மிதுனம் - வார பலன்கள்

இந்தவார ராசிபலன்

Published On 2023-10-30 04:49 GMT   |   Update On 2023-10-30 04:50 GMT

30.10.2023 முதல் 5.11.2023 வரை

மனச் சுமை குறையும் வாரம். 3-ம் அதிபதி சூரியனும் 5-ம் அதிபதி சுக்ரனும் பரிவர்த்தனை பெறுவதால் பூர்வீகச் சொத்தில் உடன் பிறந்தவர்களின் திடீர் மனமாற்றம் மத்தியஸ்த்தரை அணுகவைக்கும். புதிய தொழில் முயற்சிக்காக வெளிநாடு சென்று வர திட்டமிடுவீர்கள். ஓய்விற்காக, மன நிம்மதிக்காக தீபாவளிக்கு பிள்ளைகளின் வீட்டிற்கு சென்று வரும் ஆர்வம் உண்டாகும். இடப்யெர்ச்சி செய்ய நேரும். 10-ம்மிட ராகுவால் உங்கள் பெருமையை பறைசாற்றும் புதிய தொழில் வாய்ப்புகள் தேடி வரும். தொழில் வருமானம் சிறப்பாக அமையும். பொருளாதார நிலை திருப்திகரமாக இருக்கும். பிள்ளைகளை உங்களின் நேரடி கவனிப்பில் வைத்திருப்பது அவசியம்.

பார்த்துச் சென்ற வரனிடம் சாதகமான பதில் வரும். 4ம்மிட கேதுவால் வீட்டு வாடகை உயரும். கால்நடை மற்றும் உயிரின வளர்ப்பு, மாடித் தோட்டம் அமைப்பது போன்றவற்றில் ஆர்வம் அதிகமாகும். கடன் தொல்லை குறையும். ஆரோக்கியம் மேம்படும். பெண்களுக்கு பிறந்த வீட்டு சொத்து உரிய முறையில் வந்து சேரும். தம்பதிகளுக்குள் நல்ல புரிதல் உண்டாகும் .மகான்கள் வாழ்ந்த இடத்திற்கு சென்று தரிசிப்பதால் பாக்கியங்கள் அதிகரிக்கும்.

'பிரசன்ன ஜோதிடர்'

ஐ.ஆனந்தி

செல்: 98652 20406

Similar News