சினிமா

தனுஷ் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் சசிகுமார்

Published On 2018-02-17 09:58 GMT   |   Update On 2018-02-17 10:16 GMT
கவுதம் மேனன் இயக்கத்தில் தனுஷ் நடித்து வரும் எனை நோக்கி பாயும் தோட்டா படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிக்க சசிகுமாருடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. #ENPT #Dhanush
தனுஷ் நடிப்பில் நீண்ட நாட்களாக உருவாகி வரும் படம் எனை நோக்கி பாயும் தோட்டா. 

கவுதம் மேனன் இயக்கும் இந்த படத்தில் தனுஷூக்கு ஜோடியாக மேகா ஆகாஷ் நடிக்கிறார். நடிகர் ராணா டகுபதி, சுனைனா இருவரும் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். இந்நிலையில், சிறப்பு தோற்றத்தில் நடிக்க தற்போது சசிகுமாருடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாக தகவல் வெளியாகி இருக்கிறது. 

கடந்த 2016 மார்ச்சில் தொடங்கிய இந்த படத்தின் படப்பிடிப்பு பாதியில் நிறுத்தப்பட்டது. இதற்கிடையே தனுஷ் பா.பாண்டி, வேலையில்லா பட்டதாரி-2 படங்களை முடித்தார். 



இதற்கிடையே கவுதம் மேனன் அவரது கனவுப் படமான துருவ நட்சத்திரம் படத்தை இயக்க ஆரம்பித்தார். தனுஷூம் அடுத்ததாக வடசென்னை, ஒரு ஹாலிவுட் படம் என மீண்டும் பிசியாகி விட்டார். இதையடுத்து நீண்ட இடைவேளைக்கு பிறகு சமீபத்தில் எனை நோக்கி பாயும் தோட்டா படத்தின் படப்பிடிப்பு துவங்கி சுமார் 10 நாட்கள் தொடர்ந்து நடந்தது. வடசென்னை, எனை நோக்கி பாயும் தோட்டா என ஒரே நேரத்தில் இரு படங்களில் நடித்து வந்தார் தனுஷ். பின்னர் மாரி-2 படத்தில் தற்போது பிசியாக நடித்து வருகிறார். 

எனை நோக்கி பாயும் தோட்டா படத்தில் ஒரு சில காட்சிகள் மட்டுமே படமாக்கப்பட வேண்டி இருப்பதாக கூறப்படும் நி அதேநேரத்தில் படத்தின் போஸ்ட் புரொடக்‌ஷன்ஸ் பணிகளும் தற்போது முழுவீச்சில் நடந்து வருகிறது. படத்தை மே மாதம் ரிலீஸ் செய்ய படக்குழு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. #ENPT #Dhanush


Tags:    

Similar News