சிங்கப்பெண்கள் மேம்பாட்டு திட்டம்: ரூ.7 ஆயிரம் கோடி கடன் வழங்க முதலமைச்சர் விஜய் முடிவு

இளம்பெண்கள், நலிவடைந்த சமூகத்தினர் தொழில் தொடங்குவதற்காக, தொழில் முனைவோர் கடன்களை வழங்க, கூட்டுறவு துறை முடிவு செய்து உள்ளது.
முதலமைச்சர் விஜய்
முதலமைச்சர் விஜய்
Published on

இளம்பெண்கள், நலிவடைந்த பிரிவினருக்கு ரூ.7 ஆயிரம் கோடி கடன் வழங்கும் அறிவிப்பு வருகிற பட்ஜெட்டில் இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஆலோசனை

தமிழக பட்ஜெட் அடுத்த மாதம் தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில் தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் விஜய் தலைமையில் ஆய்வு கூட்டம் தினமும் நடைபெற்று வருகிறது.

இதில் கூட்டுறவு துறை தொடர்பான ஆய்வுக் கூட்டத்தில், ரேஷன் கடைகள் மேம்பாடு, வீடு தேடி ரேஷன் பொருட்கள் வழங்கும் திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் தொடர்பாக முதலமைச்சர் விஜய் ஆலோசனை நடத்தினார்.

கூட்டுறவு துறை முடிவு

இதனைத் தொடர்ந்து, சுய உதவி குழுக்களுக்கு கடன் வழங்கும் திட்டத்தின் ஒரு பகுதியாக, ‘சிங்கப் பெண்கள் மேம்பாட்டு திட்டம்’ என்ற பெயரில் இளம்பெண்கள், நலிவடைந்த சமூகத்தினர் தொழில் தொடங்குவதற்காக, தொழில் முனைவோர் கடன்களை வழங்க, கூட்டுறவு துறை முடிவு செய்து உள்ளது.

இதற்காக இந்த ஆண்டில் சுய உதவி குழுக்களுக்கு 7 ஆயிரம் கோடி ரூபாய் கடன் வழங்க திட்டமிடப்பட்டு உள்ளது.

இது தொடர்பாக முதலமைச்சரின் அறிவுறுத்தல் படி, சிங்கப்பெண்கள் மேம்பாட்டு திட்டம் என்ற பெயரில் இளம்பெண்கள், நலிவடைந்த பிரிவினருக்கு ரூ.7 ஆயிரம் கோடி கடன் வழங்கும் அறிவிப்பு வருகிற பட்ஜெட்டில் இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கூட்டுறவு துறையின் கீழ் செயல்படும் பல்வேறு கூட்டுறவு வங்கிகள் மற்றும் கூட்டுறவு கடன் சங்கங்களில் பயிர் கடன், நகைக் கடன், சுய உதவிக்குழு கடன், சிறு வணிக கடன் உள்ளிட்ட பல வகையான கடன்கள் தொடர்ந்து வழங்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

X

Maalai Malar
www.maalaimalar.com