என் மலர்
மிதுனம் - வார பலன்கள்
மிதுனம்
வார ராசிபலன் 30.11.2025 முதல் 6.12.2025 வரை
30.11.2025 முதல் 6.12.2025 வரை
மிதுனம்
மறைமுக எதிர்ப்புகள் குறையும் வாரம். ராசிக்கு 5-ம்மிடமான பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் ராசி அதிபதி புதன் வார இறுதி நாளில் வக்கிர நிவர்த்தி அடைகிறார். பூர்வீகத்திற்கு சென்று வரும் எண்ணம் அதிகமாகும். பூர்வீக சொத்தால் ஏற்பட்ட பிரச்சிினைகள் குறையத் துவங்கும். பிள்ளைகளால் ஏற்பட்ட கவலைகள் அகலும். இழுபறியாக கிடந்த பணிகளை அறிவாற்றலால் சரி செய்வீர்கள். குலதெய்வ கோவிலுக்கு சென்று வருவீர்கள்.
முக்கிய பிரார்த்தனைகளை நிறைவேற்றி மகிழ்வீர்கள். அதிர்ஷ்டம் சார்ந்த விஷயங்களில் ஆர்வம் கூடும். திருமணம் குழந்தைப் பேரு போன்றவற்றில் ஏற்பட்ட தடைகள் விலகும். தொழில் வியாபாரத்தில் லாபகரமான சூழ்நிலை இருக்கும். மேலதிகாரியிடம் பாராட்டுக்கள் கிடைக்கும்.
தடைபட்ட பதவி உயர்வு இப்பொழுது சாதகமாகும். சிலர் நடந்ததை நினைத்து கற்பனை கவலைகள் பய உணர்வை அதிகரிப்பார்கள். ஆரோக்கியத்தில் கவனம் தேவை. திருக்கார்த்திகை நன்னாளில் விரதம் இருந்து வில்வ அர்ச்சனை செய்து சிவ வழிபாடு செய்யவும்.
'பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406
மிதுனம்
வார ராசிபலன் 23.11.2025 முதல் 29.11.2025 வரை
23.11.2025 முதல் 29.11.2025 வரை
மிதுனம்
எடுக்கும் அனைத்து முயற்சிகளிலும் வெற்றி பெறும் வாரம். வார இறுதியில் புதன்,சனி வக்ர நிவர்த்தி பெறுகிறார்கள். தன ஸ்தானத்தில் குரு பகவான் என முக்கிய கிரக நிலவரங்கள் மிதுன ராசிக்கு மிக சாதகமாக உள்ளது. சிலரது பிள்ளைகளுக்கு திருமண யோகம் உண்டாகும். பூர்வீக சொத்து தொடர்பான சர்ச்சையில் மூத்த சகோதரத்தின் ஆதரவு மகிழ்ச்சியைத் தரும்.
சுக, போக பொருட்களின் சேர்க்கை இரட்டிப்பாகும். சிலரின் வாழ்க்கைத் துணைக்கு அரசு வேலை கிடைக்கும். திருமணத் தடை அகன்று நல்ல வரன்கள் வீடு தேடி வரும். விண்ணப்பித்த வீடு, வாகனக் கடன் இந்த வாரம் கிடைக்கும். 25.11.2025 அன்று காலை 4.27 மணி முதல் 27.11.2025 அன்று மதியம் 2.07 மணி வரை சந்திராஷ்டமம் இருப்பதால் சூழ்நிலையை புரிந்து கொண்டு அதற்கு ஏற்ப உங்களை ஈடுபடுத்திக் கொள்வது நல்லது.
மற்றவர்கள் விஷயங்களில் தலையீடு செய்வதை குறைத்தால் எந்தவித இன்னல்களும் வராது. நவகிரக அங்கார கனை வழிபடவும். ஆரோக்கியத்தில் கவனம் தேவை. சீனிவாச பெருமாளை வழிபடுவதால் நன்மைகள் உண்டாகும்.
'பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406
மிதுனம்
வார ராசிபலன் 16.11.2025 முதல் 22.11.2025 வரை
16.11.2025 முதல் 22.11.2025 வரை
மிதுனம்
சுமாரான வாரம். ராசி அதிபதி புதன் 6-ம் இடத்தில் வக்ரகதியில் சஞ்சரிக்கிறார். சரியான திட்டங்கள் தீட்டி செயல்படுத்தினால் வெற்றி நிச்சயம். சொத்து வாங்குவது, விற்பது, திருமணம் போன்ற முக்கிய முடிவுகளை புதன் வக்ர நிவர்த்தி வரை ஒத்திப் போடவும். வேலை இழந்தவர்களுக்கு விரும்பிய வேலை கிடைக்கும்.
சிலர் வெளியூர், வெளி மாநிலம், வெளிநாட்டிற்கு இடம் பெயர நேரும். அரசுப் பணியாளர்கள் தங்கள் துறைகளின் மூலமாக எதிர்பார்த்த அனுகூலங்கள் யாவும் வந்து சேரும். தொழில் சம்பந்தமான முயற்சிகள் வெற்றித் திசையை நோக்கிச் செல்லும். கமிஷன் தொழில், தரகு, பங்குச் சந்தை, ஜோதிடம் போன்ற தொழிலில் இருப்பவர்களுக்கு பெயர், புகழ், அந்தஸ்து அதிகரிக்கும்.
சிலர் ரிலாக்சாக மன மாற்றத்திற்காக சொந்த ஊர் சென்று உற்றார் உறவுகளைக் கண்டு வரலாம். ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். பணிபுரியும் பெண்கள் பதவி உயர்வுகளை எதிர்பார்க்கலாம். சுபகாரிய நிகழ்ச்சிகளால் இல்லத்தில் மகிழ்ச்சி பொங்கும். உயர்ந்த வாகன வசதி அமையும். சக்கரத்தாழ்வாரை வழிபடவும்.
'பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406
மிதுனம்
வார ராசிபலன் 9.11.2025 முதல் 15.11.2025 வரை
9.11.2025 முதல் 15.11.2025 வரை
மிதுனம்
திட்டமிட்டு வெற்றி பெற வேண்டிய வாரம்.ராசி அதிபதி புதனும் 6,11-ம் அதிபதி செவ்வாயும் இருப்பது சற்று ஏற்ற இறக்கமான பலன்களை தரக்கூடிய அமைப்பாகும். உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணியை சிறப்பாக செய்து முடிக்க கூடிய சூழல் உருவாகும். வேலையாட்களால் ஏற்பட்ட இன்னல்கள் குறைய துவங்கும். தொழில், உத்தியோகத்திற்காக வெளியூர், வெளிநாட்டிற்கு இடம் பெயர வாய்ப்பு உள்ளது. விண்ணப்பித்த கடன் தொகை கிடைக்கக்கூடிய அமைப்பு உள்ளது.
வைத்தியம் பலன் தரும். நோய் தாக்கம் குறையும். கூட்டுத் தொழிலில் இருப்பவர்கள் விழிப்புடன் செயல்பட வேண்டும். சுய ஜாதக வலிமைக்கு ஏற்ப திருமணத்திற்கு வரன் அமையும். திட்டமிட்ட காரியங்கள் வெற்றிகரமாக முடியும். சித்தப்பா, மூத்த சகோதர, சகோதரி உதவியால் சில நல்ல காரியங்கள் நடக்கும். போட்டி பந்தயங்களில் வெற்றி வாய்ப்பு அதிகம் உள்ளது. பணம், கொடுக்கல் வாங்கலில் கவனமாக இருக்கவும். புதிய சொத்துக்கள், வாகனங்கள் வாங்கி மகிழ்வீர்கள். தினமும் கந்த சஷ்டிகவசம் கேட்கவும்.
'பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406
மிதுனம்
வார ராசிபலன் 2.11.2025 முதல் 8.11.2025 வரை
2.11.2025 முதல் 8.11.2025 வரை
மிதுனம்
நிதானத்தை கடைபிடிக்க வேண்டிய வாரம். ராசிக்கு 6-ம்மிடமான ருண,ரோக,சத்ரு ஸ்தானத்தில் ஆட்சி பலம் பெற்ற செவ்வாயுடன் ராசி அதிபதி புதன் சேர்ந்து நிற்பது சுபித்துச் செல்லக்கூடிய பலன் அல்ல. பங்குச் சந்தை வர்த்தகத்தை தவிர்க்கவும். குடும்ப உறவுகளுக்கு நண்பர்களுக்கு ஜாமின் பொறுப்பு ஏற்பதை தவிர்க்கவும். பணம் கொடுக்கல் வாங்கலுக்கு உரிய ஆவணங்களை வைத்திருக்க வேண்டும். வீடு, வாகன முயற்சி சித்திக்கும். புதிய வேலை வாய்ப்பு மன நிறைவைத் தரும்.
தாய்வழிச் சொத்து தேடி வரும். குடும்ப நிர்வாகச் செலவு மற்றும் சொந்த பந்தங்களின் இல்ல சுபச் செலவு என செலவுகளின் பட்டியல் கூடும். பிள்ளைகளின் திருமண முயற்சி வெற்றியைத் தரும். காதல் திருமணம் கைகூடும். விவசாயிகளுக்கு விளைச்சல் அதிகரிக்கும். மழை வெள்ளத்தால் ஏற்பட்ட பாதிப்பிற்கு இழப்பீடு கிடைக்கும்.கடமையில் கண்ணும் கருத்துமாக இருந்தால் கிரகங்களின் இயக்கம் பாதிப்பை தராது. செவ்வாய்க்கிழமை துர்க்கை அம்மனை வழிபடவும்.
'பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406
மிதுனம்
வார ராசிபலன் 26.10.2025 முதல் 1.11.2025 வரை
26.10.2025 முதல் 1.11.2025 வரை
மிதுனம்
கடனை கட்டுக்குள் வைத்திருக்க வேண்டிய வாரம். ராசி அதிபதி புதன் ஆட்சி பலம் பெற்ற 6ம் அதிபதி செவ்வாயுடன் சேர்க்கை பெற்றுள்ளார். உழைப்பிற்கேற்ற ஊதியம் கிடைக்கும். ஏற்றுமதி, இறக்குமதி தொழிலில் ஏற்றமான பலன் கிடைக்கும். புதிய தொழில் வாய்ப்புகள், முயற்சிகள் மன நிறைவு தரும். அரசு வேலைக்கு முயற்சியில் வெற்றி உண்டாகும்.
சிலருக்கு தந்தையின் அரசு வேலை கிடைக்கும். நீண்ட காலமாக விற்க முடியாத சொத்துக்கள் விற்கும். குலதெய்வம், முன்னோர்களின் நல்லாசி கிடைக்கும். சிலருக்கு அரசின் இலவச வீட்டுமனை கிடைக்கும். பணம் கொடுக்கல் வாங்கலில் கவனமுடன் இருப்பது நன்மையை தரும். தம்பதிகளின் உறவில் அன்யோன்யம் நீடிக்கும்.
28.10.2025 அன்று இரவு 10.14 மணி முதல் 31.10.2025 காலை 6.48 மணி வரை சந்திராஷ்டமம் உள்ளதால் வீண் மனக்கவலை, முக்கிய பணிகளை குறித்த நேரத்தில் முடிப்பதில் தடை, தாமதம் போன்ற அசவுகரியங்கள் இருக்கும். சஷ்டி திதியில் முருகனுக்கு நெய் தீபம் ஏற்றி வழிபடவும்.
'பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406
மிதுனம்
வார ராசிப்பலன் 19.10.2025 முதல் 25.10.2025 வரை
விழிப்புணர்வுடன் செயல்பட வேண்டிய வாரம். ராசி அதிபதி புதன் வார இறுதியில் ருண, ரோக சத்ரு ஸ்தானம் செல்கிறார். கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை. வியாபாரத்தில் சில மாற்றங்கள் செய்வீர்கள். தொழில் பங்காளிகளை சாதுர்யமாக பேசி சமாளிப்பீர்கள். அயல்நாடு செல்ல விசா கிடைக்கும். அரசாங்க வேலையில் நிலவிய தடை தாமதங்கள் அகலும். குடும்ப
பெரியோர்களின் நட்பும் நல் ஆசியும் கிடைக்கும். சமூகத்தில் மதிப்பு மரியாதை அதிகரிக்கும். புத்திர பிராப்த்தம் உண்டாகும். வீடு, வாகன முயற்சி ஜெயமாகும். திருமணம் கைகூடும். மாமியார் நாத்தனாரால் ஏற்பட்ட மன உளைச்சல் குறையும். மாணவர்களுக்கு உயர்கல்வி யோகம் வெற்றி தரும். பிள்ளைகள் கேட்டதை வாங்கித் தந்து மகிழ்வீர்கள். தீபாவளி போனசில் முக்கிய குடும்பத் தேவைகளை நிறைவு செய்வீர்கள். கூட்டுத் தொழிலில் மாற்றம் ஏற்படலாம். நண்பர்களை நம்பி புதிய பொறுப்புகளை ஒப்படைப்பதை தவிர்க்கவும். தீபாவளி விடுமுறையில் ஆன்மீக யாத்திரை சென்று வருவீர்கள். முன்னோர்கள் வழிபாட்டில் மனநிறைவு கூடும்.
`பிரசன்ன ஜோதிடர்' ஐ.ஆனந்தி, செல்: 98652 20406
மிதுனம்
வார ராசிபலன் 12.10.2025 முதல் 18.10.2025 வரை
நன்மைகள் மிகுதியாக நடக்கும் வாரம். ராசி அதிபதி புதன் பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் சஞ்சரிக்கிறார். தொழில் தொடர்பான சிந்தனை, சுய முயற்சி எப்பொழுதும் இருந்து கொண்டே இருக்கும். ஆழ்மன சிந்தனை பெருகும். சுறுசுறுப்பாக இயங்கி புதிய முயற்சி செய்து கொண்டே இருப்பார்கள். அரச பதவி, அரசு உத்தியோகம், அரசு வகை ஆதரவு உண்டு. பங்குச்சந்தை ஆதாயம் அதிகரிக்கும். பிள்ளைகளால் நிம்மதி கூடும்.
பூர்வீகச் சொத்தால் மிகுதியான பலன் உண்டு. குல தெய்வ அனுகிரகம் உண்டாகும். குல தெய்வம் தெரியாதவர்களுக்கு குல தெய்வம் பற்றி அறியும் காலம் வந்து விட்டது. பெண்கள் பொருளாதாரத்தில் முன்னேற்றம் காண்பார்கள். கணவருடனான ஒற்றுமை நன்றாக இருக்கும்.
தீபாவளிக்கு பரிசுகள், பட்டாசுகள், இனிப்புகள் கிடைக்கும். தடைபட்ட பல விசயங்களுக்கு விடைகள் கிடைத்து அனுகூலமான மாற்றங்கள் பெற்று மகிழ்வீர்கள். கடன் தொல்லைகள் நீங்கி கணிசமான லாபம் உயரும்.
பிள்ளைகளால் ஏற்பட்ட மன சஞ்சலம் அகலும். தாயாரின் ஆயுள் ஆரோக்யம் சிறப்பாக இருக்கும். மீனாட்சி அம்மன் வழிபாட்டால் சிறப்பான பலன்கள் நடக்கும்.
'பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406
மிதுனம்
வார ராசிபலன் 5.10.2025 முதல் 11.10.2025 வரை
5.10.2025 முதல் 11.10.2025 வரை
சோதனைகள் சாதனைகளாக மாறும் வாரம். ராசி அதிபதி புதன் பூர்வ புண்ணிய ஸ்தான அதிபதி சுக்கிரனுடன் பரிவர்த்தனை பெற்றுள்ளார். இது நீச்சபங்க ராஜயோகத்தை ஏற்படுத்தும். ஆன்மீக நாட்டம் அதிகரிக்கும். தான தர்மங்களில் ஆர்வங்கள் கூடும். பூர்வீகம் சார்ந்த இன்னல்கள் சீராகும். விற்க முடியாமல் கிடந்த பூர்வீக சொத்துக்கள் விற்றுப் பணமாகும்.
தடைபட்ட சகோதர சகோதரிகளின் திருமண முயற்சி வெற்றியாகும். குரு பகவான் அதிசாரமாக தன ஸ்தானத்திற்கு செல்வதால் ஜென்ம குருவால் ஏற்பட்ட இன்னல்கள் குறையும். புதிய திட்டங்கள் மற்றும் எண்ணங்களால் தொழிலில் முன்னேற்றம், லாபம் உருவாகும். தொழிலுக்கு அரசின் ஆதரவு கிடைக்கும். வெளியூர், வெளிநாட்டு வேலை முயற்சிகள் பலன்தரும்.
அடகு நகைகளை மீட்கக்கூடிய வகையில் வருமானம் உயரும். பெண்களுக்கு கணவர் மற்றும் புகுந்த வீட்டாரின் அன்பு மன சஞ்சலத்தைக் குறைக்கும். தேவைகள் நிறைவேறும். வீடு மற்றும் பூமி வாங்கும் எண்ணம் நிறைவேறும். வராக்கடனை வசூலிப்பதில் ஆர்வம் கூடும். மீனாட்சியம்மன் வழிபாட்டால் சாதகமான பலன்களை பெற முடியும்.
'பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406
மிதுனம்
வார ராசிபலன் 28.9.2025 முதல் 4.10.2025 வரை
28.9.2025 முதல் 4.10.2025 வரை
பண வரவுகள் சிறப்பாக இருக்கும் வாரம். வார இறுதியில் ராசி அதிபதி புதன் பூர்வ புண்ணிய ஸ்தானம் செல்கிறார். இது அதிர்ஷ்டம் அரவணைக்கும் காலமாகும். லட்சியங்களையும் இலக்குகளையும் அடைவதற்கு சாதகமான நேரம். குடும்பத்தில் அன்பு கூடும். அமைதி நிலவும். பண வரவு அமோகமாக இருக்கும்.
பங்குச் சந்தை முதலீடுகள் நல்ல லாபத்தை பெற்றுத் தரும், பத்திரிக்கை நிறுவனங்கள், கூட்டுறவு வங்கிகளின் பங்குகளில் நீண்ட கால முதலீடு செய்யலாம். முக்கியமான பணிகளை தெளிவாக செய்வதன் மூலம் மதிப்பு கூடும். சில தம்பதிகள் இணைந்து கூட்டுத் தொழிலில் ஈடுபடலாம். அதற்கு தேவையான நிதியும், சந்தர்ப்பமும் தானாக உருவாகும்.
மறு திருமண முயற்சி பலிதமாகும். திருமணத்திற்கு அதிக வசதியுள்ள வரன் அமையும்.1.10.2025 அன்று மதியம் 2.27 முதல் 3.10.2025 இரவு 9.27 வரை சந்திராஷ்டமம் இருப்பதால் சற்று பொறுமையோடு இருக்க வேண்டும். ஆரோக்கியத்தில் அக்கறை செலுத்த வேண்டும். உடன் பணிபுரிபவர்களை அனுசரித்துச் செல்லவும். புரட்டாசி சனிக்கிழமை மகாவிஷ்ணுவை வழிபடுவதால் பணப்புழக்கம் அதிகமாகும்.
`பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406
மிதுனம்
வார ராசிபலன் 21.9.2025 முதல் 27.9.2025 வரை
21.9.2025 முதல் 27.9.2025 வரை
அதிர்ஷ்டகரமான வாரம். உச்சம் பெற்ற ராசி அதிபதி புதனுக்கு சனிப் பார்வை உள்ளது. ராசி அதிபதி புதன் பாக்கியாதிபதி சனியின் பார்வை பெறுவது மிக உன்னதமான அமைப்பாகும். உங்கள் செயல்பாட்டில் இருந்த தடுமாற்றம் குழப்பங்கள் மறையும். சனிபகவான் மிதுனத்திற்கு அஷ்ட மாதிபதியாகவும் இருப்பதால் அதிர்ஷ்ட வாய்ப்புகள் தேடி வரலாம்.
இதுவரை சந்தித்து வந்த பல்வேறு பிரச்சினைகளில் இருந்து விடுபடு வீர்கள். எதிர்பார்த்த தொழில் வாய்ப்புகள் தேடி வரும். ஏற்றுமதி இறக்குமதி தொழிலில் இருப்பவர்களின் வருமானம் இரட்டிப்பாகும். உத்தியோக சூழ்நிலைக்கு ஏற்ப உங்களை மாற்றிக் கொள்வீர்கள். பெற்றோர்கள் பெரியோர்கள் முன்னோர்களின் நல்லாசிகள் கிடைக்கும்.
புதிய நம்பிக்கை பிறக்கும். எதிர்கால இலக்குகளை நிர்ணயிப்பீர்கள். குடும்பத் தேவைக்காக சில ஆடம்பரப் பொருட்களை வாங்க வேண்டிய சூழ்நிலைகள் இருக்கும். சனிபகவான் வக்ர நிவர்த்தி அடைந்த பிறகு திருமண முயற்சிகள் வெற்றி தரும். ஆரோக்கியம் சார்ந்த இன்னல்கள் அகலும். நவராத்திரி காலங்களில் பச்சைப்பயிறு சுண்டல் தானம் வழங்கவும்.
`பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406
மிதுனம்
வார ராசிபலன் 14.9.2025 முதல் 20.9.2025 வரை
14.9.2025 முதல் 20.9.2025 வரை
சிந்தனையில் ஏற்பட்ட குழப்பங்கள் நீங்கி தெளிவு பிறக்கும் வாரம். ராசி அதிபதி புதன் உச்சம் பெற்று வெற்றி ஸ்தான அதிபதி சூரியனுடன் இணைந்து சனி பார்வையில் உள்ளார். தற்போது இருக்கும் நிலையில் மாற்றங்கள் உண்டாகும். தடை, முடக்கம், நஷ்டம் என்ற நிலை மாறி அபி விருத்தி உண்டாகும். பங்குச் சந்தை வணிகத்தில் சாதனை புரிவீர்கள்.
குடும்ப உறவுகளால் ஏற்பட்ட கவுரவ குறைபாடு சீராகி நிம்மதியான நிலை நீடிக்கும். தொழிலில் நிலவிய இழுபறிகள் விலகி சாதகமான சந்தர்ப்பம் உருவாகும். உத்தி யோகஸ்தர்கள் முன்னேற்றமான நிலையை அடைவார்கள். அசையாச் சொத்துக்கள் வாங்கும் முயற்சியில் வெற்றி உண்டாகும். பிள்ளைகளால் பெற்றோர்க்கும், பெற்றோர்களால் பிள்ளைகளுக்கும் நன்மை பயக்கும்.
சுப நிகழ்விற்கான அறிகுறிகள் உண்டாகும். கணவன், மனைவிக்குள் இருந்த பனிப்போர் விலகி சந்தோஷமான நிலை ஏற்படும். பெண்களுக்கு குடும்பத்தில் செல்வாக்கு உயரும். இளம் பெண்களுக்கு திருமண தடை நீங்கும். மகாளய பட்ச காலத்தில் வசதியற்ற மாணவ மாணவியர்களின் தேவையறிந்து உதவுவது சிறப்பாகும்.
`பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406






