கடகம் - வார பலன்கள்

இந்தவார ராசிபலன்

Published On 2023-10-16 03:28 GMT   |   Update On 2023-10-16 03:30 GMT

16.10.2023 முதல் 22.10.2023 வரை

நிம்மதியான வாரம்.ராசியை எந்த கிரகமும் பார்க்கவில்லை. சுய ஜாதகத்திலும் கோட்சாரத்தில் ராசியை எந்த கிரகமும் தொடர்பு கொள்ளாமல் இருப்பது விசேஷ மான நல்ல பலன்களைத் தரும். மனம் இலகுவாக இருக்கும். முகப் பொலிவு உண்டாகும். எதையும் திட்டமிட்டுச் செய்வீர்கள். நினைப்பது ஒன்று நடப்பது ஒன்றாக இருந்த நிலை மாறும். மனத்தடுமாற்றம் நீங்கி காரியசித்தி உண்டாகும். புகழ், அந்தஸ்தை உயர்த்த அதிகம் உழைக்க நேரும்.பொருளாதார நிலை சாதகமாக உள்ளதால் அனைத்துவிதமான ஏற்றத்தாழ்வுகளையும் சமாளித்து விடுவீர்கள்.

வேலை இழந்தவர்களுக்கு விரும்பிய வேலை கிடைக்கும்.சிலர் வெளியூர்,வெளி மாநிலம், வெளிநாட்டிற்கு இடம் பெயர நேரும். பெண்களுக்கு மன உளைச்சல் நீங்கி நிம்மதி கிடைக்கும். தாயின் அன்பும் ஆசீர்வாதமும் உங்களை மகிழ்விக்கும்.விரும்பிய கடன் தொகையை அரசுடைமை வங்கிகளில் பெறுவது உத்தமம். அஷ்டமத்தில் சனிபகவான் நிற்பதால் ஏழைப்பெண்களின் திருமணத்திற்கு முடிந்த உதவிகளை வழங்க தடையில்லாத முன்னேற்றம் ஏற்படும்.

`பிரசன்ன ஜோதிடர்'

ஐ.ஆனந்தி

செல்: 98652 20406

Similar News