மிதுனம் - வார பலன்கள்

இந்தவார ராசிபலன்

Published On 2023-10-16 03:25 GMT   |   Update On 2023-10-16 03:28 GMT

16.10.2023 முதல் 22.10.2023 வரை

தடைபட்ட அனைத்து சுப பலன்களும் தேடிவரும் வாரம். 9-ம் அதிபதி சனியின் 3-ம் பார்வையில் குரு நிற்பதால் எல்லோரும் பாராட்டக் கூடிய நல்ல புண்ணிய காரியம் செய்வீர்கள். தொழில் மூலம் அனைத்து சுப பலன்களும் தேடிவரும். வெளிநாட்டு வேலை அல்லது தொழில் மூலம் பணவரவு கிடைக்கும். புதிய தொழில் கூட்டாளிகள் இணைவார்கள். மிதுன ராசியினர் வாழ்க்கையில் செட்டிலாகும் காலம்.வேற்று மொழி கற்பதில் ஆர்வம் உண்டாகும். திருமண முயற்சி வெற்றி தரும். சொந்த வீடு,வாகன கனவு நிறைவேறும்.

ஜாமீன் கையெழுத்திடுவதை தவிர்க்க வேண்டும். நீண்ட காலமாக தடைபட்ட உயர் ஆராய்ச்சி கல்வி வாய்ப்பு சாதகமாகும். காவல் துறையினர், அரசியல் வாதிகளுக்கு மிகச்சாதகமான நேரம். லவுக நாட்டம் அதிகரிக்கும். 22.10.2023 அன்று காலை 1.38 காலை முதல் 24.10.2023 அதிகாலை 4.22 மணி வரை சந்திராஷ்டமம் இருப்பதால் அலைச்சல் மிகுந்த பயணங்கள் மற்றும் மன சஞ்சலம் அதிகமாகும். கண் திருஷ்டி மற்றும் காரியத் தடை உண்டாகும். மகா விஷ்ணுவை வழிபட அனைத்து விதமான சுப பலன்களும் கூடி வரும்.

`பிரசன்ன ஜோதிடர்'

ஐ.ஆனந்தி

செல்: 98652 20406

Similar News