ஆட்டோமொபைல்
டுகாட்டி பனிகேல் வி 4 ஆர்

இந்தியாவில் டுகாட்டி பனிகேல் வி 4 ஆர் வினியோகம் துவக்கம்

Published On 2019-08-20 07:59 GMT   |   Update On 2019-08-20 07:59 GMT
இந்தியாவில் டுகாட்டி பனிகேல் வி 4 ஆர் ஃபிளாக்‌ஷிப் மோட்டார்சைக்கிளின் வினியோகம் துவங்கியுள்ளது.



டுகாட்டி இந்தியா நிறுவனம் தனது ஃபிளாக்‌ஷிப் மோட்டார்சைக்கிளின் வினியோகம் இந்தியாவில் துவங்கப்பட்டது. இந்தியாவில் டுகாட்டி பனிகேல் வி 4 ஆர் மொத்தமே ஐந்து யூனிட்கள் தான் விற்பனை செய்யப்படும் என டுகாட்டி அறிவித்தது. இந்நிலையில், புதிய பனிகேல் வி 4 ஆர் மோட்டார்சைக்கிளை வாங்க இருவர் முன்பதிவு செய்திருந்தனர்.

டுகாட்டி இந்தியாவின் டெல்லி என்.சி.ஆர். பகுதியின் விற்பனையாளர் முன்பதிவு செய்திருந்தார். ஏற்கனவே அறிவித்தப்படி புதிய மோட்டார்சைக்கிள் ஆகஸ்ட் மாதத்திலேயே விநியோகம் செய்யப்படும் நிலையில், இது விரைவில் புத் சர்வதேச அரங்கில் பயனர்களை கவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.



டுகாட்டி பனிகேல் வி 4 ஆர் மாடலில் 998 சி.சி. திறன் கொண்ட என்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இதில் வி-4 மோட்டார் பம்ப் உள்ளது. இது 221 ஹெச்.பி. மற்றும் 15,250 ஆர்.பி.எம். மற்றும் 112 என்.எம். (நியூட்டன் மீட்டர்) 11,500 ஆர்.பி.எம். செயல்திறனை வெளிப்படுத்தக் கூடியது.

இந்த மோட்டார் சைக்கிளில் முதல் முறையாக மோட்டோ ஜி.பி. என்ஜின் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதில் ரேடியல் மவுன்ட் செய்யப்பட்ட நான்கு பிஸ்டன் பிரெம்போ கேலிபர்கள் வழங்கப்பட்டுள்ளது. இதனால் இந்த மோட்டார்சைக்கிளில் அதிகபட்ச வேகமாக மணிக்கு 270 கி.மீ. வேகத்தில் செல்லலாம்.

இந்தியாவில் டுகாட்டி பனிகேல் வி 4 ஆர் மோட்டார்சைக்கிள் விலை ரூ.51.80 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. புதிய டுகாட்டி பனிகேல் வி 4 ஆர் இந்தியாவில் விற்பனையாகும் சட்டப்பூர்வமான உருவாகியிருக்கும் அதிவேக மோட்டார்சைக்கிள் ஆகும்.
Tags:    

Similar News