சினிமா

பிராமணர்கள் அல்லா அர்ச்சகர்கள் நியமனம்: கமல்ஹாசன் டுவிட்டரில் கருத்து

Published On 2017-10-09 04:19 GMT   |   Update On 2017-10-09 04:19 GMT
திருவாங்கூர் தேவஸ்தான அர்ச்சகர்கள் நியமனம் குறித்து கேரள முதல்வருக்கு நடிகர் கமல்ஹாசன் டுவிட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
முக்கிய பிரச்சனைகள் குறித்து சமூக வலைதளத்தில் கருத்துக்களை தெரிவித்து வரும் நடிகர் கமல்ஹாசன், அவரது டுவிட்டர் பக்கத்தில் இன்று கருத்து ஒன்றை வெளியிட்டிருக்கிறார். அதில் அவர் கூறியிருப்பதாவது,

`திருவாங்கூர் தேவஸ்தானத்தில் பிராமணர் அல்லாத அர்சகர்கள் நியமனம். நன்றி கேரள முதல்வருக்கும் தேவஸ்தானத்துக்கும். வைக்கம் வீரர்க்கு வணக்கம்.'

இவ்வாறு கூறியிருக்கிறார்.

திருவாங்கூர் தேவஸ்தானத்தில் 36 பிராமணர்கள் அல்லாத அர்ச்சகர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளதற்கு கேரள முதல்-மந்திரி பினராயி விஜயனுக்கும், திருவாங்கூர் தேவஸ்மானத்திற்கும் வாழ்த்து தெரிவித்து தலைவணங்குவதாக கூறியிருக்கிறார். மேலும் பெரியாரின் கனவை உணர முடிகிறது என்றும் கூறியிருக்கிறார்.

கமல்ஹாசன் சமீபத்தில் கேரள முதல்-மந்திரி பினராயி விஜயனை சமீபத்தில் கேரளாவில் சந்தித்தார். அப்பாேது தனது அரசியல் பிரவேசம் குறித்து பினராயி விஜயனிடம் அறிவுரைகளை கேட்டறிந்ததாக கூறப்படுகிறது.

Tags:    

Similar News