மகரம் - தமிழ் மாத ஜோதிடம்

கார்த்திகை மாத ராசிபலன்

Published On 2023-11-15 03:48 GMT   |   Update On 2023-11-15 03:49 GMT

எதிர்கால சிந்தனையில் மூழ்கி இருக்கும் மகர ராசி நேயர்களே!

கார்த்திகை மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது உங்கள் ராசிநாதன் சனி வக்ர நிவர்த்தியாகி பலம் பெற்று சஞ்சரிக்கின்றார். எனவே உடல்நலம் சீராகும். உற்சாகத்தோடு செயல்படுவீர்கள். கடன் சுமை குறையும். கவலைகள் அகலும். திடமான நம்பிக்கையோடு பணிபுரிவீர்கள். வாங்கல் கொடுக்கல்கள் சீராகும். வளர்ச்சி அதிகரிப்பின் காரணமாக இதைச் செய்வோமா, அதை செய்வோமா என்று சிந்திப்பீர்கள். அர்த்தாஷ்டம குரு ஆதிக்கம் இருப்பதால் ஆரோக்கியத்தில் மட்டும் கவனம் தேவை.

வக்ர குருவின் ஆதிக்கம்

மாதம் முழுவதுமே குரு பகவான் மேஷ ராசியில் வக்ர இயக்கத்தில் இருக்கின்றார். உங்கள் ராசிக்கு 3, 12 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் குரு. அவர் வக்ரம் பெறும் இந்த நேரத்தில் பயணங்கள் அதிகரிக்கும். அலைச்சலுக்கேற்ற ஆதாயம் கிடைக்காது.

சகோதர ஒற்றுமை குறையும். பாகப்பிரிவினைகள் பாதியிலேயே நிற்கும். பயணங்கள் மகிழ்ச்சியைக் கொடுக்குமே தவிர ஆதாயத்தைக்கொடுக்காது. உடல் உபாதைகளைச் சந்திக்க நேரிடும். இதுபோன்ற நேரங்களில் வியாழன் விரதமும், குரு கவசமும் பாடி குருவை வழிபடுவது நல்லது.

துலாம்-சுக்ரன்

உங்கள் ராசிக்கு 5, 10 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் சுக்ரன். அவர் மாதத் தொடக்கத்தில் நீச்சம் பெற்றுச் சஞ்சரிக்கின்றார். எனவே பிள்ளைகளாலும், தொழில் ரீதியாகவும் பிரச்சினைகள் வந்து கொண்டே இருக்கும். தொழில் பங்குதாரர்கள் தொழிலைப் பிரித்துக்கொள்ள நினைப்பர். ஆயினும் கார்த்திகை 14-ம் தேதி துலாம் ராசிக்கு சுக்ரன் வந்த பின்னால் எதையும் நினைத்த மாத்திரத்தில் செய்ய இயலும். நிலைமை சீராகும். தொழிலில் லாபம் உண்டு. உத்தியோகத்தில் மேலதிகாரிகள் ஆதரவாக இருப்பர். வாகனம் வாங்கும் முயற்சி கை கூடும்.

தனுசு-புதன்

உங்கள் ராசிக்கு 6, 9 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் புதன். அவர் கார்த்திகை 14-ம் தேதி விரய ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் பொழுது உள்ளத்தில் நினைத்ததை உடனடியாகச் செய்துமுடிக்க இயலும். கடன் சுமை குறையும். அயல்நாட்டு முயற்சியில் அனுகூலம் கிடைக்கும். புதிய வேலைக்கு விண்ணப்பித்தவர் களுக்கு அது கைகூடும். ஆன்மிகப் பயணங்களால் புகழ் பெற்ற ஆலயங்களில் வழிபட்டு வருவீர்கள். பெற்றோர்களின் மணி விழா, முத்து விழா போன்ற விழாக்களை முன்னின்று நடத்தும் வாய்ப்பு உண்டு.

Similar News