சினிமா

வருகிற 7-ஆம் தேதி அஜித் ரசிகர்களுக்கு காத்திருக்கும் சர்ப்ரைஸ்

Published On 2017-08-04 05:44 GMT   |   Update On 2017-08-04 05:45 GMT
`விவேகம்' படத்தின் ரிலீசுக்கு முன்பாக தல அஜித் ரசிகர்களுக்கு விருந்தளிக்க `விவேகம்' படக்குழு முடிவு செய்திருக்கிறது.
சிவா இயக்கத்தில் தல அஜித், காஜல் அகர்வால் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகியிருக்கும் படம் 'விவேகம்'. சமீபத்தில் வெளியாகிய இப்படத்தின் டீசர் இந்திய சினிமாவில் புதிய சாதனையை படைத்தது.

சத்யஜோதி பிலிம்ஸ் தயாரித்துள்ள இப்படம் வருகிற ஆகஸ்ட் 24-ஆம் தேதி ரிலீசாகிறது. ஏற்கனவே படத்தில் இருந்து மூன்று பாடல்கள் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ள நிலையில், படம் ரீலீசுக்கு முன்பாக ரசிகர்களுக்கு விருந்தளிக்கும் விதமாக பாடல் வெளியீட்டு விழாவை நடத்த படக்குழு திட்டமிட்டிருப்பதாக கூறப்படுகிறது. அதன்படி வருகிற 7-ஆம் தேதி பாடல் வெளியீட்டு விழா நடைபெறும் என்றும் கூறப்படுகிறது.



இசை வெளியீட்டு முன்னதாக படத்தில் இடம்பெறும் 7 பாடல்களுக்கான ப்ரிவ்யூ வீடியோ ஒன்றையும் படக்குழு வெளியிட்டிருக்கிறது. சமூக வலைதளங்களில் இந்த ப்ரிவ்யூ வீடியோ வைரலாக பரவி வருகிறது. "ஏ.கே. தீம் மியூசிக்", "நெவர் கிவ் அப்", "காதலடா ரிப்ரைஸ்", "வெறியேற", "காதலாட", "தலை விடுதலை", "சர்வைவா" உள்ளிட்ட 7 பாடல்கள் படத்தில் இடம்பெறுகின்றன.

அக்ஷரா ஹாசன், பாலிவுட் நடிகர் விவேக் ஓபராய், ஆரவ் சவுத்ரி, கருணாகரன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கின்றனர்.
Tags:    

Similar News