என் மலர்tooltip icon

    மிதுனம் - வார பலன்கள்

    மிதுனம்

    வார ராசிபலன் 21.9.2025 முதல் 27.9.2025 வரை

    21.9.2025 முதல் 27.9.2025 வரை

    அதிர்ஷ்டகரமான வாரம். உச்சம் பெற்ற ராசி அதிபதி புதனுக்கு சனிப் பார்வை உள்ளது. ராசி அதிபதி புதன் பாக்கியாதிபதி சனியின் பார்வை பெறுவது மிக உன்னதமான அமைப்பாகும். உங்கள் செயல்பாட்டில் இருந்த தடுமாற்றம் குழப்பங்கள் மறையும். சனிபகவான் மிதுனத்திற்கு அஷ்ட மாதிபதியாகவும் இருப்பதால் அதிர்ஷ்ட வாய்ப்புகள் தேடி வரலாம்.

    இதுவரை சந்தித்து வந்த பல்வேறு பிரச்சினைகளில் இருந்து விடுபடு வீர்கள். எதிர்பார்த்த தொழில் வாய்ப்புகள் தேடி வரும். ஏற்றுமதி இறக்குமதி தொழிலில் இருப்பவர்களின் வருமானம் இரட்டிப்பாகும். உத்தியோக சூழ்நிலைக்கு ஏற்ப உங்களை மாற்றிக் கொள்வீர்கள். பெற்றோர்கள் பெரியோர்கள் முன்னோர்களின் நல்லாசிகள் கிடைக்கும்.

    புதிய நம்பிக்கை பிறக்கும். எதிர்கால இலக்குகளை நிர்ணயிப்பீர்கள். குடும்பத் தேவைக்காக சில ஆடம்பரப் பொருட்களை வாங்க வேண்டிய சூழ்நிலைகள் இருக்கும். சனிபகவான் வக்ர நிவர்த்தி அடைந்த பிறகு திருமண முயற்சிகள் வெற்றி தரும். ஆரோக்கியம் சார்ந்த இன்னல்கள் அகலும். நவராத்திரி காலங்களில் பச்சைப்பயிறு சுண்டல் தானம் வழங்கவும்.

    `பிரசன்ன ஜோதிடர்'

    ஐ.ஆனந்தி

    செல்: 98652 20406

    மிதுனம்

    வார ராசிபலன் 14.9.2025 முதல் 20.9.2025 வரை

    14.9.2025 முதல் 20.9.2025 வரை

    சிந்தனையில் ஏற்பட்ட குழப்பங்கள் நீங்கி தெளிவு பிறக்கும் வாரம். ராசி அதிபதி புதன் உச்சம் பெற்று வெற்றி ஸ்தான அதிபதி சூரியனுடன் இணைந்து சனி பார்வையில் உள்ளார். தற்போது இருக்கும் நிலையில் மாற்றங்கள் உண்டாகும். தடை, முடக்கம், நஷ்டம் என்ற நிலை மாறி அபி விருத்தி உண்டாகும். பங்குச் சந்தை வணிகத்தில் சாதனை புரிவீர்கள்.

    குடும்ப உறவுகளால் ஏற்பட்ட கவுரவ குறைபாடு சீராகி நிம்மதியான நிலை நீடிக்கும். தொழிலில் நிலவிய இழுபறிகள் விலகி சாதகமான சந்தர்ப்பம் உருவாகும். உத்தி யோகஸ்தர்கள் முன்னேற்றமான நிலையை அடைவார்கள். அசையாச் சொத்துக்கள் வாங்கும் முயற்சியில் வெற்றி உண்டாகும். பிள்ளைகளால் பெற்றோர்க்கும், பெற்றோர்களால் பிள்ளைகளுக்கும் நன்மை பயக்கும்.

    சுப நிகழ்விற்கான அறிகுறிகள் உண்டாகும். கணவன், மனைவிக்குள் இருந்த பனிப்போர் விலகி சந்தோஷமான நிலை ஏற்படும். பெண்களுக்கு குடும்பத்தில் செல்வாக்கு உயரும். இளம் பெண்களுக்கு திருமண தடை நீங்கும். மகாளய பட்ச காலத்தில் வசதியற்ற மாணவ மாணவியர்களின் தேவையறிந்து உதவுவது சிறப்பாகும்.

    `பிரசன்ன ஜோதிடர்'

    ஐ.ஆனந்தி

    செல்: 98652 20406

    மிதுனம்

    வார ராசிபலன் 7.9.2025 முதல் 13.9.2025 வரை

    7.9.2025 முதல் 13.9.2025 வரை

    சிறப்பான பலன்கள் தேடி வரும் வாரம். உப ஜெய ஸ்தானமான 3-ம்மிடத்தில் சூரியன், புதன், கேது சேர்க்கை. விரும்பிய மாற்றங்கள் நடக்கும். புதிய முயற்சிகள் அனைத்தும் செயலாக்கம் பெறும். மன பாரம் குறைந்து நிம்மதியும் தன் நம்பிக்கையும் அதிகரிக்கும். வீடு மாற்றம் வேலை மாற்றம் ஊர் மாற்றம் நடக்கும். பாகப்பிரிவினை தொடர்பான பேச்சு வார்த்தைகள் சுமூகமாகும்.

    சகோதர சகோரிகளின் திருமணம் ஆடம்பரமாக நடந்து முடியும். தொழிலில் கண்ணும் கருத்துமாக இருப்பார்கள். ஆன்லைன் வர்த்தகங்கள் அபரிமிதமான லாபத்தைக் கொடுக்கும். பூர்வீகச் சொத்துக்கள் தொடர்பான மாற்றுக் கருத்துகள் மத்தியஸ்தர்களால் சுமூகமாகும். குடும்ப உறவுகளுடன் ஆன்மீக, இன்பச் சுற்றுலா சென்று வரும் வாய்ப்பு கிடைக்கும்.

    சிலருக்கு வேலையாட்களால் மன சஞ்சலம் உண்டாகும். பெண்களுக்கு பிறந்த வீட்டுச் சொத்து கிடைக்கும். திருமண முயற்சியில் தடை, தாமதம் நிலவும். வாக்குகள் பலிதமாகும். தந்தைவழி உறவுகளால் நன்மை ஏற்படும். பெண்கள் அழகாகவும் இளமையாகவும் இருப்பார்கள். தினமும் விஷ்ணு சகஸ்கர நாமம் படித்து மகாவிஷ்ணுவை வழிபடவும்.

    `பிரசன்ன ஜோதிடர்'

    ஐ.ஆனந்தி

    செல்: 98652 20406

    மிதுனம்

    வார ராசிபலன் 31.8.2025 முதல் 6.9.2025 வரை

    31.8.2025 முதல் 6.9.2025 வரை

    மனதில் அமைதி நிலவும் வாரம். ராசி அதிபதி புதன் வெற்றி ஸ்தானத்தில் வெற்றி ஸ்தான அதிபதி சூரியனுடன் இணைந்து புத ஆதித்ய யோகத்தை ஏற்படுத்துகிறது. வைராக்கியம், விடாமுயற்சியுடனும் செயல்பட்டு சாதனை புரிவீர்கள். தொழிலை விரிவாக்கம் செய்யும் சிந்தனைகள் அதிகரிக்கும். உத்தியோக உயர்வு, ஊதிய உயர்வு எதிர்பார்த்தபடி கிடைக்கும்.

    புதிய நம்பிக்கையான வேலையாட்கள் கிடைப்பார்கள்.பெண்களின் நற்குணங்கள் அனைவரின் பாராட்டையும் பெற்றுத் தரும். சுற்றத்தார் மூலமாக எதிர்பார்த்த பண உதவிகள் கிடைக்கும். பெண்களுக்கு புதிய ஆடை அணிகலன்கள் கிடைக்கும்.சுப விசேஷங்களால் மனதில் மகிழ்ச்சி பொங்கும்.புதிய வாடிக்கையாளர்கள் உருவாகுவார்கள்.

    4.9.2025 அன்று மாலை 5.21 முதல் 6.9.2025 அன்று பகல் 11.21 மணி வரை சந்திராஷ்டமம் உள்ளதால் போட்டி பந்தயங்களில் விழிப்புணர்வுடன் செயல்பட வேண்டும்.சாமர்த்தியமாக செயல்பட்டால் சாதகமான பலனை அடைய முடியும். பிரதோஷ நாட்களில் நந்திகேஸ்வரருக்கு வில்வ அர்ச்சனை செய்து வழிபட வியாபாரம் விருத்தியாகும்.

    `பிரசன்ன ஜோதிடர்'

    ஐ.ஆனந்தி

    செல்: 98652 20406

    மிதுனம்

    வார ராசிபலன் 24.8.2025 முதல் 30.8.2025 வரை

    எதிர்பார்த்த முன்னேற்றங்களால் மகிழும் வாரம். ராசி அதிபதி புதன் தனம் வாக்கு குடும்ப ஸ்தானத்தில் சஞ்சரிக்கிறார். வார இறுதி நாளில் வெற்றி ஸ்தானம் செல்கிறார். வருமானம், பெயர், புகழ் அந்தஸ்து உயரும். மெமோ வாங்கி வேலைக்கு செல்லாமல் இருந்தவர்களுக்கு வேலையில் சேர உத்தரவு வந்து விடும். தொழிலில் போட்டிகள் இருப்பினும் சமாளித்து வெற்றி காண்பீர்கள்.ஏற்றுமதி, இறக்குமதி தொழில் லாபகரமாக இருக்கும். கூட்டுத் தொழில் செய்பவர்களுக்கு பங்குதாரர்களால் வருமானம் உயரும். மாணவர்கள் உயர் கல்விக்காக வெளிநாடு செல்லலாம்.

    அழகு, ஆடம்பர நவீன பொருட்கள், தங்க, வெள்ளி நகை சேர்க்கை அதிகரிக்கும். திருமணம், வீடு, வாகனம் என சுப செலவுகளும் ஏற்படலாம். பூர்வீக சொத்து தொடர்பான பேச்சுவார்த்தையை ஒத்தி வைப்பது நல்லது. ஒரு முக்கிய கோரிக்கைக்காக குல தெய்வத்திற்கு வேண்டுதல் வைப்பீர்கள். பங்கு வர்த்தகர்கள் புத்திசாலித்தனத்துடன் செயல்படுவது அவசியம். ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். தம்பதிகளுக்குள் நல்ல புரிதல் உண்டாகும். வில்வ அர்ச்சனை செய்து விநாயகரை வழிபடவும்.

    மிதுனம்

    வார ராசிபலன் 17.8.2025 முதல் 23.8.2025 வரை

    17.8.2025 முதல் 23.8.2025 வரை

    இழந்த இன்பங்களை மீட்டுப் பெறும் வாரம். தனஸ்தானத்தில் புதன் சுக்கிரன் சேர்க்கை இருப்பதால் இது லட்சுமி நாராயண யோகமாகும். இது உங்களுக்கு மங்களகரமான பலன்களை வழங்க கூடிய அமைப்பாகும். உங்கள் வாழ்க்கை முன்னேற்றத்திற்கு நீங்கள் காணும் கனவுகள் நிறைவேறும்.

    இது சமூகத்தில் பிரபலத்தை ஏற்படுத்தும் யோகமாகும். கலைத் துறையை சார்ந்தவர்களுக்கு மிகச் சிறப்பான காலமாகும். மனதில் சந்தோசமும் அமைதியும் குடிபுகும். நிகழ்கால, எதிர்கால தேவைகள் பூர்த்தியாக கூடிய வகையில் தாராள தன வரவு உண்டாகும். தங்கம், வெள்ளி, அழகு, ஆடம்பரப் பொருட்கள் அதிகம் சேரும்.

    அரசு சார்ந்த துறைகளால் ஆதாயம் உண்டு. உத்தியோகத்தில் நிலவிய சங்கடங்கள் விலகும். சிலர் வியாபாரத்தை விரிவு செய்வார்கள்.

    அதிர்ஷ்டம் சார்ந்த விஷயங்கள் பலன் தரும். பிள்ளைகளுக்கு சுப விசேஷங்கள் நடத்துவீர்கள். புத்திர பிராப்தம் உண்டாகும். வாடகை வீட்டில் வசித்தவர்கள் சொந்த வீட்டில் குடியேறுவார்கள். புதன்கிழமை மகாலட்சுமி சமேத மகாவிஷ்ணுவை வழிப்பட்டால் மன நிம்மதி கூடும்.

    `பிரசன்ன ஜோதிடர்'

    ஐ.ஆனந்தி

    செல்: 98652 20406

    மிதுனம்

    வார ராசிபலன் 10.8.2025 முதல் 16.8.2025 வரை

    10.8.2025 முதல் 16.8.2025 வரை

    மகிழ்ச்சியான வாரம். ஒரு ஜாதகத்திற்கு பலம் தருவது கேந்திரங்கள். தற்போது மிதுன ராசிக்கு கேந்திர ஸ்தானங்கள் பலம் பெறுகிறது. மனதில் நிரம்பி வழிந்த துக்கங்கள் விலகும். சில சிக்கலான பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்கும். பூர்வீக சொத்து தொடர்பான புதிய முயற்சிகள் திட்டங்கள் பலிதாகும். புதிய சொத்துக்களின் சேர்க்கை ஏறபடும்.

    தொழில் முன்னேற்றம், வியாபார அபிவிருத்தி, எடுத்த காரியத்தில் வெற்றி போன்ற நன்மைகள் நடக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி ஆனந்தம் அதிகரிக்கும். வேலை பளுவும், அலைச்சலும் அதிகரிக்கும். புதிய நட்பு வட்டாரம் உருவாகும். விலகிச் சென்ற நண்பர்கள் மீண்டும் நட்பு பாராட்டுவார்கள். பிள்ளைகளால் பெருமை அடைவீர்கள்.

    பெண்களுக்கு பொன், பொருள் ஆபரண சேர்க்கை உண்டாகும். புகழ் அந்தஸ்து கவுரவம் கிடைக்கும். தம்பதிகளுக்குள் மகிழ்ச்சி அதிகரிக்கும். குடும்பத்தில் சுபமங்கள விரயச் செலவு உண்டாகும். பிள்ளைகளால் ஏற்பட்ட பாதிப்புகள் சீராகும். வழக்கு விசாரணையில் தீர்ப்பு சாதகமாகும். கோகுல அஷ்டமி அன்று வெண் பொங்கல் படைத்து ஸ்ரீ கிருஷ்ணரை வழிபடவும்.

    `பிரசன்ன ஜோதிடர்'

    ஐ.ஆனந்தி

    செல்: 98652 20406

    மிதுனம்

    வார ராசிபலன் 3.8.2025 முதல் 9.8.2025 வரை

    3.8.2025 முதல் 9.8.2025 வரை

    சோதனைகள் சாதனைகளாக மாறும் வாரம். ராசியில் பூர்வ புண்ணிய ஸ்தான அதிபதி சுக்கிரன் குருவுடன் சேர்க்கை பெறுகிறார். ஜென்ம குருவால் ஏற்பட்ட சோதனைகள் குறையும். தோற்றப்பொலிவு மற்றும் பழக்க வழக்கங்களில் சிறு சிறு புதுமைகள் ஏற்படும். பொன்,பொருள் சேரும். அதிர்ஷ்டம் நீங்கள் இருக்குமிடம் தேடி வரும். மனமும், உடலும் உற்சாகமாக இருக்கும்.

    மனதில் நல்ல ஆடம்பரமான எண்ணங்கள் அதிகரிக்கும். வராது என்று நினைத்த பணம் வந்து சேரும். எதிர்பார்த்த சில உதவிகள் சாதகமாக அமையும். காதலால் ஏற்பட்ட ஏற்பட்ட மன சஞ்சலம் சீராகும். குல இஷ்ட, தெய்வ பிரார்த்தனைகளை நிறைவேற்ற ஏற்ற காலம். ஆன்மீக நாட்டம் அதிகமாகும். அனைத்து விதமான சுப பலன்களும் நடக்கும்.

    ஒரு சில நேரங்களில் சின்ன சின்ன சங்கடங்கள் வந்தாலும் அதை பொருட்படுத்தாமல் சமாளித்து விடுவீர்கள். 7.8.2025 அன்று இரவு 8.11-மணிக்கு சந்திராஷ்டமம் ஆரம்பிப்பதால் எந்த செயலையும் திட்டமிட்டு செய்தால் பெரிய பாதிப்பு இல்லாமல் தப்பிக்க முடியும். பார்க்கும் வேலையை மாற்றக் கூடாது. வரலட்சுமி நோன்பு அன்று வில்வ அர்ச்சனை செய்து மகாலட்சுமியை வழிபடவும்.

    `பிரசன்ன ஜோதிடர்'

    ஐ.ஆனந்தி

    செல்: 98652 20406

    மிதுனம்

    வார ராசிபலன் 27.7.2025 முதல் 2.8.2025 வரை

    27.7.2025 முதல் 2.8.2025 வரை

    எதிர்கால வாழ்க்கையை திட்டமிடும் வாரம். ராசியில் குரு, சுக்ரன் சேர்க்கை ஏற்பட்டுள்ளது. எந்த முயற்சி எடுத்தாலும் அதில் வெற்றிக்கனியை பறிக்காமல் விடமாட்டீர்கள். அரசு வேலை தேடியவர்களுக்கு மத்திய அரசாங்கப் பணி கிடைக்கும். கைநழுவிப் போன ஒப்பந்தங்கள் திரும்ப கிடைக்கும். புதிய தொழில் முயற்சிகள் அரசு உதவியுடன் வெற்றி பெரும்.

    கவுரவப் பட்டங்கள், பதவிகள் கிடைக்கும். எதிர்பார்த்த இடங்களில் இருந்து பணவரவு தாராளமாக இருக்கும். சிலருக்கு இந்த வாரம் வீடு, பூமி வாங்கக் கூடிய சந்தர்ப்பங்கள் உருவாகலாம். வாடிக்கையாளரிடம் நட்பு மற்றும் பாராட்டு வியாபாரிகளுக்கு அதிக லாபம் பெற்றுத்தரும். ஆடி தள்ளுபடியில் பெண்கள் விரும்பிய பொருட்களை எல்லாம் வாங்கிக் குவிப்பார்கள்.

    மகான்களின் தரிசனத்தால் மனம் மகிழ்வதோடு, மனதில் அமைதியும் நிலவும். மிதுன ராசியினருக்கு ஆவணி மாதம் தடையில்லாமல் திருமணம் நடக்கும். ஆரோக்கிய குறைபாடு இருந்த இடம் தெரியாது. ஆடிப்பூர நன்னாளில் சுமங்கலிப் பெண்களுக்கு மஞ்சள் குங்குமம் வழங்கவும்.

    `பிரசன்ன ஜோதிடர்'

    ஐ.ஆனந்தி

    செல்: 98652 20406

    மிதுனம்

    வார ராசிபலன் 20.7.2025 முதல் 26.7.2025 வரை

    20.7.2025 முதல் 26.7.2025 வரை

    விரும்பிய மாற்றங்கள் தேடிவரும் வாரம். ராசி அதிபதி புதன் தனம், வாக்கு, குடும்ப ஸ்தானத்தில் சஞ்சரிக்கிறார். நல்ல யோகமான பலன்கள் நடக்கும். மனதில் நம்பிக்கையும், உறுதியும் அதிகரிக்கும். கடந்த கால மனச் சோர்வுகள் நீங்கும். திடமான எண்ணத்தோடு அனைத்து காரியத்தையும் எளிதாக முடிப்பீர்கள்.

    நீண்ட நாட்களாக தடைப்பட்டு வந்த முக்கிய பணிகளை இந்த வாரம் சிறப்பாக செய்து முடிப்பீர்கள். பொருளாதார நெருக்கடி குறையும். வெளியூர், வெளிநாட்டுத் தொடர்புடைய வாய்ப்புகள் தேடிவரும். விவசாயிகளுக்குத் தடைபட்ட குத்தகை வருமானம் வந்து சேரும். சொந்த வீட்டுக் கனவை பிள்ளைகள் நனவாக்குவர். காதல் வெற்றியாகும். திருமணப் பேச்சுவார்த்தை சுமூகமாக முடியும்.

    சிலர் புதிய பாலிசி எடுப்பார்கள். தந்தைக்கு கண், இருதயம் தொடர்பான சிகிச்சை செய்ய நேரும். உயர் ஆராய்ச்சி கல்வி படிப்பில் ஏற்பட்ட தடைகள் அகலும். பெண்களுக்கு ஆன்மீகம் நாட்டம் அதிகமாகும். ஆடி வெள்ளிக்கிழமை வெண் பொங்கல் தானம் வழங்கவும்.

    `பிரசன்ன ஜோதிடர்'

    ஐ.ஆனந்தி

    செல்: 98652 20406

    மிதுனம்

    வார ராசிபலன் 13.7.2025 முதல் 19.7.2025 வரை

    13.7.2025 முதல் 19.7.2025 வரை

    புதுமை படைக்கும் வாரம். ராசி அதிபதி புதன் தனஸ்தானத்தில் முயற்சி ஸ்தான அதிபதியுடன் சேர்ந்திருப்பது புத ஆதித்ய யோகம். தொட்டது துலங்கும் தடைபட்ட முயற்சிகள் தாமாக நடந்து முடியும். எதிர்பார்த்த வேலைகள் தடையின்றி முடியும். ஆடம்பரச் செலவுகளை குறைத்து சேமிக்கத் திட்டமிடுவீர்கள். உத்தியோகத்தில் நுணுக்கங்களை கற்றுக் கொண்டு துணிச்சலுடன் செயல்படுவீர்கள்.

    பெரிய பொறுப்புகள் தேடி வரும். சமூகத்தில் நன்மதிப்பு பெறவும் தொழில் ரீதியாக நல்ல முன்னேற்றம் பெறவும் சாத்தியமான வாரமாக இருக்கும். உடனிருந்தவர்கள் உங்களின் உணர்வுகளை புரிந்து கொள்வார்கள். வராக்கடன்கள் வசூலாகும். சுய ஜாதக ரீதியான தோஷங்கள் விலகி திருமணம் நடைபெறும்.

    புதிய நண்பர்கள் அறிமுகமாவார்கள். 13.7.2025 அன்று மாலை 6:53 மணி வரை சந்திராஷ்டமம் இருப்பதால் சிலருக்கு ஞாப சக்தி குறைவும். சிலருக்குத் தேவையற்ற, அலைச்சல் தரும் பயணங்கள் மேற்கொள்ள நேரும். தினமும் கால பைரவ அஷ்டகம் படிக்கவும்.

    `பிரசன்ன ஜோதிடர்'

    ஐ.ஆனந்தி

    செல்: 98652 20406

    மிதுனம்

    வார ராசிபலன் 6.7.2025 முதல் 12.7.2025 வரை

    6.7.2025 முதல் 12.7.2025 வரை

    முயற்சியில் வெற்றி கிடைக்கும் வாரம். ராசியில் வெற்றி ஸ்தான அதிபதி சூரியன் சஞ்சரிப்பதால் அனைத்து காரியங்களையும் திறமையாக திட்டமிட்டு செயல்படுத்துவீர்கள். புதிய முதலீடுகள் லாபத்தையும், வளத்தையும் கொண்டு வரும். உழைப்புக்கேற்ற பலன் பெறுவீர்கள். வியாபாரிகளுக்கு தொழிலில் செல்வாக்கு, சொல்வாக்கு உயரும்.

    சிலருக்கு புதிய நண்பர்கள் கிடைக்கலாம். கூட்டு முயற்சிகள் நல்ல ஆதாயம் தருபவையாக இருக்கும். இழந்த பதவி, நற்பெயர் மீண்டும் கிடைக்கும். கடனால் ஏற்பட்ட அவமானங்கள் குறையும். குழந்தை பாக்கியம் உன்டாகும். சிலருக்கு புதியதாக அரசியல் ஆர்வம் உண்டாகும். எதிர்பார்த்த அரசாங்க உதவி கண்டிப்பாக கிடைக்கும்.

    தடைபட்ட திருமணங்கள் நல்ல முறையில் நடக்கும். பெண்களுக்கு வீட்டில் மகிழ்ச்சியான சூழ்நிலை உண்டாகும். 11.7.2025 அன்று பகல் 12.08-க்கு சந்திராஷ்டமம் ஆரம்பிப்பதால் உடலில் உள்ள சிறுசிறு உபாதைகளைக் கண்டு பயப்படாமல் மனம் தளராமல் வாழ்க்கையை எதிர்கொள்வது நல்லது. பவுர்ணமி அன்று மகாவிஷ்ணு வழிபாடு செய்யவும்.

    `பிரசன்ன ஜோதிடர்'

    ஐ.ஆனந்தி

    செல்: 98652 20406

    ×