மிதுனம் - வார பலன்கள்

இந்த வார ராசிபலன்

Published On 2023-10-09 04:02 GMT   |   Update On 2023-10-09 04:03 GMT

9.10.2023 முதல் 15.10.2023 வரை

தடைகள் தகறும் வாரம். ராசி அதிபதி புதன் உச்சம் பெற்று 3ம் அதிபதி சூரியனுடன் 4ம்மிடத்தில் நிற்பதால் உங்கள் தகுதியை திறமையை எந்த இடத்திலும் விட்டுக் கொடுக்க மாட்டீர்கள். தேவைக்கு பணம் வரும். செல்வாக்கு கூடும். குடும்ப நலனில் கண்ணும் கருத்துமாக இருப்பீர்கள். கடினமான முயற்சியும், ஆர்வமும், உழைப்பும் உங்களை நல்ல முறையில் வழி நடத்தும்.எந்த ஒரு காரியத்திலும் துணிந்து இறங்கி செயல்பட்டு வெற்றி பெரும் தைரியம் கூடும். கடன் தொகை கட்டுக்குள் இருக்கும். தன வரவு மகிழ்ச்சியை தந்தாலும் வரவுக்கு மீறிய செலவு மன வருத்தத்தை தரும். தாய், தந்தை , உடன் பிறந்தவர்கள், மனைவி, குழந்தைகள் என யார் மூலமாவது செலவு வந்து கொண்டே இருக்கும். இட மாற்றம், வீடு மாற்றம், வேலைமாற்றம் ஆகியவை ஏற்படும்.

தினமும் சிறு தூர பயணம் செய்வது போன்ற வேலை மாற்றம் ஏற்படும். இடைக்கால பதவி நீக்கம் செய்யப்பட்டவர்கள் மீண்டும் வேலையில் சேர உத்தரவு வரும். சுக ஸ்தானத்தில் கேதுவும் தொழில் ஸ்தானத்தில் ராகுவும் நுழைவதால் சுய ஜாதக தசா புத்தியறிந்து செயல்படுவது உத்தமம். மகாளய அமாவாசையன்று பச்சைப் பயிறு தானம் வழங்கவும்.

'பிரசன்ன ஜோதிடர்'

ஐ.ஆனந்தி

செல்: 98652 20406

Similar News