search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஏஆர் முருகதாஸ்"

    • விஜயகாந்திற்கு மூச்சு விடுவதில் சிரமம் இருப்பதால் வெண்டிலேட்டர் சிகிச்சை அளிக்கப்பட்டது.
    • இவர் இன்று சிகிச்சை பலனின்றி காலமானார்.

    90-களிம் தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வந்தவர் விஜயகாந்த். தன் நடிப்பின் மூலம் ரசிகர்கள் மனதில் நீங்கா இடம்பிடித்தார். 'கேப்டன்' என்று மக்களால் அன்போடு அழைக்கப்படும் விஜயகாந்த் நடிகராக மட்டுமல்லாமல் மனிதநேயம் மிக்கவராகவும் இருந்தார். மக்கள் பலருக்கு தன்னால் இயன்ற பல உதவிகளை செய்தார். இவர் தேமுதிக கட்சியின் தலைவராகவும் இருந்தார்.


    நடிகர் விஜயகாந்த் நேற்று முன்தினம் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதையடுத்து, இவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. மூச்சு விடுவதில் சிரமம் இருப்பதால் வெண்டிலேட்டர் சிகிச்சை அளிக்கப்பட்டது. தொடர்ந்து, தீவிர சிகிச்சை பெற்று வந்த விஜயகாந்த் இன்று காலமானார். இவரது மறைவிற்கு திரையுலகினர், அரசியல் தலைவர்கள் என பலர் தங்களது இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.


    இந்நிலையில், விஜயகாந்திற்கு இரங்கல் தெரிவித்து இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் சமூக வலைதளத்தில் பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில், "அந்த கம்பீரம், அந்த மனிதநேயம், அந்த நேர்மை, இனி எப்போது காண்போம் கேப்டன், உங்கள் நினைவுக்கும் ,உங்கள் உதவிகளுக்கும் என்றும் மறைவு இல்லை! ஆழ்ந்த கண்ணீர் அஞ்சலி " என்று பதிவிட்டுள்ளார்.

    • ஏ.ஆர்.முருகதாஸ் பல படங்களை இயக்கியுள்ளார்.
    • இவர் இயக்குவதோடு மட்டுமல்லாமல் படங்களையும் தயாரித்தும் வருகிறார்.

    அஜித் நடிப்பில் வெளியான தீனா படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான ஏ.ஆர்.முருகதாஸ். அதன்பின்னர் விஜயகாந்த்தின் ரமணா, சூர்யாவின் கஜினி, 7ஆம் அறிவு, விஜய்யின் துப்பாக்கி, கத்தி, சர்கார், ரஜினியின் தர்பார் உள்ளிட்ட பல படங்களை இயக்கியுள்ளார். இவர் இயக்குவதோடு மட்டுமல்லாமல் படங்களையும் தயாரித்தும் வருகிறார். ஏ.ஆர்.முருகதாஸ், சிவகார்த்திகேயன் நடிக்கும் 23-வது படத்தை இயக்கவுள்ளார். இது தொடர்பான அறிவிப்பு சமீபத்தில் வெளியானது.

    இந்நிலையில், இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் கள்ளக்குறிச்சியில் உள்ள பெருமாள் கோவிலில் தன் மனைவியுடன் சாமி தரிசனம் செய்துள்ளார். இது தொடர்பான புகைப்படம் சமூக வலைதளத்தில் வலம் வருகிறது.

    • சூர்யா நடிப்பில் வெளியான திரைப்படம் ‘ஏழாம் அறிவு’.
    • இப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது.

    கடந்த 2011-ஆம் ஆண்டு சூர்யா நடிப்பில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் உருவான திரைப்படம் 'ஏழாம் அறிவு'. இந்த படத்தில் ஸ்ருதி ஹாசன் கதாநாயகியாக நடித்திருந்தார். உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவன தயாரிப்பில் வெளியான இப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது.


    மேலும், இப்படத்தில் கதாநாயகியான ஸ்ருதி ஹாசன் ஒரு காட்சியில் இட ஒதுக்கீட்டால் திறமை இருப்பவர்களுக்கு வாய்ப்பு பறி போவதாக வசனம் ஒன்று பேசியிருப்பார். இந்த கருத்து அப்போது பெரும் சர்ச்சையாக பேசப்பட்டது.

    இந்நிலையில் உதயநிதி ஸ்டாலின் சமீபத்திய நேர்காணல் ஒன்றில் இது குறித்து பேசியுள்ளார். அவர் பேசியதாவது, "'ஏழாம் அறிவு' படத்தில் இட ஒதுக்கீட்டை விமர்சித்து ஒரு வசனம் இடம்பெற்றிருந்தது. அப்போது எனக்கு அரசியல் புரிதல் இல்லை. படப்பிடிப்பிலும், சீன் பேப்பரிலும் அதனை நான் பார்க்கவில்லை. இதற்காக இயக்குனர் ஏ.ஆர். முருகதாஸை நான் குறை சொல்லவில்லை. அது அவரோட அரசியல் நிலைபாடாக இருக்கலாம். அந்த காட்சி படமாக்கப்பட்ட போது சூர்யாவும் இல்லை.


    டப்பிங்கிலும் இப்படி ஒரு வசனம் இருப்பது சூர்யாவுக்கு தெரியாது. ஆனால், படம் பார்த்துவிட்டு சூர்யா எனக்கு போன் செய்து இட ஒதுக்கீட்டை விமர்சனம் செய்து ஒரு காட்சி வருகிறது, அது வேண்டாம் எடுத்துவிடலாம் என்று கூறினார். ஆனால், நான் சின்ன விஷயம் தான் விட்டு விடுங்கள் என்று கூறினேன். அந்த சமயத்துல என்னோட அரசியல் புரிதல் அவ்வளவு தான் இருந்தது" என்று கூறினார்.

    • தீனா படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான ஏ.ஆர்.முருகதாஸ் பல படங்களை இயக்கியுள்ளார்.
    • இவர் தயாரிப்பில் உருவாகியுள்ள '1947- ஆகஸ்ட் 16' படம் வருகிற ஏப்ரல் 7-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

    அஜித் நடிப்பில் வெளியான தீனா படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான ஏ.ஆர்.முருகதாஸ். அதன்பின்னர் விஜயகாந்த்தின் ரமணா, சூர்யாவின் கஜினி, 7ஆம் அறிவு, விஜய்யின் துப்பாக்கி, கத்தி, சர்கார், ரஜினியின் தர்பார் உள்ளிட்ட பல படங்களை இயக்கியுள்ளார்.

    ஏ.ஆர்.முருகதாஸ்

    இதற்கிடையில் 'ஏ.ஆர் முருகதாஸ் ப்ரொடைக்ஷன்ஸ்' என்ற தயாரிப்பு நிறுவனத்தையும் முருகதாஸ் நடத்தி வருகிறார். இவர் தயாரிப்பில் வெளியான 'எங்கேயும் எப்போதும்', 'ராஜா ராணி', 'மான் கராத்தே', 'ரங்கூன்' போன்ற படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றன.

    தற்போது ஏ.ஆர் முருகதாஸ் தயாரிப்பில் கௌதம் கார்த்திக் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ள படம் '1947- ஆகஸ்ட் 16'. இப்படத்தை ஏ.ஆர்.முருகதாஸிடம் இணை இயக்குனராக பணியாற்றிய என்.எஸ்.பொன்குமார் இயக்கியுள்ளார். அறிமுக நாயகி ரேவதி நடிக்கும் இப்படத்திற்கு ஷான் ரோல்டன் இசையமைத்துள்ளார். இப்படம் வருகிற ஏப்ரல் 7-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இப்படத்தின் புரொமோஷன் பணிகளில் படக்குழு தீவிரமாக ஈடுப்பட்டு வருகிறது.

    ஏ.ஆர்.முருகதாஸ் -கௌதம் கார்த்திக்

    இதையடுத்து சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸிடம் கமலை வைத்து படம் எடுக்க வேண்டும் என்றால் உங்களிடம் சப்ஜெக்ட் இருக்கிறதா..? என்று கேள்வி கேட்கப்பட்டது. இதற்கு அவர் கூறியதாவது, "பொதுவாகவே கமல் என்றால் எனக்கு அப்போது இருந்தே சிறிய பயம் இருக்கும். ஆனால், எல்லா இயக்குனருக்கும் கமலை வைத்து படம் இயக்க வேண்டும் என்ற ஆசை இருக்கும்.

    ஏனென்றால் கமல் சாரை வைத்து படம் இயக்கும் இயக்குனர்களுக்கு அந்த படம் தான் அவர்களது கேரியரில் மிகச்சிறந்த படமாக இருக்கும். திரைத்துறையில் சிறந்த இருபது இயக்குனர்களை எடுத்துக் கொண்டால் அவர்களது கேரியர் பெஸ்ட் பிலிம் கமல் சாரோட படமாகதான் இருக்கனும். இதில் நான் சாதாரண படத்தை எடுத்திவிடக் கூடாது என்ற பயத்தில் தான் இதை செய்யவில்லை" என்று கூறினார்.

    ×