மிதுனம் - வார பலன்கள்

இந்தவார ராசிபலன்

Published On 2023-10-02 02:00 GMT   |   Update On 2023-10-02 02:01 GMT

2.10.2023 முதல் 8.10.2023 வரை

முயற்சிக்கு ஏற்ற பலன் உண்டாகும் வாரம். ராசி, நான்காம் அதிபதி புதன் உச்சம் பெற்று முயற்சி ஸ்தான அதிபதி சூரியனோடு சேர்ந்து புத ஆதித்ய யோகம் ஏற்படுவதால் தைரியம், திறமை, செயல்திறன், நம்பிக்கை கூடும். இடப்பெயர்ச்சி ஏற்படும். அலைச்சல் அதிகரிக்கும். முன்னேற்றமும் வளர்ச்சியும் யோகமும் வந்து சேரும். செல்வச் செழிப்பு உண்டாகும்.பூர்வீகச் சொத்துக்களை பிரிப்பதில் ஏதாவது கருத்து வேறுபாடு இருந்தால் இப்பொழுது சரியாகிவிடும்.தந்தையுடன் இருந்த கருத்து வேறுபாடு குறையும்.விற்க முடியாமல் கிடந்த சொத்துக்கள் விற்பனை யாகும். புதிய சொத்துக்கள் வாங்கலாம். வீடு கட்டத் தேவையான உபரி லாபம் கிடைக்கும். நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். சிகிச்சை பலன் தந்து ஆயுள், ஆரோக்கிய பயம் விலகும். சுக ஸ்தானத்தை, தாய் ஸ்தானத்தை கேது நெருங்குவதால் தாய் வழி பூர்வீகச் சொத்து பிரச்சினையை விரைந்து முடிப்பது நல்லது. 9-ல் சனி இருப்பதால் பல தலை முறையாக பித்ரு தாக்கத்தால் பாதிக்கப்பட்டவர்கள் முன்னோர் வழிபாடு செய்ய ஏற்ற காலம். மகாளய பட்ச காலம் என்பதால் வெண் பொங்கல் தானம் வழங்கவும்.

'பிரசன்ன ஜோதிடர்'

ஐ.ஆனந்தி

செல்: 98652 20406

2.10.2023 முதல் 8.10.2023 வரை

Similar News