மிதுனம் - வார பலன்கள்

இந்தவார ராசிபலன்

Published On 2023-09-18 02:00 GMT   |   Update On 2023-09-18 02:00 GMT

18.9.2023 முதல் 24.9.2023 வரை

காரியத்தடைகள் அகலும் வாரம். ராசி, 4-ம் அதிபதி புதன் 3ம் அதிபதி சூரியனுடன் பரிவர்த்தனை பெறுவதால் பய ணங்கள் மற்றும் இடப் பெயர்ச்சியால் ஆதாயம் உண்டு. பூர்வீகச் சொத்தில் நிலவி வந்த சர்ச்சைகள் முடிவுக்கு வரும். உயர் அதிகரிகளிடம் நிலவிய இணக்கமற்ற சூழல் மன உளைச்சல் தீரும்.தொழிலில் லாபமும் ஏற்றமும் உறுதி. கையிருப்பில் இருக்கும் சரக்குகளின் மதிப்பு உயரும்.ஆதா யத்திற்காக பழகியவர்களைப் பற்றி புரிந்து கொள்வீர்கள். பெண்களுக்கு அழகு, ஆடம்பர பொருட்கள், தங்க நகைகள் கிடைக்கும். உற்றார், உறவினர்கள் உதவியுடன் வீட்டில் நல்ல சுபகாரியம் நடக்கும். குடும்பத்துடன் இன்பமாக மகிழ்ச்சியாக பொழுதை கழிப்பீர்கள்.பிரகாசமான எதிர்கால த்தைத் திட்டமிடுவீர்கள். ஆரோக்கியத் தொல்லை குறையும்.24.9.2023 இரவு 7.18-க்கு சந்தி ராஷ்டமம் ஆரம்பிப்பதால் முக்கிய பணிகளை அதற்கு முன்பு முடிப்பது நல்லது. திருச்செந்தூர் முருகனை சரணா கதியடைந்து வழிபட்டால் கடன் ,உத்தியோகம், நோய் தொடர்பான பிரச்சினைகள் இருந்த சுவடு தெரியாது.

'பிரசன்ன ஜோதிடர்'

ஐ.ஆனந்தி

செல்: 98652 20406

Similar News