள் கணித்து இருக்கிறார்கள்.

    தேர்தல் களத்தில் கூட்டணி அமைக்கும் சூழல் ஏற்பட்டால் விஜய்யை முதலமைச்சராக ஏற்றுக்கொள்ளும் கட்சியுடன்தான் கூட்டணி என்பதில் தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகள் உறுதியோடு இருக்கிறார்கள். இதனால் நிச்சயம் 2026 -ம் ஆண்டு தேர்தலில் வெற்றி பெற்று விஜய் முதலமைச்சராக ஆவார் என்றும் தமிழக வெற்றிக்கழக நிர்வாகிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

    • தவெக பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் நேற்று தனது பிறந்தநாளை கொண்டாடினார்.
    • தவெக நிர்வாகிகள் அவரது இல்லத்திற்கு சென்று வாழ்த்து தெரிவித்தனர்.

    தமிழக வெற்றிக் கழக கட்சியின் கொடி விரைவில் அறிமுகப்படுத்தப்படும் என அக்கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் தெரிவித்ததாக தகவல் வெளியாகியுள்ளது. தவெக பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் நேற்று (ஜூலை 18) தனது பிறந்தநாளை கொண்டாடினார்.

    இதையொட்டி அவருக்கு வாழ்த்து தெரிவிக்க புதுச்சேரியில் உள்ள அவரது இல்லத்திற்கு தவெக நிர்வாகிகள் நேரில் சென்று வாழ்த்து தெரிவித்துள்ளனர். அப்போது அவர்களிடம் பேசிய புஸ்ஸி ஆனந்த், விரைவில் தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் கொடி அறிமுகம் செய்யப்படும் என்று கூறியதாக தகவல் வெளியாகி உள்ளது.

    • வாரிசு திரைப்படத்தில் நடிகர் விஜய் அந்த அருவிக்கு செல்வது போல பாடல் காட்சி படமாக்கப்பட்டிருக்கும்.
    • இவரை இன்ஸ்டாவில் 2 லட்சத்திற்கும் அதிகமானோர் பின்தொடர்கின்றனர்.

    மகாராஷ்டிராவில் உள்ள கும்பே அருவி இந்தியாவில் உள்ள ஒரு புகழ்பெற்ற கருவியாகும். வாரிசு திரைப்படத்தில் நடிகர் விஜய் அந்த அருவிக்கு செல்வது போல பாடல் காட்சி படமாக்கப்பட்டிருக்கும்.

    அப்போது இந்த அருவி இந்தியாவில் எங்குள்ளது என்று தமிழர்கள் பலரும் இணையத்தில் தேடி பயணம் செய்ய ஆரம்பித்தனர்.

    இந்நிலையில், இந்த கும்பே அருவிக்கு சுற்றுலா சென்ற இன்ஸ்டா பிரபலம் அன்வி காம்தர் (27) ரீல்ஸ் எடுத்துக்கொண்டிருந்தபோது 300 அடி பள்ளத்தில் தவறி விழுந்துள்ளார்.

    இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த மீட்புப்படையினர் 6 மணி நேரம் போராடி அன்வி காம்தரை பலத்த காயங்களுடன் பள்ளத்தில் இருந்து மீட்டுள்ளனர். எனினும் மருத்துவமனை கொண்டு செல்லும் வழியிலேயே அவரின் உயிர் பிரிந்தது.

    பல்வேறு இடங்களுக்கு பயணம் மேற்கொண்டு அதை வீடியோவாக பதிவிடுவதை வழக்கமாகக் கொண்டுள்ள இவரை இன்ஸ்டாவில் 2 லட்சத்திற்கும் அதிகமானோர் பின்தொடர்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    • விபத்துக்கு முன் காரினுள் அந்த இளைஞர்கள் சத்தமாக பாட்டு கேட்டபடி ரீல்ஸ் செய்யும் வீடியோ தற்போது வெளியாகியுள்ளது.
    • விபத்தில் நடைபாதையில் இருந்த இருவர் உயிரிழந்துள்ளனர்.மேலும் 3 பேர் படுகாயமடைந்தனர்.

    மதுபோதையில் சொகுசு கார் ஓட்டி பெரிய புள்ளிகளின் மகன்கள் விபத்து ஏற்படுத்தி உயிரிழப்புகளுக்க்கு காரணமாகும் சமபாவங்கள் இந்தியாவில் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. புனேவில் மதுபோதையில் தொழிலதிபரின் 17 வயது மகன் இயக்கிய போர்ச்சே சொகுசு கார் மோதி 2 இளம் ஐடி ஊழியர்கள் உயிரிழந்தனர்.

    மும்பையில் பாஜக கூட்டணி ஷிண்டே சிவசேனா கட்சியின் முக்கிய தலைவர் ரமேஷ் ஷாவின் மகன் குடிபோதையில் பி.எம்.டபில்யூ காரை இயக்கி ஏற்படுத்திய விபத்தில் நடுத்தர வயது பெண் ஒருவர் உயிரிழந்தார். இந்நிலையில் அதே மகாராஷ்டிர மாநிலம் நாக்பூரில் மதுபோதையில் 19 , 20 வயதுடைய 5 இளைஞர்கள்  சமூக  வலைதளங்களில் பதிவிடுவதற்காக ரீலிஸ் செய்து கொண்டே காரை இயக்கி சாலையோரம் இருந்த வேலி மீது மோதி ஏற்படுத்திய விபத்தில் நடைபாதையில் இருந்த இருவர் உயிரிழந்துள்ளனர். மேலும் 3 பேர் படுகாயமடைந்தனர்.

    ஜூலை 11 அதிகாலை 2.38 மணியளவில் இந்த விபத்து நடந்த்துள்ளது. விபத்துக்கு முன் காரினுள் அந்த இளைஞர்கள் சத்தமாக பாட்டு கேட்டபடி  ரீல்ஸ் செய்யும் வீடியோ தற்போது வெளியாகியுள்ளது. 

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • தற்பொழுது வெங்கட் பிரபு நடிகர் விஜய் நடிப்பில் கோட் திரைப்படத்தை உருவாக்கி வருகிறார்
    • வெங்கட் பிரபு அஜித்தை விடா முயற்சி படப்பிடிப்பு தளமான அஜர்பைஜானில் சந்தித்துள்ளார்.

    2011 ஆம் ஆண்டு வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிகர் அஜித் , திரிஷா, வைபவ், பிரேம்ஜி மற்றும் பலர் நடித்து வெளியானது மங்காத்தா திரைப்படம். இப்படம் அஜித்தின் 50- வது திரைப்படமாகும், இப்படம் மக்களிடையே மிகப் பெரிய வரவேற்பை பெற்று ப்ளாக்பஸ்டர் ஹிட் ஆனது. யுவன் ஷங்கர் ராஜாவின் பின்னணி இசை மிரட்டலாக அமைந்தது.

    தற்பொழுது வெங்கட் பிரபு நடிகர் விஜய் நடிப்பில் கோட் திரைப்படத்தை உருவாக்கி வருகிறார், படப்பிடிப்பு பணிகள் முடிவடைந்த நிலையில். படத்தின் போஸ்ட் ப்ரொடக்ஷன் பணிகள் மிகவும் தீவிரமாக அமெரிக்காவில் நடைபெற்று வருகிறது.

    இந்நிலையில் இயக்குனர் வெங்கட் பிரபு அஜித்தை விடா முயற்சி படப்பிடிப்பு தளமான அஜர்பைஜானில் சந்தித்துள்ளார். அப்பொழுது எடுத்துக்கொண்ட புகைப்படத்தை அவரின் சமூக வலைத்தளப்பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

     

    ரசிகர்கள் அப்புகைப்படத்தை அதிகம் பகிர்ந்து வைரலாக்கி வருகின்றனர். இருவரும் மீண்டும் இணைந்து படத்தில் பணியாற்ற வேண்டும் என கமெண்ட்சில் பதிவிட்டு வருகின்றனர்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
    • தளபதியுடன் 80 நாட்கள் பணிபுரியும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது.

    தமிழ் திரையுலகில் பிரபல நடிகர் விமல். இவர் விஜய் நடித்த கில்லி, குருவி படங்களிலும் அஜித் குமார் நடித்த கிரீடம் படத்திலும் நடித்துள்ளார். இதைத்தொடர்ந்து இயக்குனர் பாண்டிராஜ் இயக்கிய பசங்க திரைப்படத்தில் நடித்தார். இதில் அவரது நடிப்பு விமர்சன ரீதியாக பாராட்டப்பட்டது. பின்னர், இவர் பல குறைந்த பட்ஜெட் தயாரிப்பில் உருவாகும் படங்களில் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்.

    தற்போது போஸ் வெங்கட் தயாரிப்பில் நடிகர் விமல் 'சார்' படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் தமிழக வெற்றிக் கழக இளைஞரணி சார்பில் சென்னையில் நடைப்பெற்ற நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

    அப்போது செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், நான் எனது தம்பிகளுக்காக இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டேன். இவர்கள் என்னை அன்பாக அழைத்தார்கள், அதுமட்டுமின்றி தளபதி அவர்களின் கில்லி படம் மூலம் அறிமுகமானேன். தளபதியுடன் 80 நாட்கள் பணிபுரியும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. அந்த பாசத்திலும், தம்பிகளின் அழைப்பின் பேரிலும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டேன். கட்சியில் இணைவது குறித்து தற்போதைக்கு எந்த யோசனையும் இல்லை.

    பகுஜன் சமாஜ் கட்சி மாநில தலைவர் இறப்பிற்கு எனது ஆழ்ந்த இரங்களையும் அவரது குடும்பத்திற்கு ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.

    • ஆம்ஸ்ட்ராங் படுகொலை செய்யப்பட்ட சம்பவம், பெரும் அதிர்ச்சியையும் வேதனையையும் அளிக்கிறது.
    • குற்றச் சம்பவங்கள் இனி நடைபெறாமல் இருக்கத் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைத் தமிழக அரசு தீவிரமாக முன்னெடுக்க வேண்டும்.

    சென்னை :

    நடிகரும், தமிழக வெற்றிக்கழகத் தலைவருமான விஜய் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில்,

    பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் படுகொலை செய்யப்பட்ட சம்பவம், பெரும் அதிர்ச்சியையும் வேதனையையும் அளிக்கிறது.

    ஆம்ஸ்ட்ராங் அவர்களைப் பிரிந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும் அவரது கட்சியினருக்கும் எனது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

    இது போன்ற கொடும் குற்றச் சம்பவங்கள் இனி நடைபெறாமல் இருக்கத் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைத் தமிழக அரசு தீவிரமாக முன்னெடுக்க வேண்டும். சமரசம் இல்லாமல் சட்டம் ஒழுங்கை நிலைநாட்டி அனைவரது பாதுகாப்பையும் உறுதி செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

    ×