ஆட்டோமொபைல்
ஜிக்சர் 155 ஃபேஸ்லிஃப்ட் ஸ்பை படம்

2019 சுசுகி ஜிக்சர் 155 ஃபேஸ்லிஃப்ட் ஸ்பை விவரங்கள்

Published On 2019-07-03 11:33 GMT   |   Update On 2019-07-03 11:33 GMT
சுசுகி மோட்டார்சைக்கிள் இந்தியா நிறுவனத்தின் 2019 ஜிக்சர் 155 ஃபேஸ்லிஃப்ட் மாடல் ஸ்பை விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.



சுசுகி மோட்டார்சைக்கிள்ஸ் இந்தியா நிறுவனம் புதிய 2019 ஜிக்சர் 155 ஃபேஸ்லிஃப்ட் மோட்டார்சைக்கிளை இந்தியாவில் அறிமுகம் செய்ய இருக்கிறது. புதிய 2019 ஜிக்சர் ஃபேஸ்லிஃப்ட் மாடலில் பல்வேறு காஸ்மெடிக் மற்றும் மெக்கானிக்கல் மாற்றங்களுடன் வரும் என கூறப்படுகிறது.

இந்தியாவில் இதன் விற்பனை விரைவில் துவங்கும் என தெரிகிறது. இந்நிலையில், வெளியீட்டுக்கு முன் மோட்டார்சைக்கிள் சோதனை செய்யப்படும் புகைப்படம் இணையத்தில் லீக் ஆகியுள்ளது. இதில் புதிய மாடலில் மேற்கொள்ளப்பட இருக்கும் மாற்றங்கள் தெரியவந்துள்ளது.



வடிவமைப்பில் புதிய ஜிக்சர் 155 மாடலில் புத்தம் புதிய ஓவர் வடிவ எல்.இ.டி. ஹெட்லேம்ப் யூனிட், புதிய வடிவமைப்பு கொண்ட ஃபியூயல் டேன்க் உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் டூயல் டோன் பிளாக் மற்றும் புளு நிற பெயின்ட் ஸ்கீம் செய்யப்பட்டுள்ளது.

புதிய மாடலில் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர் புதிதாக வழங்கப்படுகிறது. இத்துடன் ஸ்ப்லிட் சீட்கள், டூயல் பில்லியன் கிராப் ஹேன்டில்கள், எல்.இ.டி. டெயில் லைட்கள் வழங்கப்பட்டுள்ளன. 

மெக்கானிக்கல் அம்சங்களை பொருத்தவரை ஜிக்சர் 155 மாடலில் 155.5சிசி சிங்கிள் சிலிண்டர், ஏர்-கூல்டு என்ஜின் வழங்கப்படலாம். இந்த என்ஜின் 14.1 பி.ஹெச்.பி. பவர், 14 என்.எம். டார்க் மற்றும் 5-ஸ்பீடு டிரான்ஸ்மிஷன் கொண்டிருக்கிறது. 
Tags:    

Similar News