சினிமா

26 வருடங்களுக்கு பிறகு இணையும் ரஜினிகாந்த் - மம்முட்டி

Published On 2017-11-27 06:23 GMT   |   Update On 2017-11-27 06:23 GMT
மணிரத்னம் இயக்கத்தில் `தளபதி' படத்தில் இணைந்து நடித்த ரஜினியும், மம்முட்டியும் 26 வருடங்களுக்கு பிறகு மீண்டும் இணையவிருக்கின்றனர்.
1991-ம் ஆண்டு ரஜினியும், மம்முட்டியும் நடித்த `தளபதி' படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. மணிரத்னம் இயக்கத்தில் நட்பை மையப்படுத்தி எடுக்கப்பட்ட இந்த திரைப்படம் மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைந்தது. ரஜினியும், மம்முட்டியும் இந்த படத்தில் இணைபிரியாத நண்பர்களாக வலுவான கேரக்டர்களில் நடித்திருந்தார்கள்.

தமிழக சூப்பர் ஸ்டாரும், கேரளாவின் உச்ச நட்சத்திரமான கேரள சூப்பர் ஸ்டாரும் இணைந்து நடித்த `தளபதி' அப்போது பரபரப்பாக பேசப்பட்டது. அதன்பிறகு அவர்கள் எந்த படத்திலும் சேர்ந்து நடிக்கவில்லை.



26 வருடங்களுக்கு பிறகு இப்போது ஒரு மராத்தி படத்தில் இருவரும் இணைந்து நடிக்கிறார்கள். இந்த படத்தை தீபக் பாவேஷ் இயக்குகிறார். அடுத்த வருடம் பிப்ரவரி மாதம் இதன் படப்பிடிப்பு தொடங்குகிறது. இந்த படத்திற்கு `பஷாயதன்' என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது. தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி, பெங்காலி, ஆங்கிலம் என பல்வேறு மொழிகளில் நடித்த ரஜினிகாந்த் தற்போது தனது சொந்த தாய் மொழியான மராத்தியில் முதல் முறையாக நடிக்கிறார்.

Tags:    

Similar News