சினிமா

ஓவிய கல்லூரி மாணவர் தற்கொலை: நீதி வேண்டி சத்யராஜ் - பா.ரஞ்சித் ஆர்ப்பாட்டம்

Published On 2017-11-22 06:11 GMT   |   Update On 2017-11-22 06:11 GMT
ஓவிய கல்லூரி மாணவர் தற்கொலை செய்து கொண்டதற்கு நீதி வேண்டி நடிகர் சத்யராஜ் - பா.ரஞ்சித் வருகிற 28-ந்தேதி ஆர்ப்பாட்டம் நடத்த இருக்கின்றனர்.
சென்னை ஓவியக் கல்லூரியில் படித்த வேலூர் மாணவர் பிரகாஷ் சமீபத்தில் தற்கொலை செய்து கொண்டார்.

மாணவர் மதம் மாறியதை ஆசிரியர் கண்டித்ததால் இந்த தற்கொலை நிகழ்ந்துள்ளது. இதற்கு நீதி வேண்டி சென்னையில் கண்டன கூட்டம் நடந்தது. மாணவர் பிரகாஷ் வரைந்த ஓவியங்களின் கண்காட்சியும் நடைபெற்றது.

இதில் தொல்.திருமாவளவன், நடிகர் சத்யராஜ், இயக்குனர்கள் பா.ரஞ்சித், ராஜுமுருகன், வீரபாண்டியன், வேல்முருகன், கொளத்தூர் மணி உள்பட பலர் கலந்து கொண்டனர்.



பின்னர் சத்யராஜ், பா.ரஞ்சித் ஆகியோர் நிருபர்களிடம் கூறியதாவது:-

சென்னை கவின் ஓவிய கல்லூரி மாணவர் பிரகாஷ் மதம் மாறி இருக்கிறார். இந்த மத மாற்றத்தை ஆசிரியர் கண்டித்து இருக்கிறார். இதனால் மனம் உடைந்த பிரகாஷ் கடந்த அக்டோபர் மாதம் 25-ந்தேதி வேலூரில் தற்கொலை செய்து கொண்டார்.

ஆனால் இது தொடர்பாக இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. பிரச்சினை என்றால் மாணவர்கள் உயிரை மாய்த்துக் கொள்ள வேண்டாம். உங்களுக்காக நாங்கள் போராடுவோம். பிரகாஷ் விவகாரத்தில் நீதி கிடைக்க வேண்டும். இல்லை என்றால் வருகிற 28-ந்தேதி வேலூரில் ஆர்ப்பாட்டம் நடத்துவோம்.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

Tags:    

Similar News