சினிமா

கமல் பாராட்டிய சுதந்திரதின விழா

Published On 2017-08-16 05:31 GMT   |   Update On 2017-08-16 05:31 GMT
இந்தியாவின் 71-வது சுதந்திர தினம் நேற்று கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இந்நிலையில், அசாம் மாநிலத்தில் வெள்ளத்தின் நடுவே நடைபெற்ற சுதந்திர விழாவை நடிகர் கமல்ஹாசன் பாராட்டி உள்ளார்.
அசாம் மாநிலம் முப்தி மாவட்டம் கனமழையால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இந்த மாவட்டத்தில் சார்பிநோஸ்கரா என்ற இடத்தில் இருக்கும் பள்ளியில் நேற்று சுதந்திர தினத்தையொட்டி கொடியேற்ற திட்டமிட்டு இருந்தனர்.

ஆனால் பள்ளிக்குள் வெள்ளம் புகுந்தது. என்றாலும் அதைபொருட்படுத்தாமல் இடுப்பளவு வெள்ளத்தில் பள்ளிக்கு சென்ற ஆசிரியர் மிஷானூர் ரகுமான் தேசிய கொடி ஏற்றி மரியாதை செலுத்தினார். அவருடன் மற்றொரு ஆசிரியரும், கழுத்தளவு தண்ணீரில் நின்றபடி 2 மாணவர்களும் கொடிக்கு மரியாதை செலுத்தினர். இந்த புகைப்படம் தற்போது இணையதளத்தில் வேகமாக பரவி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உணர்ச்சி பூர்வமான இந்த படத்தை கமல்ஹாசன் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். பள்ளி ஆசிரியரின் தேசப்பற்றை பாராட்டியுள்ளார்.
Tags:    

Similar News