என் மலர்

  நீங்கள் தேடியது "Sunny Leone"

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • பிரபல பாலிவுட் நடிகையான சன்னி லியோன், தமிழ் படங்களிலும் நடித்து வருகிறார்.
  • அவர் தற்போது பதிவிட்டுள்ள வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது.

  ஆபாச படங்களில் நடித்து பிரபலமான சன்னி லியோன் தற்போது இந்தி படங்களில் நடித்து வருகிறார். தமிழில் 'வடகறி' படத்தில் ஒரு பாடலுக்கு நடனம் ஆடியிருந்தார். தற்போது தமிழ், இந்தி, கன்னட மொழிகளில் தயாராகும் வீரமாதேவி என்ற சரித்திர படத்தில் நடித்து வருகிறார். மேலும் பேய்ப்படம் ஒன்றில் காமெடி நடிகர் சதீஷுடன் இணைந்து நடித்து வருகிறார்.

  சன்னி லியோன்

  சன்னி லியோன்


  சமூக வலைத்தளத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் சன்னி லியோன், அவ்வப்போது கவர்ச்சி புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் பதிவிடுவதை வழக்கமாக வைத்துள்ளார். சமீபத்தில் மாலத்தீவுக்கு சுற்றுலா சென்ற சன்னி லியோன் பிகினி உடையில் கவர்ச்சியாக எடுத்துகொண்ட புகைப்படங்களையும் வீடியோக்களையும் பதிவிட்டு இருந்தார்.


  சன்னி லியோன்

  சன்னி லியோன்


  இந்நிலையில், சன்னி லியோன் பதிவிட்டுள்ள வீடியோ ஒன்று சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் நீச்சல் குளம் அருகில் நடந்து வரும் சன்னி லியோனை அவருடைய நண்பர் நீரில் தள்ளி விடுகிறார். இதனால் அவருடைய நண்பரை செருப்பை தூக்கி எறிந்து சன்னி அடிக்கிறார். இந்த வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  தனது உதவியாளரை காப்பாற்ற முடியவில்லையே என்று நடிகை சன்னி லியோன் கண்ணீர் விட்டு அழும் வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது. #SunnyLeone
  நடிகை சன்னி லியோன் பஞ்சாப்பில் பிறந்து அமெரிக்காவில் நடிகையாக புகழ்பெற்றவர். இப்போது இந்தி சினிமாவில் கவர்ச்சி அல்லாத கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்.

  ஆனால் அவரை நீலப்பட நடிகை என்றும் இவரது பழைய தொழிலை வைத்தும் கேலியாக பதிவிட்டு வருகின்றனர். இதுகுறித்து சன்னி லியோன் அவ்வப்போது வருத்தம் தெரிவிப்பார்.

  சமீபத்தில், நடிகர் அர்பாஸ் கான் இந்தியில் தொகுத்து வழங்கும் டிவி நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் சமூகவலைதளத்தில் சன்னி லியோன் பதிவு ஒன்றை பகிர்ந்திருந்தார். அதில், துணை நடிகரும். அவரது உதவியாளருமான ஒருவருக்கு உதவி கோரி பகிரப்பட்டு இருந்தது. ஆனால் அதற்கு எதிர்ப்புகள் எழுந்தன.

  இதுகுறித்து நிகழ்ச்சியில் அவரிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு சன்னி லியோன் கூறியதாவது:-

  அவர் பெயர் பிரபாகர். என்னுடைய உதவியாளராக இருந்து வந்தார். நான் அந்த பதிவிடும் சில மாதங்களுக்கு முன்பே அவருக்கு சிறுநீரக பாதிப்பு இருந்தது. 20 சதவிகிதம் மட்டுமே அவரது சிறுநீரகம் வேலைசெய்து வந்ததால் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்யவேண்டி இருந்தது.

  அவருடைய மருத்துவமனை செலவுகள் அனைத்தையும் நானும், என் கணவரும் பார்த்துக்கொண்டோம். நமது நண்பர் அல்லது நம்முடன் வேலைபார்க்கும் ஒருவர் சாகப்போகிறார் எனத் தெரிந்தும் உதவி செய்யாமல் இருந்தால், அது மிகப்பெரிய மன உளைச்சலை ஏற்படுத்தும்.  பிரபாகரை எனக்கு நன்கு தெரியும். பல ஆண்டுகளாக இந்த துறையில் வேலை பார்த்துவருகிறார். நிறைய பேருக்கு அவரைப் பிடிக்கும். அவருக்கு உதவ வேண்டும் எனக் கேட்டுக்கொண்டது வெறும் மருத்துவமனை கட்டணம் கட்டுவதற்காக அல்ல.

  அவருக்கு என்று தனி குடும்பம் இருந்தது. ஒரு மகன் இருந்தான். அவர்களுக்கு உதவ கோரிக்கை வைத்து தான் உங்களால் முடிந்த உதவிகளைச் செய்யுங்கள் என அதை பதிவிட்டேன்.

  மக்கள் என்ன நினைக்கிறார்கள் என்பதை பற்றி நான் கவலைப்படவில்லை. நான் நூறு மில்லியன் டாலருக்கு சொந்தக்காரி என அவர்கள் நினைப்பது பற்றி சிந்திக்கவில்லை. என்னை பொறுத்தவரை உங்களை மிகவும் நேசிக்கிற அனைவருக்கும், உங்களை கவனித்துக்கொள்ள விரும்பும் அனைவருக்கும் உதவ வேண்டும்.

  பிரபாகர் மிகவும் அமைதியான மனிதர். தான் நோயுற்று இருந்தபோது கூட தனக்காக எந்த உதவியும் அவர் கேட்கவில்லை. அவருக்காக நிறையச் செய்ய வேண்டும் என நினைத்தோம். ஆனால் செய்யவில்லை. நாங்கள் அவரைக் காப்பாற்றத் தவறிவிட்டோம்.

  இதை நினைக்கும்போது உண்மையில் மனது வலிக்கிறது. அவரை நாங்கள் நிறையவே மிஸ் செய்கிறோம்.’

  இவ்வாறு அவர் கூறினார்.

  இதை சொல்லிக் கொண்டிருக்கும்போதே கண்ணீர் விட்டு அழுதார். இந்த வீடியோவைப் பார்த்து பலரும் சன்னி லியோனுக்கு ஆதரவாக கருத்து தெரிவித்து பகிர்ந்து வருகின்றனர். #SunnyLeone

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  பிரபல கவர்ச்சி நடிகை சன்னி லியோனை பாட வைக்க முயற்சி செய்வதாக இசையமைப்பாளர் ஒருவர் கூறியிருக்கிறார். #Sunny #SunnyLeone #Veeramadevi
  மூத்த நடிகை ஜெயசித்ராவின் மகன் அம்ரீஷ் நடிகராக அறிமுகமாகி இசையமைப்பாளராக கலக்கி கொண்டிருப்பவர். கடந்த வாரம் வெளியான சத்ரு, பொட்டு 2 படங்களும் இவர் இசையில் வெளியானவை. அடுத்து திரிஷா, சன்னி லியோன், ஆண்ட்ரியா படங்களுக்கும் இசையமைக்கிறார்.

  தான் இசையமைக்கும் படங்களில் எல்லாம் புதுமையான முயற்சிகளில் ஈடுபடும் அம்ரீஷ் அடுத்து பிரபுதேவாவை யங் மங் சங் படத்தில் பாடலாசிரியராக மாற்றி இருக்கிறார்.

  இது பற்றி அவர் கூறும்போது ‘மொட்ட சிவா கெட்ட சிவா படத்தில் லாரன்சை பாடகராக்கினேன். கா படத்தில் ஆண்ட்ரியாவை ஒரு பாடல் பாட வைத்துள்ளேன். கர்ஜனை, பரமபத விளையாட்டு என திரிஷா நடிக்கும் 2 படங்களுக்கு இசையமைக்கிறேன். திரிஷாவை பாட வைக்க முயற்சி செய்தேன். அவரோ அதற்கான நம்பிக்கை இன்னும் தனக்கு வரவில்லை என்றார்.  சன்னி லியோன் தமிழில் நாயகியாக அறிமுகமாகும் வீரமாதேவி படத்தில் அவரை பாட வைக்க திட்டமிட்டுள்ளேன். நடிப்பதற்கு நிறைய வாய்ப்புகள் வருகின்றன. ஆனால் விருப்பம் இல்லை. இசையில் மட்டும்தான் எனது முழு கவனமும்’. இவ்வாறு அவர் கூறினார்.
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  பீகார் அரசு இணையதளத்தில் பொறியாளர் பணிக்கு விண்ணப்பித்தோர் பட்டியலில் ‘சன்னிலியோன்’ பெயர் இருந்தது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. #SunnyLeone #JuniorEngineer #MeritList
  பாட்னா:

  பீகார் மாநில அரசின் பொது சுகாதார பொறியாளர் துறையில் காலியாக உள்ள 200 இளநிலை பொறியாளர் பணிக்கு விண்ணப்பித்தவர்களின் பட்டியலை அந்த துறை தனது இணையதளத்தில் வெளியிட்டிருந்தது. இதில் அதிக புள்ளிகள் பெற்று முதலிடம் பிடித்த பெயரை பார்த்ததும் விண்ணப்பித்த மற்ற அனைவரும் திகைத்தனர். அது சன்னிலியோன் என்றும் அவரது தந்தை பெயர் லியோனா லியோன் என்றும் இருந்தது.

  பிரபல இந்தி நடிகை சன்னிலியோன். அவர் கனடாவில் பிறந்து அங்கு ஆபாச படங்களில் நடித்து பிரபலமானவர். பின்னர் இந்தி படத்தில் அறிமுகமாகி நடித்துவருகிறார். சிலர் இதுபற்றி துறை மந்திரி வினோத் நாராயண் ஜா கவனத்துக்கு கொண்டுசென்றனர். அவர், இது இறுதி பட்டியல் அல்ல, அவர்களது சான்றிதழ்கள் சரிபார்க்கப்பட்டு இறுதி பட்டியல் பின்னர் வெளியிடப்படும் என்றார்.

  துறை செயலாளர் கூறும்போது, “சன்னிலியோன் யார் என்றே எனக்கு தெரியாது. அதை யாராவது குறும்புத்தனமாக வெளியிட்டிருக்கலாம். விரைவில் இதை சரிசெய்வோம்” என்றார். அதேபோல அந்த பட்டியலில் 2-வது இடம் பிடித்த சக்கரவர்த்தி என்பவரின் தந்தை பெயர் ஓம்புரி என்று இருந்ததும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. #SunnyLeone #JuniorEngineer #MeritList
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  விஷாக் இயக்கத்தில் மம்முட்டி நடிக்கும் மதுர ராஜா படத்தின் மூலம் நடிகர் ஜெய் மலையாளத்தில் அறிமுகமாகிறார். இந்த படத்தில் ஒரு பாடலுக்கு சன்னி லியோன் நடனமாடுகிறார். #MaduraRaja #Mammootty #Jai
  ஜருகண்டி படத்திற்குப் பின் வெங்கட் பிரபு இயக்கத்தில் பார்ட்டி, எல்.சுரேஷ் இயக்கும் நீயா 2 ஆகிய படங்களில் நடித்துள்ள ஜெய் அந்தப் படங்களின் வெளியீட்டை எதிர்பார்த்துள்ளார். அதற்கு முன்பாக அவர் நடித்துள்ள மலையாள திரைப்படம் வெளியாக உள்ளது.

  மலையாளத்தில் மம்முட்டி கதாநாயகனாக நடிக்கும் திரைப்படம் மதுர ராஜா. மோகன்லால் நடித்த புலி முருகன் படத்தை இயக்கிய விஷாக் இந்தப் படத்தை இயக்குகிறார். ஆக்‌‌ஷன் காட்சிகள் நிறைந்த இப்படத்தில் மம்முட்டியுடன் இணைந்து ஜெய் நடிக்கிறார். மம்முட்டியின் தம்பியாக ஜெய் நடிப்பதாக கூறப்படுகிறது.  2010-ம் ஆண்டு மம்முட்டி, பிரித்வி ராஜ் இணைந்து நடித்த போக்கிரி ராஜா திரைப்படத்தின் இரண்டாம் பாகமாக இப்படம் உருவாகிறது. முதல் பாகத்தில் நடித்த பிரித்வி ராஜுக்கு இதில் சிறப்பு தோற்றம் வழங்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் சன்னி லியோன் ஒரு பாடலுக்கு நடனமாடுகிறார். கோபி சுந்தர் இசையமைக்க, ஷாஜி குமார் ஒளிப்பதிவு செய்கிறார். #MaduraRaja #Mammootty #Jai

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  வெங்கட் மோகன் இயக்கத்தில் விஷால் - ராஷி கண்ணா நடிப்பில் உருவாகும் அயோக்யா படத்தில் சன்னி லியோன் ஒரு பாடலுக்கு நடனமாடுகிறார். #Ayogya #Vishal #SunnyLeone
  ‘வீரமாதேவி’ என்ற படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாக இருக்கிறார் சன்னி லியோன். இதனைத் தொடர்ந்து மலையாளத்திலும் ‘ரங்கீலா’ எனும் படத்தின் மூலம் அறிமுகமாக இருக்கிறார். இதன் படப்பிடிப்பு வரும் பிப்ரவரி மாதம் தொடங்க இருக்கிறது. அது மட்டுமல்லாது மம்முட்டி நடிக்கும் ‘மதுரராஜா’ படத்திலும், தமிழில் விஷால் நடிக்கும் ‘அயோக்யா’ படத்திலும் ஒரு பாடலுக்கு மட்டும் நடனமாட இருக்கிறார்.  சன்னி லியோனுக்கு கேரளாவில் அதிக ரசிகர்கள் இருக்கிறார்கள். ஒரு முறை கொச்சிக்கு இவர் வந்திருந்த போது இவரைக் காண இவரது ரசிகர்கள் கூட்டம் அலை மோதியதில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இப்போது மலையாள படத்தில் அவர் நடிக்க ஒப்பந்தமாகி இருப்பதை அறிந்த அவரது ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர். #Ayogya #Vishal #SunnyLeone

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  விஷால் நடிப்பில் உருவாகி வரும் அயோக்யா படத்தில் ஒரு பாடலுக்கு நடனமாட சன்னி லியோன் ஒப்பந்தமாகி இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. #Ayogya #Vishal #SunnyLeone
  இந்தி முன்னணி கதாநாயகர்களும் சன்னிலியோனுடன் சேர்ந்து நடிப்பதை தவிர்க்கிறார்கள். 

  அதையும் மீறி சன்னிலியோன் நடித்துள்ள படங்கள் சர்ச்சைகளில் சிக்கி வருகின்றன. போலீஸ் நிலையங்களிலும் புகார்கள் பதிவாகிறது. கர்நாடகத்தில் சன்னிலியோன் பங்கேற்க இருந்த நடன நிகழ்ச்சிக்கு எதிர்ப்பு கிளம்பியதால் அரசு தடைவிதித்தது. இந்த நிலையில் தமிழ், கன்னடம், இந்தி மொழிகளில் தயாராகும் வீரமாதேவி சரித்திர படத்தில் சன்னிலியோன் கதாநாயகியாக நடித்து வருகிறார்.

  இந்த படத்துக்கு எதிராக கர்நாடகாவில் போராட்டங்கள் நடக்கின்றன. மதுரை கோர்ட்டிலும் வீரமாதேவி படத்தில் சன்னிலியோன் நடிக்க தடை விதிக்க வழக்கு தொடர்ந்தனர். ஆனால் சன்னிலியோன் நடிக்க கோர்ட்டு தடைவிதிக்க மறுத்துவிட்டது. இதனால் வீரமாதேவி படப்பிடிப்பு மீண்டும் விறுவிறுப்பாக நடக்கிறது. வடிவுடையான் இந்த படத்தை டைரக்டு செய்கிறார்.   இந்த நிலையில் அடுத்து விஷாலின் அயோக்கியா படத்துக்கும் சன்னிலியோனை ஒப்பந்தம் செய்து இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. அந்த படத்தில் ஒரு பாடலுக்கு அவர் கவர்ச்சி நடனம் ஆட இருப்பதாக கூறப்படுகிறது. வெங்கட் மோகன் இயக்கும் இந்த படத்தில் ராஷி கண்ணா கதாநாயகியாக நடிக்கிறார். #Ayogya #Vishal #SunnyLeone

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  பிரபல ஆபாச பட நடிகையான சன்னி லியோன் தற்போது தமிழில் நடித்து வரும் படத்திற்கு எதிர்ப்பு கிளம்பி இருக்கிறது. #SunnyLeone #Sunny #VeeramaDevi
  நீலப்பட நடிகையாக அறிமுகமான சன்னி லியோன் தற்போது இந்தியில் பல படங்களில் நடித்து வருகிறார். அவரது பயோபிக்கான கரெஞ்சித் கவுர் முதல் சீசனை தொடர்ந்து இரண்டாவது சீசனிலும் பாராட்டுக்களை குவித்து வருகிறது.

  இதனிடையே இயக்குநர் வி.சி.வடிவுடையான் இயக்கத்தில் உருவாகிவரும் 'வீரமாதேவி' படம் மூலம் முதன்முறையாக தமிழில் நாயகியாக அறிமுகமாகிறார் சன்னி லியோன். சோழ பேரரசர் முதலாம் ராஜேந்திர சோழனின் மனைவி ராணி வீரமாதேவி, சிறந்த போர் வீராங்கனையாக இருந்தவர். இவரது வாழ்க்கை வரலாற்றை, வீரமாதேவி என்ற பெயரில் திரைப்படமாகத் தயாரித்து வருகின்றனர். இதில் வீரமாதேவி வேடத்தில் நடிகை சன்னி லியோன் நடித்துள்ளார்.

  இந்நிலையில், செல்லூரைச் சேர்ந்த சரவணன் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில், ஆபாச படங்களில் நடித்துள்ள சன்னிலியோன், வீரமாதேவி வேடத்தில் நடிக்கத் தடை விதிக்க வேண்டும் என கூறியுள்ளார்.  தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி மொழிகளில் தயாராகும் இந்த படத்தின் படப்பிடிப்புக்குத் தடை விதிக்க வேண்டும் எனவும், சன்னிலியோனை நீக்க வேண்டும் எனவும் மனுவில் கோரிக்கை விடுத்துள்ளார். இந்த மனு மீதான விசாரணை, உயர் நீதிமன்ற மதுரை கிளையில் விரைவில் விசாரணைக்கு வருகிறது.
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  பிரபல ஆபாச பட நடிகையும், பாலிவுட் நடிகையுமான சன்னி லியோன் வழியில் நடிகை ஷகிலா பின் தொடர்கிறார். #SunnyLeone #Shakeela
  தென்னிந்தியத் திரையுலகில் கவர்ச்சி நடிகையாக வலம் வந்த ‌ஷகிலாவின் வாழ்க்கை வரலாற்றை இந்திரஜித் லங்கேஷ் திரைப்படமாக இயக்கி வருகிறார்.

  திரைப்படங்களிலும் தனிப்பட்ட வாழ்விலும் ‌ஷகிலாவின் ஆளுமை குறித்து அறிந்துள்ள அவர் பலரும் அறிந்திராத சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு படத்தை இயக்கிவருகிறார். ‌ஷகிலா வேடத்தில் ரிச்சா நடிக்கிறார்.

  ‌ஷகிலா இந்தப் பட உருவாக்கத்திலும் பங்காற்றுகிறார். படப்பிடிப்பு தளத்தில் தன்னைப் பற்றியும் தனது வீட்டை, சுற்றியுள்ள இடங்கள் குறித்தும் கலை இயக்குநர் குழுவுக்குக் கூறி தத்ரூபமாக படம் வெளிவரப் பணியாற்றி வருகிறார். ரிச்சாவும் ‌ஷகிலாவுடன் நெருங்கிப் பழகி அவரது உடல்மொழி, பேசும் விதம் உள்ளிட்ட நுட்பமான வி‌ஷயங்களைக் கவனித்து தனது நடிப்பில் வெளிப்படுத்துகிறார்.  சிறப்புத் தோற்றத்தில் ‌ஷகிலாவும் சில காட்சிகளில் வரஉள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது. சர்வதேச அளவில் கவர்ச்சி நடிகையாக பிரபலமான சன்னி லியோன் தனது வாழ்க்கை வரலாற்று படத்தில் தானே நடிக்கிறார். அதேபோல் ‌ஷகிலாவும் தனது வாழ்க்கை வரலாற்று படத்தில் தானே நடிக்க இருக்கிறார்.
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  பிரபல ஆபாச பட நடிகையும், பாலிவுட் நடிகையுமான சன்னி லியோனுக்கு கன்னட அமைப்பினர் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தியுள்ளனர். #SunnyLeone
  கர்நாடகாவை ஆண்ட வீரமாதேவி ராணியின் வாழ்க்கையை திரைப்படமாக தமிழ்பட இயக்குனர் வடிவுடையான் இயக்கி வருகிறார். இதில் வீரமாதேவி வேடத்தில் பிரபல பாலிவுட் நடிகை சன்னி லியோன் நடித்து வருகிறார். இந்த படம் தமிழ், கன்னடம், தெலுங்கு உள்ளிட்ட 5 மொழிகளில் வெளியாகிறது.

  இந்த நிலையில் ராணி வீரமாதேவி வேடத்தில் சன்னிலியோன் நடிக்க கன்னட ரக்‌ஷன வேதிகே அமைப்பினர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். அவருக்கு எதிர்ப்பு தெரிவித்த பெங்களூருவில் அனந்தராவ் சதுக்கம், டவுன் ஹால், மைசூர் வங்கி சதுக்கம் ஆகிய இடங்களில் ஆர்ப்பாட்டம் நடத்தினர். அப்போது சன்னி லியோனை கண்டித்து கோ‌ஷம் எழுப்பி அவரது உருவ பொம்மையை எரித்தனர்.  இதுகுறித்து கன்னட அமைப்பின் தலைவர் நாராயண கவுடா கூறியதாவது:-

  வீரமாதேவி வரலாற்று புகழ்மிக்க அரசி. அவரது வாழ்க்கை வரலாறு திரைப்படத்தில் ஆபாச பட நடிகையான சன்னி லியோன் நடிப்பதை ஏற்க முடியாது. கர்நாடகாவை சிறப்பாக ஆட்சி செய்த வீரமாதேவி வேடத்தில் சன்னிலியோன் நடிப்பதன் மூலம் கன்னட மக்களை இழிவுப்படுத்த இயக்குனர் திட்டமிட்டுள்ளார்.

  எனவே இப்படத்தின் படப்பிடிப்பை உடனே நிறுத்த வேண்டும். இந்த வேடத்தில் சன்னிலியோன் நடிக்கக்கூடாது. இல்லையென்றால் வருகிற நவம்பர் 3-ந்தேதி பெங்களூரில் சன்னிலியோன் பங்கேற்கும் நிகழ்ச்சியை நடத்த விடமாட்டோம் என்றார்.
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  தமிழில் வீரமாதேவி என்ற வரலாற்று படத்தில் நடித்து வரும் சன்னி லியோன் வெளியிட்டுள்ள பிகினி புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. #SunnyLeone
  கவர்ச்சி படங்களில் நடித்து பிரபலமானவர் நடிகை சன்னி லியோன். உலகில் அதிகம் தேடப்படும் பிரபலங்கள் பட்டியலில் இடம்பெற்று ரசிகர்கள் கவனத்தையும் ஈர்த்து உள்ளார்.

  தற்போது பாலிவுட் சினமாவில் கவனம் செலுத்தி வரும் சன்னி லியோன், பாலிவுட்டில் தனக்கென்று ஒரு தனி இடத்தையும் பிடித்து வைத்திருக்கிறார். குழந்தை மற்றும் கனவருடன் அமைதியான வாழ்வை நடத்தி வரும் சன்னி லியோனின் வாழ்க்கை வரலாற்றினை இணைய தொடராக ஒளிபரப்பாகி வருகிறது. 

  தமிழ், தெலுங்கு என இரு மொழிகளிலும் உருவாகி வரும் வீரமாதேவி வரலாற்று படத்திலும் நடித்து வருகிறார்.

  இந்த நிலையில் தனது குடும்பத்துடன் மெக்சிக்கோ சென்றுள்ள சன்னி லியோன், தனது சமூக வலைதளத்தில் சில புகைப்படங்களை பகிர்ந்துள்ளார். அந்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அதில் ஒரு புகைப்படத்தில் சன்னி லியோன் பிகினி உடையில் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. #SunnyLeone

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print