ஆட்டோமொபைல்
பென்லி லியோன்சினோ 250

இந்தியாவில் பென்லி லியோன்சினோ 250 அறிமுகம்

Published On 2019-10-08 08:21 GMT   |   Update On 2019-10-08 08:21 GMT
இத்தாலி நாட்டு மோட்டார்சைக்கிள் நிறுவனமான பென்லி இந்தியாவில் லியோன்சினோ 250 மோட்டார்சைக்கிளை அறிமுகம் செய்துள்ளது.



இத்தாலி நாட்டு மோட்டார்சைக்கிள் விற்பனை நிறுவனமான பென்லி லியோன்சினோ 250 மோட்டார்சைக்கிளை அறிமுகம் செய்துள்ளது. இது பென்லி லியோன்சினோ 500 மாடலின் இளம் வேரியண்ட் ஆகும். லியோன்சினோ 250 மாடலை வாங்குவோர் ரூ. 6000 கட்டணம் செலுத்தி ஆன்லைனில் முன்பதிவு செய்து கொள்ளலாம்.

புதிய பென்லி லியோன்சினோ 250 மாடலில் 249சிசி சிங்கிள் சிலிண்டர், 4 ஸ்டிரோக், லிக்விட் கூல்டு என்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இந்த என்ஜின் 25.4 பி.ஹெச்.பி. பவர், 21 என்.எம். டார்க் செயல்திறன் மற்றும் 6-ஸ்பீடு டிரான்ஸ்மிஷன் கொண்டிருக்கிறது.

வடிவமைப்பை பொருத்தவரை பென்லி லியோன்சினோ 250 மாடலில் ஸ்டீல் டியூப் டிரெலிஸ் ஃபிரேம், பிளாக்டு-அவுட் என்ஜின் மற்றும் ரேடியேட்டர் வழங்கப்பட்டிருக்கின்றன. இத்துடன் பெரிய மஃப்ளர், டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கன்சோலும் வழங்கப்பட்டுள்ளன.



பென்லி லியோன்சினோ 250 மாடலின் முன்புறம் 41 எம்.எம். அப்சைடு-டவுன் ஃபோர்க், பின்புறம் அட்ஜஸ்ட் செய்யக்கூடிய மோனோ ஷாக் சஸ்பென்ஷன் வழங்கப்பட்டுள்ளது. இந்த மோட்டார்சைக்கிளின் இருபுறங்களிலும் 17-இன்ச் அலாய் வீல்கள் வழங்கப்பட்டுள்ளன. இவற்றின் முன்புறம் 110/70-R17 டையரும், பின்புறம் 150/60-R17 டையர்கள் வழங்கப்பட்டுள்ளன.

பிரேக்கிங்கிற்கு முன்புறம் 280 எம்.எம். ஃபுளோட்டிங் டிஸ்க், 4-பிஸ்டன் கேலிப்பர் வழங்கப்பட்டுள்ளன, பின்புறம் 240 எம்.எம். ஒற்றை பிஸ்டன், ஃபுளோட்டிங் கேலிப்பர்கள் வழங்கப்பட்டுள்ளன. இத்துடன் டூயல் சேனல் ஏ.பி.எஸ். வழங்கப்பட்டுள்ளது.

பென்லி லியோன்சினோ 250 மாடல்: பிரவுன், கிரே, ரெட் மற்றும் வைட் என நான்குவித நிறங்களில் கிடைக்கிறது. 
இதன் விலை ரூ. 2.50லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
Tags:    

Similar News