ஆட்டோமொபைல்

விரைவில் இந்தியா வரும் பியூஜியோட் 208: முழு தகவல்கள்

Published On 2018-01-04 11:16 GMT   |   Update On 2018-01-04 11:16 GMT
பியூஜியோட் நிறுவனத்தின் புதிய ஹேட்ச்பேக் மாடல் இந்தியாவில் சோதனை செய்யப்படும் புகைப்படம் இணையத்தில் கசிந்துள்ளது.
புதுடெல்லி:

பிரான்ஸ் நாட்டு கார் தயாரிப்பு நிறுவனமான பியூஜியோட் இந்திய சந்தையில் 2019-ம் ஆண்டு வாக்கில் களமிறங்க திட்டமிட்டுள்ளது. இந்தியாவில் கார்களை தயாரிக்க பியூஜியோட் நிறுவனம் ஏற்கனவே சி.கே. பிர்லா நிறுவனத்துடன் இணைந்துள்ளது.

பியூஜியோட் நிறுவனத்தின் முதல் கார் 208 ஆக இருக்கலாம் என எதிர்பார்க்கப்படும் நிலையில், இந்தியாவில் பியூஜியோட் 208 எஸ் சோதனை செய்யப்படுவதாக டீம் பி.எச்.பி. தளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த வாகனங்கள் பி.சி.ஏ. மோட்டார்ஸ் நிறுவன பெயரில் பதிவு செய்யப்படும் என்றும் இதற்கென பியூஜியோட் நிறுவனம் பூனே அருகில் பதிவு செய்யப்பட்ட அலுவலகம் அல்லது தயாரிப்பு ஆலையை கட்டமைக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தியாவில் 208 ஹேட்ச்பேக் சோதனை செய்யப்படும் புகைப்படங்கள் ஏற்கனவே இணையத்தில் வெளியாகியிருந்தன, எனினும் இவற்றில் தற்காலிக பதிவு எண்கள் பொருத்தப்பட்டிருந்தன. பியூஜியோட் 2018 எனட்ரி லெவல் ஹேட்ச்பேக் அதிநவீன மற்றும் ஸ்போர்ட் வடிவமைப்பு கொண்டுள்ளது.



முன்பக்க 208 மாடலில் ஸ்வெப்ட்பேக் ஹெட்லேம்ப், ப்ரோஜெக்டர் லைட், பெரிய கிரில் மற்றும் தடிமனான க்ரோம் சரவுண்டிங், வட்ட வடிவ ஃபாக் லேம்ப், அழகிய வடிவம் கொண்ட பம்ப்பர் வழங்ப்பட்டிருக்கிறது. உள்புறத்தில் பியூஜியோட் 208 மாடலில் முழுமையான கருப்பு நிற தீம், மூன்று-ஸ்போக் கொண்ட ஸ்டீரிங் வீல், தொடுதிரை வசதி கொண்ட இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், ஏ.சி. வென்ட்களில் குரோம் அக்சென்ட் வழங்கப்பட்டுகிறது. 

இதன் ஒட்டுமொத்த வடிவமைப்பு எளிமையாகவும், அழகாகவும் காட்சியளிக்கிறது. 208எஸ் ஹேட்ச்பேக் டாப் எண்ட் மாடலில் பவர் விண்டோ, மின்திறன் கொண்டு இயங்கும் ORVM வழங்கப்பட்டிருக்கிறது. எனினும் இந்த மாடலின் இன்ஜினில் ஸ்டார்ட் / ஸ்டாப் பட்டன் வழங்கப்படவில்லை. மற்ற அம்சங்களை பொருத்த வரை முன்பக்க டிஸ்க் பிரேக், முன்பக்கம் மற்றும் பக்கவாட்டுகளில் டூயல் ஏர்பேக்ஸ் வழங்கப்பட்டிருக்கிறது. 
Tags:    

Similar News