ஆட்டோமொபைல்

எம்.ஜி. ஹெக்டார் வெளியீட்டு தேதி அதிகாரப்பூர்வ அறிவிப்பு

Published On 2019-06-21 11:36 GMT   |   Update On 2019-06-21 11:36 GMT
எம்.ஜி. மோட்டார் இந்தியா நிறுவனத்தின் முதல் கார் மாடலான எம்.ஜி. ஹெக்டார் அதிகாரப்பூர்வ இந்திய வெளியீட்டு தேதியை பார்ப்போம்.



எம்.ஜி. மோட்டார் இந்தியாவின் முதல் வாகனமான ஹெக்டார் எஸ்.யு.வி.யை ஜூன் 27 ஆம் தேதி வெளியிடுகிறது. புதிய ஹெக்டார் கனெக்டெட் எஸ்.யு.வி. மாடலுக்கான முன்பதிவு ஏற்கனவே துவங்கி நடைபெற்று வரும் நிலையில் வெளியீட்டுக்கு பின் உடனடியாக இதன் விநியோகம் துவங்க இருக்கிறது.

இந்தியாவில் எம்.ஜி. மோட்டார் நிறுவனத்தின் முதல் விற்பனையகம் ஜூன் 4 ஆம் தேதி திறக்கப்பட்டது. இத்துடன் எஸ்.யு.வி. மாடல் டெஸ்ட் டிரைவிற்கும் வழங்கப்படுகிறது. ஹெக்டார் கார் வெளியானதும் இந்தியா முழுக்க 50 நகரங்களில் 120 டச் பாயிண்ட்களை திறக்க எம்.ஜி. மோட்டார் திட்டமிட்டுள்ளது.

எம்.ஜி. ஹெக்டார் கார் -- ஸ்டைல், சூப்பர், ஸ்மார்ட் மற்றும் ஷார்ப் என நான்கு வித வேரியண்ட்களில் கிடைக்கும். எம்.ஜி. ஹெக்டார் கார் இந்தியாவின் முதல் கனெக்டெட் எஸ்.யு.வி. மாடலாக இருக்கிறது. இதில் ஐ-ஸ்மார்ட் கனெக்ட்டெட் தொழில்நுட்பம் வழங்கப்பட்டுள்ளது. இதில் கிட்டத்தட்ட 50-க்கும் அதிக கனெக்டிவிட்டி அம்சங்கள் இடம்பெற்றிருக்கிறது.



புதிய எம்.ஜி. ஹெக்டார் 1.5 லிட்டர் டர்போ பெட்ரோல், 2.0 லிட்டர் எஃப்.சி.ஏ. டீசல் என்ஜின் என இருவித ஆப்ஷன்களில் கிடைக்கிறது. இதன் 1.5 லிட்டர் டர்போசார்ஜ் செய்யப்பட்ட பெட்ரோல் என்ஜின் 141 பி.ஹெச்.பி. பவர், 250 என்.எம். டார்க் செயல்திறன் வழங்குகிறது. இந்த என்ஜின் 6-ஸ்பீடு மேனுவல் மற்றும் டூயல் கிளட்ச் ஆட்டோமேடிக் என இருவித டிரான்ஸ்மிஷன்களில் கிடைக்கிறது.

எம்.ஜி. ஹெக்டார் பெட்ரோல் வெர்ஷன் 48வோல்ட் ஹைப்ரிட் செட்டப் உடன் கிடைக்கிறது. எம்.ஜி. ஹெக்டார் பெட்ரோல் வேரியண்ட் லிட்டருக்கு 14.16 கிலோமீட்டர் செல்லும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் வேரிண்ட் லிட்டருக்கு 13.94 கிலோமீட்டர் செல்லும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் புதிய எம்.ஜி. ஹெக்டார் விலை ரூ. 15 லட்சத்தில் துவங்கி அதிகபட்சம் ரூ. 20 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) வரை நிர்ணயம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. புதிய ஹெக்டார் கார் இந்தியாவில் ஜீப் காம்பஸ், டாடா ஹேரியர், மஹிந்திரா எக்ஸ்.யு.வி. 500 மற்றும் ஹூன்டாய் டக்சன் போன்ற கார்களுக்கு போட்டியாக இருக்கும்.
Tags:    

Similar News