சினிமா

ஐக்கிய நாடு சபையில் திமிரும் ‘ஜல்லிக்கட்டு’ படம்

Published On 2017-07-14 12:21 GMT   |   Update On 2017-07-14 12:21 GMT
சென்னை மெரினாவில் பெரும் புரட்சியை ஏற்படுத்திய ஜல்லிக்கட்டு போராட்டம் ‘ஜல்லிக்கட்டு’ என்ற பெயரில் படமாக தயாராகி இருக்கிறது. இதன் முன்னோட்டம் ஐக்கிய நாடு சபையில் வெளியிடப்படுகிறது.
ஜனவரி 5-ந்தேதி முதல் 23-ந்தேதி வரை தமிழ்நாட்டில் நடந்த ஜல்லிக்கட்டு போராட்டம் உலகையே திரும்பி பார்க்க வைத்தது. சென்னை மெரினாவில் பெரும் புரட்சியை ஏற்படுத்திய போராட்டமாக எழுச்சி பெற்றது. எந்த கட்சி சார்பும், அரசியல் கலப்பும் இல்லாமல் நடந்த இந்த போராட்டம் ‘ஜல்லிக்கட்டு’ என்ற பெயரில் படமாக தயாராகி இருக்கிறது.

சந்தோஷ் இயக்கும் இந்த படத்தை அஸ்மிதா புரொடக்‌ஷன் சார்பில் சிங்கப்பூரை சேர்ந்த நிருபாமா, குருசரவணன் ஆகியோர் தயாரித்துள்ளனர். வாஷிங்டனை சேர்ந்த ஜெயபால் இணைந்து தயாரித்திருக்கிறார். சு.கா.பூபதி ஒளிப்பதிவு செய்கிறார். ரமேஷ் விநாயகம் இசை அமைக்கிறார். காசி விஸ்வநாதன் படத்தொகுப்பு செய்கிறார். மேலும் பலர் தொழில் நுட்பபணியில் ஈடுபடுகிறார்கள். ‘ஜல்லிக்கட்டு’ படத்தின் முதல் போஸ்டர் வாஷிங்டனில் வெளியிடப்பட்டது.

‘ஜல்லிக்கட்டு’ படத்தின் முன்னோட்டம் நைரோபியில் நடக்கும் ஐக்கிய நாடுகள் இளைஞர் அணி மாநாட்டில் வெளியிடப்படுகிறது. இதில் இயக்குனர் சந்தோஷ், தயாரிப்பாளர் அனுபமா பங்கேற்கிறார்கள்.
Tags:    

Similar News