கடகம் - வார பலன்கள்

இந்தவார ராசிபலன்

Published On 2023-10-30 04:50 GMT   |   Update On 2023-10-30 04:51 GMT

30.10.2023 முதல் 5.11.2023 வரை

தொழிலில் புதிய அணுகு முறையை கடைபிடிக்க வேண்டிய வாரம். ராசியை எந்த கிரகமும் பார்க்கவில்லை என்றாலும் 4,11-ம் அதிபதி சுக்ரன் சூரியனுடன் பரிவர்த்தனையாகி தன ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் புகழ்,பணம்,அந்தஸ்து, செல்வாக்கு பெறுவீர்கள். எதிர்பாராத திடீர் தனலாபத்தால் ஆடம்பர வாழ்க்கையை மனம் விரும்பும். பங்குச் சந்தை ஆர்வம் அதிகமாகும்.எதையும் சமாளிக்கும் மன வலிமை உண்டாகும். நல்ல நண்பர்களின் உதவி கிடைக்கும். தொழிலில் நிரந்தர தன்மை உண்டாகும். சுப நிகழ்விற்கான முயற்சியில் சிறு, தடை, தாமதம் உண்டாகும். வேலையின்மையால் அவதிப்பட்டவர்களுக்கு அரசு, தனியார் துறையில் விரும்பிய வேலை கிடைக்கும்.கடன்தர நிதி நிறுவனங்கள், வங்கிகள் தேடி வரும்.

விவசாயிகளுக்கு வறண்ட நிலம் செழிப்பாகும். வீடு, வாகன பராமரிப்பு செலவு மிகுதியாகும். சில பெண்களை பல வருடங்களாக அச்சுறுத்தி வந்த மாதவிடாய் பிரச்சினைக்கு தீர்வு இடைக்கும். பெண்களுக்கு கணவரின் தீபாவளி அன்பளிப்பால் குதூகலம் நிரம்பும். 3-ல் கேது இருப்பதால் எல்லாம் திட்ட மிட்டபடி நடந்தாலும் சிறு மன மன சஞ்சலம் இருக்கும். பைரவரை வழிபடவும்.

'பிரசன்ன ஜோதிடர்'

ஐ.ஆனந்தி

செல்: 98652 20406

Similar News