சினிமா

நடிகர் கமல்ஹாசன் அரசியலுக்கு வருவதை வரவேற்கிறேன்: நடிகை கவுதமி பேட்டி

Published On 2017-10-07 09:49 GMT   |   Update On 2017-10-07 09:49 GMT
நடிகர் கமல்ஹாசன் அரசியலுக்கு வருவதை வரவேற்பதாக நடிகை கவுதமி நாமக்கல்லில் பேட்டி அளித்துள்ளார்.
நாமக்கல் தாலுகா லாரி உரிமையாளர்கள் சங்கம் மற்றும் எவர்கிரீன் சிட்டி ரோட்டரி சங்கம், லைப் அகேய்ன் புற்றுநோய் மறுவாழ்வு மையம் ஆகியவை சார்பில் பொதுநல மருத்துவ முகாம் இன்று நாமக்கல்லில் நடந்தது.

இந்த முகாமை நடிகை கவுதமி தொடங்கி வைத்தார். அதன் பிறகு நடிகை கவுதமி நிருபர்களிடம் கூறியதாவது:-

புற்று நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்காக நான் தனியாக ஒரு அமைப்பை நடத்தி வருகிறேன். இந்த அமைப்போடு இணைந்து இன்று மருத்துவ முகாம் நாமக்கல்லில் இன்று நடத்தப்பட்டுள்ளது.

இந்த முகாமில் பங்கேற்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்.

இவ்வாறு அவர் கூறினார். அதன்பிறகு அவரிடம் கேட்கப்பட்ட கேள்விகளும், அதற்கு அவர் அளித்த பதில்களும் வருமாறு:



கே: நடிகர் கமலஹாசன் அரசியலுக்கு வருவது பற்றி உங்கள் கருத்து என்ன?

ப: இந்த தலைமுறைக்கு அரசியலுக்கு யார் வந்தால் சரியாக இருக்குமோ? அவர்களுக்கு நான் உள்பட அனைவரும் ஆதரவாக இருப்போம். அவர் அரசியலுக்கு வருவதை நான் வரவேற்கிறேன்.

கே: ஜெயலலிதா மரணம் குறித்து விசாரணை நடத்த வேண்டும் என்று பிரதமருக்கு நீங்கள் கடிதம் எழுதி இருந்தீர்களே?

ப: தெளிவான முடிவை மக்களுக்கு புரியும்படி அறிவித்து விசாரணை ஆணையத்தின் விசாரணை அமையவேண்டும்.

கே: டெங்கு காய்ச்சலால் அதிக உயிரிழப்பு ஏற்படுகிறதே?

ப: மனித உயிர்கள் பலியாவது தவிர்க்கப்பட வேண்டிய கட்டாயம் தற்போது உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.
Tags:    

Similar News