சினிமா

கந்துவட்டியை சட்டமும், சினிமாத்துறையும் தடுத்தாக வேண்டும்: கமல்

Published On 2017-11-23 04:20 GMT   |   Update On 2017-11-23 04:20 GMT
கந்துவட்டியால் தற்கொலை செய்து வருபவர்கள் அதிகரித்து வரும் நிலையில், சட்டமும், சினிமாத்துறையும் தடுத்தாக வேண்டும் என்று கமல் டுவிட் செய்துள்ளார்.
சில நாட்களுக்கு முன்பு, நெல்லையில்  கந்துவட்டி கொடுமையால் ஒரு குடும்பத்தை சேர்ந்த நான்கு பேர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் வளாகத்திலேயே தீக்குளித்து உயிரை மாய்த்துக் கொண்டனர். இந்த செய்தி தமிழகமெங்கும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதுபோல், பிரபல பைனான்சியர் அன்புசெழியன் மிரட்டியதன் காரணமாக சசிகுமாரின் உறவினர் அசோக்குமார் சென்னை வளசரவாக்கத்தில் உள்ள அவரது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டர். இதற்கு திரையுலகை சேர்ந்த அனைவரும் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் நடிகர் கமல் கந்துவட்டி குறித்து டுவிட் செய்துள்ளார். அதில், ‘கந்துவட்டிக் கொடுமை எழை விவசாயி முதல் பணக்காரர்கள் என நம்பப்படும் சினிமாக்காரர் வரை ஆட்டிப்படைப்பதை சட்டமும் சினிமாத்துறையும் தடுத்தாக வேண்டும். திரு. அசோக்குமாரின் அகாலமரணம் போல் இனி நிகழவிடக்கூடாது. குடும்பத்தார்க்கும் நட்புக்கும் கலைத்துறையின் அனுதாபங்கள்’ என்று பதிவு செய்திருக்கிறார்.
Tags:    

Similar News