மிதுனம் - வார பலன்கள்

இந்தவார ராசிபலன்

Published On 2024-05-20 04:04 GMT   |   Update On 2024-05-20 04:05 GMT

20.5.2024 முதல் 26.5.2024 வரை

சுப விரயங்கள் அதிகரிக்கும் வாரம். ராசி அதிபதி புதன் லாப ஸ்தானத்தில் சஞ்சரிப்பது மிதுனத்திற்கு யோகமான அமைப்பாகும்.மனதில் தைரியம் பிறக்கும். வளர்ச்சிக்கான மார்க்கம் தென்படும்.முக்கிய முடிவெடுப்பதில் ஏற்பட்ட மனக்குழப்பம் அகலும். பொருளாதாரத்தில் தன்னிறைவு காணப்படும்.வரவிற்கு ஏற்ற செலவும் உண்டாகும். விரயத்தை சுப செலவுகளான வீடு, வாகனம், நகைகள், பங்கு பத்திரத்தில் முதலீடு செய்வது புத்திசாலித்தனம். வேலை இழந்தவர்களுக்கு நல்ல உத்தியோகம் கிடைக்கும்.

வியாபாரத்தில் இருந்துவந்த மந்தநிலை விலகும். வீடு மாற்றம், ஊர் மாற்றம், நாடு மாற்றம் என அவரவரின் தசா புத்திக்கு ஏற்ற மாற்றம் உண்டு. நண்பர்கள், தொழில் கூட்டாளிகள், வாழ்க்கைத் துணையை அனுசரித்து செல்வது உத்தமம். குடும்பத்தின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். நெருக்கமானவர்களின் சந்திப்பு குதூகலத்தை அதிகரிக்கும்.கடன் தொடர்பான விஷயங்களில் சிந்தித்துச் செயல்படவும். பிள்ளைகளை அரவணைத்துச் செல்லவும். உடலில் எதிர்ப்பு சக்தி கூடும். புதன் பகவானை வழிபடவும்.

`பிரசன்ன ஜோதிடர்'

ஐ.ஆனந்தி

செல்: 98652 20406

Similar News