ஆட்டோமொபைல்
2020 லேண்ட் ரோவர் டிஃபென்டர்

இணையத்தில் லீக் ஆன 2020 லேண்ட் ரோவர் டிஃபென்டர் அம்சங்கள்

Published On 2019-07-05 09:43 GMT   |   Update On 2019-07-05 09:43 GMT
லேண்ட் ரோவர் நிறுவனத்தின் 2020 லேண்ட் ரோவர் டிஃபென்டர் கார் சிறப்பம்சங்கள் இணையத்தில் லீக் ஆகியுள்ளது.



லேண்ட் ரோவர் டிஃபென்டர் வாகனம் மூன்று ஆண்டுகளுக்கு பின் சந்தையில் களமிறங்க இருக்கிறது. புதிய வாகனத்தின் டீசர்கள் மற்றும் ஸ்பை விவரங்கள் இணையத்தில் தொடர்ந்து வெளியாகின. அதில் புதிய வாகனத்தின் விவரங்கள் தெரியவந்துள்ளது.

அந்த வகையில் புதிய டிஃபென்டர் கார் மூன்று வித ஸ்டைலிங் கொண்டிருக்கிறது. முதல் வாகனமான டிஃபென்டர் 110 இந்த ஆண்டு அக்டோபரில் அறிமுகமாக இருக்கிறது. இதன் விற்பனை டிசம்பர் மாதத்தில் துவங்கலாம். ஐந்து கதவுகள் கொண்ட இந்த மாடல் 3022 எம்.எம். வீல்பேஸ் கொண்டிருக்கும். இந்த மாடல் ஆறு மற்றும் ஏழு பேர் அமரக்கூடிய வடிவமைப்புகளில் கிடைக்கும்.



இரண்டாவது மாடலான டிஃபென்டர் 90 அடுத்த ஆண்டு மார்ச் மாதத்தில் அறிமுகமாகும். இந்த கார் ஐந்து அல்லது ஆறு பேர் அமரக்கூடிய வடிவமைப்பு கொண்டிருக்கும். மூன்றாவது மாடலான டிஃபென்டர் 130 அடுத்த ஆண்டு ஆகஸ்டு மாதத்தில் அறிமுகமாகும். இதில் எட்டு பேர் வரை அமர முடியும்.

புதிய டிஃபென்டர் கார் அதிகபட்சம் ஆறுவித என்ஜின் ஆப்ஷன்களில் கிடைக்கும். இதில் மூன்று டீசல், இரண்டு பெட்ரோல் மற்றும் ஒரு பெட்ரோல்-ஹைப்ரிட் வேரியண்ட் அடங்கும். டீசல் ஆப்ஷன்களில் 2.0 லிட்டர் 4-சிலிண்டர் என்ஜின், 3.0 லிட்டர் 6-சிலிண்டர் என்ஜின் வழங்கப்படுகிறது.

பெட்ரோல் வேரியண்ட்களில் 2.0 லிட்டர் 4-சிலிண்டர் என்ஜின் மற்றும் 3.0 லிட்டர் 6-சிலிண்டர் என்ஜின் வழங்கப்படுகிறது. பிளக்-இன் ஹைப்ரிட் விவரங்கள் இதுவரை வெளியாகவில்லை. 

புகைப்படம் நன்றி: Disco4.COM
Tags:    

Similar News