சினிமா

நாடகத்திற்கும் பொதுமக்கள் ஆதரவு அளிக்க வேண்டும்: கார்த்தி

Published On 2018-01-22 15:24 GMT   |   Update On 2018-01-22 15:24 GMT
அறந்தாங்கி அருகே நடந்த நாடக நிகழ்ச்சியில் கலந்துக் கொண்ட நடிகர் கார்த்தி, சினிமாவைப் போல நாடகத்திற்கும் பொதுமக்கள் ஆதரவு தர வேண்டும் என்று கூறியிருக்கிறார்.
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே நாடக நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் தென்னிந்திய நடிகர் சங்க பொருளாளரும் நடிகருமான கார்த்தி கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:- 

‘இளைய தலை முறையினர் படித்து முடித்தவுடன் வேலை தேடி வெளிநாடு சென்று வருகின்றனர். பெற்றோர்கள் அதைத்தான் விரும்புகின்றனர். என் தந்தை நடிகர் சிவகுமார் சினிமா தொழில் வேண்டாம். வேறு நல்ல வேலை தேடிக்கொள் என்று கூறினார். ஆனால் நடிப்பு மேல் இருந்த ஆர்வத்தால் நான் சினிமாவிற்கு வந்தேன். 



நடிகர் சங்கத்திற்கான கட்டிட பணி நிறைவடைந்தவுடன் நாடக தொழிலை நவீனப்படுத்தும் முயற்சி மேற்கொள்ளப்படும். நாடகங்களை அனைத்து தரப்பு மக்களும் கண்டு ரசிக்கும் வகையில் தொழில்  நுட்ப யுக்திகள் புகுத்தப்படும். சினிமாவை போன்று நாடகத்திற்கும் பொதுமக்கள் அதிக ஆதரவு அளிக்க வேண்டும்’ என்றார்.
Tags:    

Similar News