என் மலர்

  நீங்கள் தேடியது "student suicide"

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • ஐசக் ஸ்டீபன் தற்கொலைக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.
  • முதல்கட்ட விசாரணையில் ஐசக் ஸ்டீபன் வீட்டில் ஏற்பட்ட பிரச்சினை காரணமாக தூக்குப்போட்டு தற்கொலை செய்து இருப்பது தெரிய வந்துள்ளது.

  நாகர்கோவில்:

  அஞ்சுகிராம் அருகே அழகப்பபுரத்தைச் சேர்ந்தவர் ஆல்பர்ட். இவரது மனைவி சகாய சின்சா.

  இவர்கள் இருவரும் அந்த பகுதியில் உள்ள வலை கம்பெனியில் வேலை பார்த்து வருகிறார்கள். இவர்களுக்கு ஐசக் ஸ்டீபன் (வயது 16), என்ற மகனும் (12) வயதில் ஒரு மகளும் உள்ளனர். ஐசக் ஸ்டீபன் அந்த பகுதியில் உள்ள பள்ளி ஒன்றில் 11-ம் வகுப்பு படித்து வந்தார்.

  நேற்று ஆல்பர்ட், சகாயசின்சா இருவரும் வேலைக்கு சென்றனர். ஐசக் ஸ்டீபன் வீட்டில் பள்ளிக்கு செல்லாமல் இருந்தார். பள்ளிக்குச் சென்ற அவரது சகோதரி நேற்று மாலை வீட்டிற்கு வந்தார். பின்னர் அவரை தனது தாயார் வேலை பார்க்கும் வலை கம்பெனிக்கு அழைத்து சென்று தாயாரிடம் விட்டு விட்டு ஐசக் ஸ்டீபன் வீட்டிற்கு வந்தார். வீட்டில் இருந்த ஐசக் ஸ்டீபன் திடீரென தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

  இதை பார்த்த அவரது உறவினர்கள் அஞ்சுகிராமம் போலீசுக்கும், அவரது பெற்றோருக்கும் தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு இன்ஸ்பெக்டர் சாய்லட்சுமி, சப்-இன்ஸ்பெக்டர் ஜெசி மேனகா தலைமையிலான போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினார்கள். தூக்கில் பிணமாக தொங்கிய ஐசக் ஸ்டீபனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

  ஐசக் ஸ்டீபன் தற்கொலைக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். முதல்கட்ட விசாரணையில் ஐசக் ஸ்டீபன் வீட்டில் ஏற்பட்ட பிரச்சினை காரணமாக தூக்குப்போட்டு தற்கொலை செய்து இருப்பது தெரிய வந்துள்ளது.

  தற்கொலை செய்த ஐசக் ஸ்டீபனின் உடல் பிரேத பரிசோதனை ஆசாரிப்பள்ளம் ஆஸ்பத்திரியில் இன்று நடக்கிறது. இதையடுத்து அவரது உறவினர்கள் ஏராளமானோர் அங்கு திரண்டு இருந்தனர்.

  இதுகுறித்து அஞ்சு கிராமம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். பள்ளி மாணவன் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • அகச்ரா 11-ம் வகுப்பு பாடத்திட்டம் கடினமாக இருப்பதாக தாய் கலைவாணியிடம் கூறி வந்ததாக தெரிகிறது.
  • சரியாக படிக்க முடியாததால் மனவேதனை அடைந்து அவர் தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்று கீழ்ப்பாக்கம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

  சென்னை:

  கீழ்ப்பாக்கம் போலீஸ் குடியிருப்பில் வசித்து வருபவர் கலைவாணி. இவர் புளியந்தோப்பு போக்குவரத்து புலனாய்வு பிரிவில் ஏட்டாக பணியாற்றி வருகிறார்.

  இவரது மகள் அக்சரா (வயது 15) முகப்பேரில் உள்ள தனியார் பள்ளியில் பிளஸ்-1 படித்து வந்தார்.

  கணவரை பிரிந்த கலைவாணி மகளுடன் தங்கி இருந்தார். நேற்று இரவு அம்பத்தூரில் உள்ள சகோதரர் வீட்டுக்கு கலைவாணி சென்றார். வீட்டில் அக்சரா மட்டும் தனியாக இருந்தார்.

  இரவு திரும்பி வந்தபோது வீட்டின் கதவு உள்பக்கமாக மூடப்பட்டு இருப்பதை கண்டு கலைவாணி சந்தேகம் அடைந்தார்.

  அக்கம்பக்கத்தினர் உதவியோடு கதவை உடைத்து உள்ளே சென்ற போது துப்பட்டாவால் மகள் அக்சரா தூக்குப்போட்டு தொங்கிய நிலையில் கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

  உடனடியாக அவரை மீட்டு அருகில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே அக்சரா இறந்து விட்டதாக தெரிவித்தனர். அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் வைக்கப்பட்டு உள்ளது.

  அகச்ரா 11-ம் வகுப்பு பாடத்திட்டம் கடினமாக இருப்பதாக தாய் கலைவாணியிடம் கூறி வந்ததாக தெரிகிறது.

  எனவே சரியாக படிக்க முடியாததால் மனவேதனை அடைந்து அவர் தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்று கீழ்ப்பாக்கம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • சரியாக படிப்பு வராத ஷபீனா சம்பவத்தன்று அதிகாலை வீட்டில் இருந்த எலி பேஸ்ட் (விஷம்) தின்று உள்ளார். மறுநாள் காலையில் ஷபீனா தொடர்ச்சியாக வாந்தி எடுத்தார்.
  • இதுகுறித்து சூரம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

  ஈரோடு:

  ஈரோடு கள்ளுக்கடைமேடு ஜீவானந்தம் வீதியை சேர்ந்தவர் பசீர்அகமது. இவரது மகள் ஷபீனா (16). இவர் கருங்கல்பாளையத்தில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தார்.

  பள்ளியில் நடந்த தேர்வில் மாணவி ஷபீனா மதிப்பெண் குறைவாக பெற்றிருந்தார். இதையடுத்து அவரது பெற்றோர் ஷபீனாவை அடிக்கடி டி.வி. பார்க்காதே என்று கண்டித்தும், நன்றாக படி என்றும் அறிவுரை கூறி வந்தனர்.

  சரியாக படிப்பு வராத ஷபீனா சம்பவத்தன்று அதிகாலை வீட்டில் இருந்த எலி பேஸ்ட் (விஷம்) தின்று உள்ளார். மறுநாள் காலையில் ஷபீனா தொடர்ச்சியாக வாந்தி எடுத்தார். இதையடுத்து அவரது பெற்றோர் மாணவியிடம் கேட்டபோது தான் எலி பேஸ்ட் விஷத்தை சாப்பிட்டு விட்டதாக தெரிவித்தார்.

  இதைக்கேட்டு அதிர்ச்சி அடைந்த பெற்றோர் உடனடியாக ஷபீனாவை மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த மாணவி திடீரென இறந்து விட்டார்.

  இதுகுறித்து சூரம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் ஈரோட்டில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • ரெயில்வே தண்டவாளத்திற்கு சென்ற சதீஷ் அந்த வழியாக சென்ற கோவை எக்ஸ்பிரஸ் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டான்.
  • இதனை பார்த்தவர்கள் உடனடியாக முன்னீர்பள்ளம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அவர்கள் நாகர்கோவில் ரெயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

  நெல்லை:

  நெல்லை மேலப்பாளையத்தை அடுத்த முன்னீர் பள்ளம் அருகே உள்ள மருதம்நகரை சேர்ந்தவர் ஜெகதீஷ். இவர் வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். இவருக்கு மனைவியும், 2 மகன்களும் உள்ளனர்.

  இவரது 2-வது மகன் சதீஷ் (வயது16). இவன் பாளை பஸ் நிலையம் அருகே உள்ள அரசு உதவி பெறும் பள்ளியில் பிளஸ்-1 படித்து வந்தான்.

  இந்நிலையில் இன்று காலை அதே பகுதியில் உள்ள ரெயில்வே தண்டவாளத்திற்கு சென்ற சதீஷ் அந்த வழியாக சென்ற கோவை எக்ஸ்பிரஸ் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டான்.

  இதனை பார்த்தவர்கள் உடனடியாக முன்னீர்பள்ளம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அவர்கள் நாகர்கோவில் ரெயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

  இதையடுத்து நாகர்கோவில் ரெயில்வே போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் குமார்ராஜ் தலைமையில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சதீஷ் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

  விசாரணையில் சதீஷ் அதிகமாக செல்போன் பயன்படுத்தி வந்ததாக கூறப்படுகிறது. இதனால் அவனது பெற்றோர் சதீஷூக்கு செல்போன் கொடுக்காமல் மறைத்து வைத்ததாக கூறப்படுகிறது. இதனால் தற்கொலை செய்திருக்கலாமா? என்ற கோணத்தில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • செல்போன் தொடர்ந்து பார்த்து வந்ததை பெற்றோர் கண்டித்ததால் மாணவி தற்கொலை செய்து கொண்டார்.
  • பள்ளி மாணவி கோபத்தில் பூச்சி மருந்து குடித்து மயக்க நிலையில் இருந்தார்.

  கடலூர்:

  கடலூர் அருகே குறிஞ்சி நகர் சேர்ந்தவர் பாலகிருஷ்ணன். இவரது மகள் அரசு பள்ளியில்ம் 12-ம் வகுப்பு படித்து வந்தார். இவரது மகள் சரியாக படிக்காமலும், வீட்டு வேலை செய்யாமலும், எப்போதும் ெசல்போன் பார்த்துக் கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. இதனால் இவரது பெற்றோர்கள் கண்டித்தனர். இதன் காரணமாக பள்ளி மாணவி கோபத்தில் பூச்சி மருந்து குடித்து மயக்க நிலையில் இருந்தார். இதனை பார்க்க பெற்றோர்கள் அதிர்ச்சி அடைந்து பள்ளி மாணவியை மீட்டு கடலூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அப்போது பள்ளி மாணவிக்கு தொடர் சிகிச்சை அளித்து வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார் இது குறித்து கடலூர் திருப்பாதிரிப்புலியூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • ஊரப்பாக்கத்தில் சரியாக படிக்காததை பெற்றோர் கண்டித்ததால் 9-ம் வகுப்பு மாணவி தற்கொலை செய்து கொண்டார்.
  • இது குறித்து கூடுவாஞ்சேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

  கூடுவாஞ்சேரி:

  ஊரப்பாக்கம் அடுத்த நேதாஜி அய்யஞ்சேரியில் வசித்து வருபவர் நிரஜ் பூசன். இவரது மகள் ஷிவானி தனுக்(வயது14). ஊரப்பாக்கத்தில் உள்ள தனியார் பள்ளியில் 9-ம்வகுப்பு படித்து வந்தார்.

  அவர் சரியாக படிக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதனை பெற்றோர் கண்டித்தனர். இதனால் மனவேதனை அடைந்த மாணவி ஷிவானி தனுக், வீட்டில் இருந்த மாத்திரைகளை அளவுக்கு அதிகமாக தின்று மயங்கி விழுந்தார்.

  இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் அவரை மீட்டு அருகில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி மாணவி ஷிவானி தனுக் பரிதாபமாக இறந்தார்.

  இது குறித்து கூடுவாஞ்சேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • தேர்வில் குறைந்த மதிப்பெண் பெற்றதால் விரக்தி.
  • போலீசார் விசாரணை

  வந்தவாசி:

  வந்தவாசி அடுத்த பழவேரி கிராமத்தைச் சேர்ந்தவர் பிரபு (வயது 37) விவசாயி இவரது மனைவி மலர் (35) இவர்களுக்கு அன்பரசன் (18) என்ற மகன் உள்ளார். அன்பரசன் தெய்யார் அரசினர் மேல்நிலைப் பள்ளியில் இந்த நிலையில் பிளஸ்-2 தேர்வில் தேர்ச்சி பெற்று 285 மதிப்பெண்கள் பெற்ற நிலையில் அன்பரசன் டிசி மற்றும் மார்க் சீட் வாங்குவதற்கு கடந்த 1-ந் தேதி அன்று பள்ளிக்குச் சென்று விட்டு மாலையில் வீடு திரும்பினர்.

  தாயார் அன்பரசனை கண்டித்ததாக கூறப்படுகிறது. இதில் மன வேதனை அடைந்த அன்பரசன் வீட்டிலிருந்த 3 லிட்டர் மண் எண்ணெயை எடுத்துக் கொண்டு வீட்டின் மாடிக்குச் சென்று உடலில் தனக்குத்தானே தீ வைத்துக் கொண்டார்.

  அவரது அலறல் சத்தம் கேட்ட பெற்றோர் மற்றும் அக்கம் பக்கத்தினர் உடனடியாக அன்பரசனை மீட்டு சிகிச்சைக்காக சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி அன்பரசன் நேற்று முன்தினம் பரிதாபமாக உயிரிழந்தார்.

  இது குறித்து தெள்ளார் போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • மது பிரசாத் நாகர்கோவிலில் உள்ள அரசு பள்ளி ஒன்றில் பத்தாம் வகுப்பு படித்து வந்தார். மது பிரசாத்தை தாயார் டியூசனுக்கு செல்லுமாறு கூறியதாக கூறப்படுகிறது.
  • ஆனால் அவர் மறுப்பு தெரிவித்து டியூசனுக்கு செல்லாததால் தாயார் அவரை கண்டித்துள்ளார்.

  நாகர்கோவில்:

  நாகர்கோவில் கோட்டார் டிவிடி காலனி பகுதியைச் சேர்ந்தவர் பத்மநாபன். இவரது மனைவி பானு. இவர்களுக்கு மது பிரசாத் வயது 15 என்ற மகனும் ஒரு மகளும் உள்ளனர்.

  பத்மநாபன் தஞ்சாவூரில் உள்ள ஓட்டல் ஒன்றில் தங்கி வேலை பார்த்து வருகிறார். வீட்டில் பானு அவரது மகன் மற்றும் மகளும் இருந்தனர்.

  மது பிரசாத் நாகர்கோவிலில் உள்ள அரசு பள்ளி ஒன்றில் பத்தாம் வகுப்பு படித்து வந்தார். மது பிரசாத்தை தாயார் டியூசனுக்கு செல்லுமாறு கூறியதாக கூறப்படுகிறது. ஆனால் அவர் மறுப்பு தெரிவித்து டியூசனுக்கு செல்லாததால் தாயார் அவரை கண்டித்துள்ளார்.

  தாயார் கண்டித்ததால் மது பிரசாத் மனமுடைந்து காணப்பட்டார். நேற்று இரவு வழக்கம்போல் இரவு தூங்க சென்றார். இன்று அதிகாலையில் அவரது அறையின் கதவு திறக்கப்படவில்லை. இதையடுத்து அவரது அறை கதவை திறந்து பார்த்தபோது மது பிரசாத் தூக்கில் பிணமாக தொங்கினார்.

  இதை பார்த்து அவரது தாயார் மற்றும் சகோதரி கூச்சலிட்டனர். இதையடுத்து அக்கம் பக்கத்தினர் அங்கு வந்தனர். பின்னர் கோட்டார் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தூக்கில் பிணமாக தொங்கிய மது பிரசாத் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

  இதுகுறித்து கோட்டார் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். பள்ளி மாணவன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • பள்ளிக்கு செல்ல மாட்டேன் என்று சிறுமி சோனியா கூறியுள்ளார். இதனால் பெற்றோர் சிறுமியை கண்டித்ததாக கூறப்படுகிறது.
  • இதனால் மன உளைச்சலில் இருந்த சிறுமி சோனியா வீட்டில் இருந்த கரப்பான் பூச்சி மருந்தை எடுத்து குடித்தார்.

  திருவொற்றியூர்:

  எண்ணூர் காட்டுக்குப்பம் பகுதியைச் சேர்ந்தவர் சதீஷ்குமார். லாரி டிரைவராக வேலை செய்து வருகிறார். இவரது மகள் சோனியா (வயது 11). ராயபுரத்தில் உள்ள தனியார் பள்ளியில் 7-ம் வகுப்பு படித்து வந்தார்.

  இந்த நிலையில் பள்ளிக்கு செல்ல மாட்டேன் என்று சிறுமி சோனியா கூறியுள்ளார். இதனால் பெற்றோர் சிறுமியை கண்டித்ததாக கூறப்படுகிறது. இதனால் மன உளைச்சலில் இருந்த சிறுமி சோனியா வீட்டில் இருந்த கரப்பான் பூச்சி மருந்தை எடுத்து குடித்தார். மயங்கி விழுந்த அவரை பெற்றோர் மீட்டு உடனடியாக எழும்பூரில் உள்ள குழந்தைகள் நல மருத்துவமனையில் அனுமதித்தனர்.

  ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி சிறுமி சோனியா பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து எண்ணூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • தேர்வு தோல்வி பயத்தில் இருந்த ஜானகிராமன் நேற்று மாலை தனது வீட்டின் அருகே உள்ள புளியமரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
  • இது குறித்து தகவல் அறிந்ததும் மப்பேடு சப்-இன்ஸ்பெக்டர் இளங்கோ மற்றும் போலீசார் விரைந்து வந்து உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

  திருவள்ளூர்:

  திருவள்ளூரை அடுத்த மப்பேடு அருகே உள்ள கொட்டையூர் கிராமத்தை சேர்ந்தவர் பரந்தாமன். இவரது மகன் ஜானகிராமன் (வயது 17). பேரம்பாக்கத்தில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் 11-ம் வகுப்பு படித்து வந்தார். இவருக்கு படிப்பு சரியாக வரவில்லை என்று கூறப்படுகிறது.

  பிளஸ்-1 தேர்வு முடிவுக்காக காத்திருந்தார். இந்த நிலையில் தேர்வு தோல்வி பயத்தில் இருந்த ஜானகிராமன் நேற்று மாலை தனது வீட்டின் அருகே உள்ள புளியமரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

  இது குறித்து தகவல் அறிந்ததும் மப்பேடு சப்-இன்ஸ்பெக்டர் இளங்கோ மற்றும் போலீசார் விரைந்து வந்து உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வழக்குப்பதிவு செய்து மாணவனின் தற்கொலை முடிவுக்கு வேறு ஏதேனும் காரணம் உள்ளதா? என்று விசாரணை நடத்தி வருகிறார்கள்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • தேர்வில் தேர்ச்சி பெறாததால் விபரீதம்
  • போலீசார் விசாரணை

  கண்ணமங்கலம்:

  கண்ணமங்கலம் அருகே உள்ள கொளத்தூர் பகுதியை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி இவரது மகன் பிரசாந்த் (வயது 17). தனியார் பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தார். பிளஸ் 2 தேர்வு முடிவுகள் நேற்று முன்தினம் வெளிவந்தன. இதில் பிரசாந்த் தேர்ச்சி பெறவில்லை. இதனால் மன வேதனையில் காணப்பட்டார்.

  சம்பவத்தன்று வீட்டில் உள்ள பேனில் தூக்குபோட்டு தொங்கிய நிலையில் கிடந்தார். கண்ட அவரது உறவினர்கள் பிரசாந்தை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

  அப்போது அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள் பிரசாந்த் வரும் வழியிலேயே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இச்சம்பவம் குறித்து கண்ணமங்கலம் போலீசில் கிருஷ்ணமூர்த்தி புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo