ஆட்டோமொபைல்
பஜாஜ் பல்சர் 125 நியான்

இந்தியாவில் பஜாஜ் பல்சர் 125 நியான் அறிமுகம்

Published On 2019-08-16 08:13 GMT   |   Update On 2019-08-16 08:13 GMT
பஜாஜ் ஆட்டோ நிறுவனம் இந்தியாவில் பல்சர் 125 நியான் மோட்டார்சைக்கிள் மாடலை அறிமுகம் செய்துள்ளது.



பஜாஜ் ஆட்டோ நிறுவனம் இந்தியாவில் பல்சர் 125 நியான் மோட்டார்சைக்கிளை அறிமுகம் செய்துள்ளது. புதிய பல்சர் 125 நியான் மாடல் இருவித வேரியண்ட்களில் கிடைக்கிறது. இவற்றின் துவக்க விலை ரூ. 64,000 (எக்ஸ்-ஷோரூம்) என்றும் டிஸ்க் பிரேக் வேரியண்ட் ரூ. 66,618 (எக்ஸ்-ஷோரூம்) என விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

புதிய பஜாஜ் பல்சர் 125 நியான் மாடல் நியான் புளு, சோலார் ரெட் மற்றும் பிளாட்டினம் சில்வர் என மூன்று வித நிறங்களில் கிடைக்கிறது. இவை அனைத்தும் மேட் பிளாக் பெயின்ட் நிறத்தில் கிடைக்கின்றன.



பஜாஜ் பல்சர் 125 நியான் மாடலில் 124சிசி DTS-i சிங்கிள் சிலிண்டர் ஏர்-கூல்டு என்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இது 11.8 பி.ஹெச்.பி. @8500 ஆர்.பி.எம் மற்றும் 11 என்.எம். டார்க் @6500 ஆர்.பி.எம். செயல்திறன் வழங்குகிறது. இத்துடன் 5-ஸ்பீடு கியர்பாக்ஸ் வழங்கப்பட்டுள்ளது.

பஜாஜ் நிறுவன வாகனங்களின் விலை அதிகரிப்பதால், புதிய பல்சர் 125 நியான் மாடல் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் 125 சிசி வாகனங்களில் சி.பி.எஸ். வசதியும், அதற்கும் அதிக திறன் கொண்ட வாகனங்களில் ஏ.பி.எஸ். வசதி வழங்க விதிமுறை அமலாகியிருப்பதால், வாகனங்களின் விலை அதிகரிக்கப்படுகிறது.

இதுதவிர 2020 ஆம் ஆண்டு முதல் பி.எஸ். 6 புகை விதிகளுக்கு பின் வாகனங்களின் விலை மேலும் அதிகமாகும். பஜாஜ் நிறுவனம் சமீபத்தில் தனது பல்சர் 150 மாடல்களின் விலையை அதிகரித்தது.
Tags:    

Similar News