சினிமா

பெங்களூரு நடன நிகழ்ச்சியில் கலந்து கொள்ள மாட்டேன்: சன்னி லியோன் திடீர் அறிவிப்பு

Published On 2017-12-22 08:55 GMT   |   Update On 2017-12-22 08:55 GMT
பொதுமக்கள் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் இருப்பதால் பெங்களூருவில் நடைபெறும் புத்தாண்டு நடன நிகழ்ச்சியில் கலந்து கொள்ள மாட்டேன் என்று சன்னி லியோன் கூறினார்.
ஆபாச பட நடிகையான சன்னிலியோன் தமிழில் ‘வடகறி’ என்ற படத்தில் நடனம் ஆடினார். தமிழில் தயாராகும் சரித்திர கதையம்சம் உள்ள படத்தில் கதாநாயகியாக ஒப்பந்தம் செய்யப்பட்டு இருக்கிறார். இந்தி படங்களிலும் நடித்து வருகிறார்.

இந்த நிலையில் புத்தாண்டு தினத்தையொட்டி பெங்களூருவில் உள்ள நட்சத்திர ஓட்டலுக்கு சன்னி லியோனை அழைத்து வந்து நடனம் ஆட வைக்க ஏற்பாடு செய்யப்பட்டது.

இதற்காக அதிக தொகைக்கு டிக்கெட்டுகளும் அச்சிட்டு விற்கப்பட்டன. ரசிகர்கள் போட்டிபோட்டு டிக்கெட் வாங்கினார்கள். ஆனால் சன்னிலியோன் நடன நிகழ்ச்சிக்கு கன்னட அமைப்புகள் திடீர் எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் குதித்தன. சன்னியின் உருவ பொம்மைகளையும் எரித்தனர்.



நிகழ்ச்சியை நடத்துபவர்களுக்கு மிரட்டல்களும் வந்தன. இதைத்தொடர்ந்து சன்னி லியோன் நடனத்துக்கு கர்நாடக அரசு அனுமதி மறுத்தது. நிகழ்ச்சியை ரத்து செய்யுமாறு கர்நாடக உள்துறை அமைச்சர் ராமலிங்க ரெட்டி பெங்களூரு போலீசாருக்கு உத்தரவிட்டார்.

இதற்கு நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்கள் எதிர்ப்பு தெரிவித்து கர்நாடக உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். சன்னி லியோன் நடன நிகழ்ச்சிக்கு அனுமதி அளிக்குமாறு மனுவில் குறிப்பிட்டு இருந்தனர். இந்த நிலையில் சன்னிலியோன் தனது ‘டுவிட்டர்’ பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

“நான் கலந்து கொள்ளும் புத்தாண்டு நிகழ்ச்சியில் எனக்கும் எனது குழுவினருக்கும் பார்வையாளர்களுக்கும் பாதுகாப்பு அளிக்க முடியாது என்று காவல் துறையினர் தெரிவித்து உள்ளனர். பொதுமக்களின் பாதுகாப்பு முக்கியம். எனவே அந்த நடன நிகழ்ச்சியில் நான் கலந்து கொள்ள மாட்டேன். அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.”

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
Tags:    

Similar News