ஆட்டோமொபைல்
சி.எஃப். மோட்டோ வாகனங்கள்

விரைவில் இந்தியா வரும் நான்கு சி.எஃப். மோட்டோ வாகனங்கள்

Published On 2019-06-28 10:18 GMT   |   Update On 2019-06-28 10:18 GMT
சி.எஃப். மோட்டோ நிறுவனத்தின் நான்கு புதிய மோட்டார்சைக்கிள்கள் விரைவில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட இருக்கின்றன.



சி.எஃப். மோட்டோ நிறுவனம் விரைவில் இந்தியாவில் தனது வாகனங்களை அறிமுகம் செய்ய இருக்கிறது. இந்தியாவில் சி.எஃப். மோட்டோவின் முகற்கட்ட வாகனங்கள் ஜூலை 4 ஆம் தேதி அறிமுகமாகும் என தெரிவித்துள்ளது.

சி.எஃப். மோட்டோ நிறுவனம் இந்தியாவில் 300 என்.கே., 650 ஜி.டி., 650 என்.கே., 650 எம்.டி. உள்ளிட்ட மாடல்களை அறிமுகம் செய்கிறது. சர்வதேச சந்தையில் சி.எஃப். மோட்டோ நிறுவனம் 125சிசி மற்றும் 250சிசி மோட்டார்சைக்கிள்களை விற்பனை செய்து வருகிறது.



இந்நிலையில், சி.எஃப். மோட்டோ நிறுவனம் இந்தியாவில் 300 சிசி வாகனங்களை அறிமுகம் செய்ய இருக்கிறது. 650சிசி மோட்டார்சைக்கிளும் ஒரே பிளாட்ஃபார்மில் உருவாக்கப்பட்டுள்ளது. எனினும், இவற்றின் தோற்றம் மாற்றப்பட்டு நேக்கட், அட்வென்ச்சர் டூரர் மற்றும் ஸ்போர்ட் டூரர் வடிவமைப்பில் வெளியாகிறது.

இது கவாசகியின் 650சிசி மாடல்களான இசட்650, வெர்சிஸ் 650 மற்றும் நிஞ்சா 650 போன்றிருக்கிறது. சி.எஃப். மோட்டோ நிறுவனம்  தனது வாகனங்களின் உதிரி பாகங்களை இந்தியாவிற்கு இறக்குமதி செய்து சி.கே.டி. முறையில் விற்பனை செய்கிறது. இதனால் இதன் விலை போட்டியை ஏற்படுத்தும் விதமாக நிர்ணயிக்கப்படலாம்.
Tags:    

Similar News