ஆட்டோமொபைல்
சுசுகி இன்ட்ரூடர்

மேம்பட்ட சுசுகி இன்ட்ரூடர் இந்திய வெளியீட்டு விவரம்

Published On 2019-07-09 07:10 GMT   |   Update On 2019-07-09 07:10 GMT
சுசுகி நிறுவனத்தின் மேம்பட்ட இன்ட்ரூடர் மோட்டார்சைக்கிள் இந்திய வெளியீட்டு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.



சுசுகி நிறுவனம் ஜிக்சர் மற்றும் ஜிக்சர் 250 எஸ்.எஃப். மோட்டார்சைக்கிள்களின் மேம்பட்ட மாடல்களை அறிமுகம் செய்த நிலையில், தற்சமயம் இன்ட்ரூடர் 150 மாடலின் மேம்பட்ட வெர்ஷனை அறிமுகம் செய்ய இருக்கிறது.

இந்தியாவில் சுசுகி இன்ட்ரூடர் 150 மாடல் 2017 ஆம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது. எனினும், சுசுகி இன்ட்ரூடர் மாடல் எதிர்பார்த்த அளவு வரவேற்பை பெறவில்லை. பல்வேறு காரணங்களால் சுசுகி இன்ட்ரூடர் ஒட்டுமொத்த விற்பனையும் சரிவை சந்தித்தது.



இந்நிலையில், சுசுகி நிறுவனம் தனது இன்ட்ரூடர் மாடலை மேம்படுத்த இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அந்த வகையில் இன்ட்ரூடர் 150 மாடலில் 250சிசி சிங்கிள் சிலிண்டர் என்ஜின் வழங்கப்பட இருப்பதாக கூறப்படுகிறது. சுசுகி ஜிக்சர் 250 எஸ்.எஃப். மாடலில் வழங்கப்பட்ட என்ஜின் தான் புதிய இன்ட்ரூடர் மாடலிலும் வழங்கப்படும் என தெரிகிறது.

சுசுகி நிறுவனம் புதிய 250சிசி மாடலை வெளியிட்டதும் இன்ட்ரூடர் மாடலை திரும்பப்பெறும் திட்டத்தில் இல்லை என்றே தெரிகிறது. புதிய நிறம் மற்றும் ஸ்பெஷல் எடிஷன்கள் மூலம் வாகனத்தின் விற்பனையை அதிகப்படுத்தவே சுசுகி திட்டமிட்டுள்ளது. 

அந்த வகையில் சுசுகியின் புதிய இன்ட்ரூடர் மாடல் 2020 ஆட்டோ எக்ஸ்போ விழாவில் அறிமுகம் செய்யலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. புதிய மேம்பட்ட இன்ட்ரூடர் மோட்டார்சைக்கிளின் வெளியீடு அடுத்த ஆண்டு பண்டிகை காலத்தில் நடைபெறும் என தெரிகிறது.
Tags:    

Similar News