ஆட்டோமொபைல்
டுகாட்டி டியாவெல் 1260

இந்தியாவில் டுகாட்டி டியாவெல் சூப்பர்பைக் அறிமுகம்

Published On 2019-08-13 08:21 GMT   |   Update On 2019-08-13 08:21 GMT
டுகாட்டி நிறுவனம் இந்தியாவில் தனது டியாவெல் 1260 சூப்பர்பைக் மோட்டார்சைக்கிளை அறிமுகம் செய்துள்ளது.



இத்தாலி நாட்டு மோட்டார்சைக்கிள் தயாரிப்பு நிறுவனமான டுகாட்டி கடந்த ஆண்டு நடைபெற்ற சர்வதேச ஆட்டோமொபைல் கண்காட்சியில் டியாவெல் மோட்டார்சைக்கிளை காட்சிப்படுத்தியது. தற்போது டுகாட்டி நிறுவனம் டியாவெல் 1260 மற்றும் 1260 எஸ் என இரு மோட்டார்சைக்கிள்களை இந்திய சந்தையில் அறிமுகம் செய்துள்ளது.

இந்தியாவில் புதிய டுகாட்டி டியாவெல் 1260 விலை ரூ. 17.70 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) என்றும் 1260 எஸ் மாடல் விலை ரூ. 19.25 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. புதிய டுகாட்டி டியாவெல் 1260 மாடலில் முந்தைய மாடலை விட சிறப்பான தோற்றம் மற்றும் அதிக திறன் வழங்கும் என்ஜின் வழங்கப்பட்டுள்ளது.

புதிய டியாவெல் 1260 மாடலின் முன்பதிவுகள்: சென்னை, டெல்லி-என்.சி.ஆர்., மும்பை, பெங்களூரு, பூனே, கொச்சி, ஆமதாபாத் மற்றும் ஐதராபாத் உள்ளிட்ட நகரங்களின் டுகாட்டி விற்பனையகங்களில் நடைபெறுகிறது.



புதிய டுகாட்டி டியாவெல் 1260 மாடலில் 1262சிசி, ட்வின் சிலிண்டர் டெஸ்டாஸ்டிரெட்டா எஸ்.வி.டி. என்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இது 159 பி.ஹெச்.பி. @9500 ஆர்.பி.எம். மற்றும் 129 என்.எம். டார்க் @7500 ஆர்.பி.எம். செயல்திறன் வழங்குகிறது. இந்த என்ஜின் டுகாட்டியின் டெஸ்மோடிரோமிக் வால்வ் டைமிங் வழங்கப்பட்டுள்ளது.

டுகாட்டி டியாவெல் 1260 மாடலில் 6-ஆக்சிஸ் போஷ் இனெர்ஷியல் மெஷர்மென்ட் யூனிட், போஷ் கார்னெரிங் ஏ.பி.எஸ்., டுகாட்டி டிராக்‌ஷன் கண்ட்ரோல், டுகாட்டி வீலி கண்ட்ரோல், பவர் லான்ச், குரூஸ் கண்ட்ரோல் மற்றும் பல்வேறு டிரைவிங் மோட்கள் வழங்கப்படுகின்றன.

டுகாட்டி டியாவெல் 1260 மாடல் சான்ட்ஸ்டோன் கிரே எனும் ஒற்றை நிறத்தில் மட்டும் கிடைக்கிறது. டியாவெல் 1260 எஸ் மாடல்: த்ரில்லிங் பிளாக் மற்றும் டார்க் ஸ்டெல்த் என இருவித நிறங்களில் கிடைக்கிறது.
Tags:    

Similar News