மிதுனம் - வார பலன்கள்

இந்தவார ராசிபலன்

Published On 2023-11-13 04:35 GMT   |   Update On 2023-11-13 04:36 GMT

13.11.2023 முதல் 19.11.2023 வரை

பொருளாதார நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்படும் வாரம்.லாப குருவால் நேர்மறை ஆற்றல் பெருகும்.பணம் கொடுக்கல் வாங்கலில் இருந்த தடை தாமதங்கல் அகலும். வருமானம் அதிகரிக்கும். வராக்கடன் வசூலாகும். வேலை இழந்தவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். உயர் அதிகாரிகளின் அனுசரனையும் ஆதரவும் உண்டு. வெளிநாட்டிலிருந்து பூர்வீகம் வந்து செல்வதில் நிலவிய பிரச்சனைகள் தீரும். பொருள் கடன் மற்றும் பிறவிக் கடனில் தத்தளித்த உங்களுக்கு கர்மவினைத் தாக்கம் குறையும் காலம் வந்துவிட்டது. ராசிக்கு 6ல் செவ்வாய் ஆட்சி பலம் பெற்று பாக்கியாதி சனியின் பார்வை பெறுவதால் அடமானச் சொத்துக்கள் மீட்கக் கூடிய சந்தர்ப்பம் உருவாகும்.

உடல் உபாதைகள் அகலும்.வீடு கட்டும் விருப்பம் நிறைவேறும்.புதிய சொத்துக்கள் வாங்கலாம்.பலருக்கு திருமணத் தடை நீங்கும். விருப்ப திருமணத்திற்கு பெற்றோரின் சம்மதம் கிடைக்கும். 18.11. 2023 காலை 7 மணி முதல் 20.11.2023 காலை 10.07 வரை சந்திராஷ்டமம் இருப்பதால் புதிய முயற்சிகளையும் வெளியூர் பயணங்களையும் தவிர்க்கவும். சஷ்டியன்று கந்த சஷ்டி கவசம் படித்து முருகனை வழிபடவும்.

`பிரசன்ன ஜோதிடர்'

ஐ.ஆனந்தி

செல்: 98652 20406

Similar News