சினிமா

கன்னடர்கள் தான் ஆள வேண்டும் என்று கூறவில்லை - பிரகாஷ்ராஜ் விளக்கம்

Published On 2018-01-02 04:12 GMT   |   Update On 2018-01-02 04:46 GMT
கர்நாடகாவை கன்னடர்கள் தான் ஆள வேண்டும் என்று தான் கூறவில்லை என்றும், தகுதி வாய்ந்தவர் யார் வேண்டுமானாலும் எங்கு வேண்டுமானாலும் தலைவராகலாம் என்றே தான் கூறியதாகவும் பிரகாஷ்ராஜ் விளக்கம் அளித்திருக்கிறார். #PrakashRaj
2017-ம் ஆண்டின் சிறந்த நபர் விருது வழங்கும் விழா பெங்களூருவில் நேற்று முன்தினம் நடைபெற்றது. முதல்-மந்திரி சித்தராமையா கலந்துகொண்டு, நடிகர் பிரகாஷ்ராஜூக்கு விருது வழங்கி பேசினார். அதனைத் தொடர்ந்து நடிகர் பிரகாஷ் ரலாஜூம் பேசினார். 

அதில் தான் பேசாதவற்றை பேசியாக கூறி திரித்து விட்டிருப்பதாக பிரகாஷ் ராஜ் விளக்கம் அளித்திருக்கிறார். இதுகுறித்து பிரகாஷ் ராஜ் அவரது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்திருப்பதாவது, 

முதலில் நான் இந்தியன். இந்த நாட்டில் தகுதி வாய்ந்தவர் யார் வேண்டுமானாலும் எங்கு வேண்டுமானாலும் தலைவராகலாம். 
நேற்று முன்தினம் நான் பேசியது குறித்து வகுப்புவாத அரசியலாக்கப்பட்டிருக்கிறது. 



கர்நாடகா, தமிழ்நாடு, ஆந்திரா, தெலங்கானா, கேரளா என நம் நாட்டில் எந்த மாநிலமாக இருந்தாலும், வகுப்பு வாத அரசியல்வாதிகளை வெற்றிபெற விடமாட்டோம் என்றே தான் கூறினேன். ஆனால் தனது பேச்சை திரித்து கூறி, தனக்கெதிராக வெறுப்பை சிலர் தூண்டிவிடுகின்றனர். இதன் மூலம் அவர்களது பயம் மற்றும் விரக்தியை உறுதி செய்திருக்கிறார்கள் என்று தெரிவித்துள்ளார். 

எந்த மாநிலம் ஆனாலும் வகுப்புவாத, பிரித்தாளும் அரசியலுக்கு இடம் தரமாட்டோம். கர்நாடகாவை கன்னடர்கள் தான் ஆள வேண்டும் என்று பிரகாஷ் ராஜ் கூறியதாக நேற்று தகவல் வெளியானது என்பது குறிப்பிடத்தக்கது. #PrakashRaj 

Tags:    

Similar News