OTT-யில் வெளியாகும் 'மதராஸி'- தேதி அறிவிப்பு

இப்படத்திற்கு அனிருத் இசை அமைத்து இருந்தார். ரசிகர்களிடையே இப்படம் நல்ல வரவேற்பை பெற்றது.
OTT-யில் வெளியாகும் 'மதராஸி'- தேதி அறிவிப்பு
Published on

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான படம் 'மதராஸி'. இப்படத்தில் ருக்மினி வசந்த், வித்யுத் ஜம்வால், விக்ராந்த், பிஜூ மேனன், சார்பட்டா பரம்பரை புகழ் சபீர் உள்பட பலர் நடித்து உள்ளனர். இப்படத்திற்கு அனிருத் இசை அமைத்து இருந்தார்.

வட இந்தியாவில் துப்பாக்கிகளை தயாரித்து சென்னைக்கு கள்ளத்தனமாக கடத்த வில்லன் முயற்சிக்கிறார். இதுகுறித்து தகவலறியும் தேசிய புலனாய்வு அதிகாரிகள் இதனை தடுக்கும் முயற்சி எடுக்கிறார்கள். லஞ்சம், ஊழல் மற்றும் சூழ்ச்சியால் தோல்வியை தழுவுகிறார்கள். ஆனால் நேர்மையான அதிகாரியோ, அநியாயத்தை கண்டு பொங்கும் நாயகனை கொண்டு இதனை தடுக்க நினைக்கிறார். இதனை தெரிந்து கொள்ளும் வில்லன் கும்பல் நாயகனின் காதலியை கடத்த அதன்பின்னர் நாயகன் மற்றும் வில்லனுடைய வாழ்க்கையில் ஏற்படும் நிகழ்வுகள் கொண்டு இப்படம் உருவாக்கப்பட்டது. ரசிகர்களிடையே இப்படம் நல்ல வரவேற்பை பெற்றது.

இந்த நிலையில், 'மதராஸி' திரைப்படம் வருகிற 1-ந்தேதி அமேசான் பிரைமில் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக வருகிற 3-ந்தேதி 'மதராஸி' அமேசானில் வெளியாகும் என தகவல் வெளியான நிலையில், தற்போது 2 நாட்களுக்கு முன்னதாகவே வெளியாவது குறிப்பிடத்தக்கது.

X

Maalai Malar
www.maalaimalar.com