ஆட்டோமொபைல்
யு.எம். மோட்டார்ஸ் அட்வென்ச்சர் டூரர்

யு.எம். மோட்டார்ஸ் அட்வென்ச்சர் டூரர் மோட்டார்சைக்கிள் ஸ்பை விவரங்கள்

Published On 2019-07-02 10:51 GMT   |   Update On 2019-07-02 10:51 GMT
யு.எம். மோட்டார்ஸ் நிறுவனத்தின் புதிய அட்வென்ச்சர் டூரர் மோட்டார்சைக்கிள் சோதனையின் போது வெளியான விவரங்களை பார்ப்போம்.



யு.எம். மோட்டார்ஸ் நிறுவனத்தின் அட்வென்ச்சர் டூரர் 200 மோட்டார்சைக்கிள் சோதனையின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது. புதிய மோட்டார்சைக்கிள் பொலிஷ் உருவாக்கிய ரோமெட் ADV125 F1 ப்ரோ மாடலை தழுவி உருவாக்கப்பட்டுள்ளது.

இந்திய சந்தையில் முற்றிலும் புதிய தோற்றம் கொண்ட அட்வென்ச்சர் மோட்டார்சைக்கிளை அறிமுகம் செய்ய யு.எம். மோட்டார்ஸ் திட்டமிட்டுள்ளது. புதிய மோட்டார்சைக்கிள் ரோமெட் ஸ்டைல் செய்யப்பட்ட டி.எஸ்.ஆர். அட்வென்ச்சர் 200 மோட்டார்சைக்கிள்களை விட வித்தியாசமாக காட்சியளிக்கிறது.  



புதிய ப்ரோடோடைப் மாடல்களில் ஒரே மாதிரியான ஹெட்லேம்ப், ஃபுயல் டேன்க் எக்ஸ்டென்ஷன்கள் வழங்கப்பட்டுள்ளன. எனினும், இதன் செயல்திறன் மாற்றப்பட்டிருக்கிறது. இந்த மோட்டார்சைக்கிளின் முக்கிய அம்சமாக பெரிய விண்ட்ஷீ்ல்டு, ஸ்போக்டு வீல்கள் மற்றும் இரட்டை பயன்பாட்டு டையர்கள், முன்புற சான்ஸ் ஃபென்டர்கள் வழங்கப்பட்டுள்ளன.

யு.எம். ப்ரோடோடைப்களுடன் மஹிந்திரா மோஜோவும் காணப்படுகிறது. அந்த வகையில் புதிய பைக் பென்ச்மார்க் மாடலாக இருக்கும் என தெரிகிறது. இதுதவிர பல்வேறு இதர மோட்டார்சைக்கிள்களும் காணப்படுகின்றன. எனினும், இவை தெளிவற்ற நிலையில் காட்சியளிக்கிறது.

யு.எம். மோட்டார்ஸ் தனது எதிர்கால திட்டம் பற்றி இதுவரை எவ்வித தகவலும் வழங்கவில்லை. எனினும், புதிய தகவல்களின் படி டி.எஸ்.ஆர். அட்வென்ச்சர் 200 மற்ரும் சில் 150 மாடல்கள் 2019 ஆம் ஆண்டு அறிமுகமாகும் என கூறப்படுகிறது. இது ட்வின் சிலிண்டர் ஃபிளாக்‌ஷிப் குரூஸ் மாடல் ஆகும்.

புகைப்படம் நன்றி: Rushlane
Tags:    

Similar News