ஆட்டோமொபைல்
பென்லி டி.ஆர்.கே. 251

பென்லி டி.ஆர்.கே. 251 அறிமுகம்

Published On 2019-08-24 08:03 GMT   |   Update On 2019-08-24 08:03 GMT
பென்லி நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட டி.ஆர்.கே. 251 மோட்டார்சைக்கிள் அறிமுகம் செய்யப்பட்டது.



பென்லி நிறுவனத்தின் டி.ஆர்.கே. 251 மோட்டார்சைக்கிள் மலேசிய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது. குவாட்டர்-லைன் டூரிங் மாடலான டி.ஆர்.கே. 251 விலை RM13,888 (இந்திய மதிப்பில் ரூ. 2,37,609) என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

டி.ஆர்.கே. 501 மாடலை தழுவி உருவாகி இருக்கும் டி.ஆர்.கே. 251 பார்க்க ஒரே மாதிரியான வடிவமைப்பை கொண்டிருக்கிறது. எனினும், பார்க்க சற்று சிறியதாக காட்சியளிக்கிறது. புதிய டூரர் மோட்டார்சைக்கிளில் விண்ட்ஷீல்டு வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் ஹை-ரைஸ் பார், நியூட்ரல் செட் ஃபூட் பெக் வழங்கப்பட்டுள்ளது. இதனால் இதனை ஓட்டும் போது சௌகரியமாக இருக்கும்.

பென்லி டி.ஆர்.கே.251 மாடலில் எல்.இ.டி. ப்ரோஜெக்டர் ஹெட்லேம்ப்கள், எல்.இ.டி. டி.ஆர்.எல்.கள் வழங்கப்பட்டுள்ளன. இதன் இன்டிகேட்டர் மற்றும் டெயில் லேம்ப்களும் எல்.இ.டி. யூனிட்களை கொண்டிருக்கின்றன. இன்ஸ்ட்ரூமென்ட் கன்சோல் மோனோகுரோம் எல்.இ.டி. டிஸப்ளே கொண்டிருக்கிறது.



டி.ஆர்.கே.251 மாடலில் 249சிசி சிங்கிள் சிலி்ண்டர் DOHC மோட்டார் மற்றும் ஃபியூயல் இன்ஜெக்‌ஷன் வழங்கப்பட்டுள்ளது. இந்த என்ஜின் 26.8 பி.ஹெச்.பி. @10,500 ஆர்.பி.எம். செயல்திறன் வழங்குகிறது. இத்துடன் 6-ஸ்பீடு கியர்பாக்ஸ் வழங்கப்பட்டுள்ளது. இதன் பின்புறம் மோனோஷாக் சஸ்பென்ஷனும், முன்புறம் இன்வெர்ட்டெட் ஃபோர்க் வழங்கப்பட்டுள்ளது.

பிரேக்கிங்கிற்கு  முன்புறம் 280 எம்.எம். டிஸ்க் மற்றும் ஃபுளோட்டிங் கேலிப்பர், பின்புறம் 240 எம்.எம். டிஸ்க் மற்றும் சிங்கிள் பிஸ்டன் கேலிப்பர் வழங்கப்பட்டுள்ளது. 

புதிய பென்லி டி.ஆர்.கே.251 மாடல் இந்தியாவில் இந்த ஆண்டு இறுதியிலோ அல்லது அடுத்த ஆண்டு துவக்கத்திலோ அறிமுகம் செய்யப்படலாம். இதன் விலை ரூ. 2 லட்சத்தில் துவங்கி ரூ. 2.2 லட்சம் வரை நிர்ணயம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியாவில் பென்லி டி.ஆர்.கே.251 மாடல் கவாசகி வெர்சிஸ் எக்ஸ்300 மற்றும் ராயல் என்ஃபீல்டு ஹிமாலயன் மாடல்களுக்கு போட்டியாக இருக்கும் என கூறப்படுகிறது.
Tags:    

Similar News