ஆட்டோமொபைல்
டுகாட்டி மல்டிஸ்டிராடா 1260 என்டியூரோ

இந்தியாவில் டுகாட்டி மல்டிஸ்டிராடா 1260 என்டியூரோ அறிமுகம்

Published On 2019-07-10 07:29 GMT   |   Update On 2019-07-10 07:29 GMT
இந்தியாவில் டுகாட்டி நிறுவனத்தின் மல்டிஸ்டிராடா 1260 என்டியூரோ மோட்டார்சைக்கிள் அறிமுகம் செய்யப்பட்டது.
 


இந்தியாவில் புத்தம் புதிய டுகாட்டி மல்டிஸ்டிராடா 1260 என்டியூரோ மோட்டார்சைக்கிள் அறிமுகம் செய்யப்பட்டது. இந்தியாவில் இதன் விலை ரூ. 19.99 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

புதிய 1260 என்டியூரோ மாடல் மல்டிஸ்டிராடா 1200 என்டியூரோ மாடலுக்கு மாற்றாக அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. டுகாட்டி மல்டிஸ்டிராடா மாடல்கள் நீண்ட தூர பயணங்களின் போதும் வாகனத்தை ஓட்டுபவருக்கு அதிகளவு களைப்பை ஏற்படுத்தாத வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.

புதிய டுகாட்டி மல்டிஸ்டிராடா 1260 என்டியூரோ மாடலில் 1262சிசி, எல்-ட்வின் என்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இந்த என்ஜின் 158.4 பி.ஹெச்.பி. பவர் @9500 ஆர்.பி.எம்., 128 என்.எம். டார்க் @7500 ஆர்.பி.எம். செயல்திறன் மற்றும் 6-ஸ்பீடு கியர்பாக்ஸ் வழங்கப்படுகிறது. இத்துடன் அப்-டவுன் டுகாட்டி க்விக் ஷிஃப்டர் வசதி வழங்கப்படுகிறது.

இதே என்ஜின் மல்டிஸ்டிராடா 1260 மாடலிலும் வழங்கப்பட்டுள்ளது. எனினும், என்டியூரோ மாடலில் ஆஃப் ரோடு வசதி மேம்படுத்தப்பட்டுள்ளது.



இத்துடன் 6-ஆக்சிஸ் இனெர்ஷியல் மெஷர்மென்ட் யூனிட், கார்னெரிங் ஏ.பி.எஸ்., டுகாட்டி டிராக்ஷன் கண்ட்ரோல், டுராட்டி வீலி கண்ட்ரோல், வெஹிகில் ஹோல்டு கண்ட்ரோல் மற்றும் ஸ்கைஹூக் சஸ்பென்ஷன் சிஸ்டம் போன்றவை வழங்கப்படுகிறது.

அர்பன், ஸ்போர்ட், டூரிங் மற்றும் என்டியூரோ என நான்கு வித டிரைவிங் மோட்களை கொண்டிருக்கிறது. ஒவ்வொரு டிரைவிங் மோட்களையும் கஸ்டமைஸ் செய்யும் வசதி வழங்கப்படுகிறது. 

இத்துடன் 5.0 இன்ச் டி.எஃப்.டி டிஸ்ப்ளே வழங்கப்படுகிறது. இதனுடன் ஸ்மார்ட்போனை இணைத்துக் கொள்ளும் வசதி இருக்கிறது. இதை கொண்டு மோட்டார்சைக்கிளை செட்டப்களை ஸ்மார்ட்போனில் செயலி மூலம் மேற்கொள்ளலாம்.
Tags:    

Similar News