மிதுனம் - வார பலன்கள்

இந்தவார ராசிபலன்

Published On 2023-11-06 03:35 GMT   |   Update On 2023-11-06 03:36 GMT

6.11.2023 முதல் 12.11.2023 வரை

திட்டமிட்டு வெற்றி பெறும் வாரம். பாக்கிய அதிபதி சனி வக்ர நிவர்த்தி பெறுவதால் தந்தை, தந்தை வழி உறவுகளால் ஏற்பட்ட மனச்சுமை அகலும்.வீராப்பு பேசிய தந்தை வழி உறவுகள் இணக்கமாக பேசுவார்கள். சிலர் ஆலயத் திருப்பணி செய்வதற்கு தலைமைப்பொறுப்பு ஏற்பார்கள் வெளிநாட்டு வேலை, அரசாங்க வேலை முயற்சிகள் வெற்றி தரும். உத்தியோகஸ்தர்களுக்கு சலுகைகளும் சம்பள உயர்வும் கிடைக்கும்.சிலர் காசி, ராமேஸ்வரம் என ஆன்மீகச் சுற்றுலா சென்று வரலாம். தீபாவளியன்று பழைய உறவினர், நண்பர்கள் சந்திப்பு குதூகலத்தை அதிகரிக்கும்.வெளிவட்டார தொடர்புகளால் புது அனுபவம் உண்டாகும். புதிய வீடு கட்டுவதற்கு வங்கிக் கடனுதவி பெற விண்ணப்பிக்கலாம்.

கல்யாணப் பேச்சுவார்த்தை சாதகமாக முடியும். புதிதாக ஆடை, ஆபரணங்கள் வாங்கி மகிழ்வீர்கள். கண்கள் தொடர்பான பிரச்சினைகளில் கவனம் தேவை. தாய் வீட்டுச் சீதனத்தால் பெண்களுக்கு உற்சாகமும், தெம்பும் ஏற்படும். ஆரோக்கிய கேடு விலகும். மனைவிவழி உறவுகளால் மதிப்பு கூடும். தீபாவளியன்று மகாவிஷ்ணு சமேத மகாலட்சுமியை வழிபடவும்.

'பிரசன்ன ஜோதிடர்'

ஐ.ஆனந்தி

செல்: 98652 20406

Similar News