கடகம் - வார பலன்கள்

இந்த வார ராசிபலன்

Published On 2023-10-09 04:03 GMT   |   Update On 2023-10-09 04:04 GMT

9.10.2023 முதல் 15.10.2023 வரை

வேதனைகள் விலகும் வாரம்.தன ஸ்தானத்தில் குருப்பார்வை பதிவதால் குடும்பத்தில் ஏற்பட்ட குழப்பங்களும் வேதனைகளும், துயரங்களும் விலகும்.குடும்ப உறுப்பினர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். சிலருக்கு மருமகன், மருமகள் வருவார்கள்.சிலருக்கு பேரன் பேத்தி பிறப்பார்கள்.புத்திர பேறு இல்லாதவர்களுக்கு புத்திர பிராப்தம் உண்டாகும். வீட்டில் ஆடம்பர விருந்து உபசாரங்கள் சுப நிகழ்வுகள் நடந்து கொண்டே இருக்கும். பாலிசி முதிர்வு தொகை, எதிர்பாராத பண வரவு உண்டு. அந்நிய மொழியை கற்றுக் கொடுப்பதால் வருமானம் வரும். சிலர் மதம் மாறலாம். காதல் கலப்பு திருமணம் நடைபெறும்.

வரவிற்கு மீறிய செலவாக இருக்கும். வெளிநாட்டு வேலை கிடைக்கும். தொழில் கூட்டாளிகள் உங்களை விட்டு விலகிச் செல்லலாம். புதிய கூட்டாளிகள் வரவும் வாய்புள்ளது. என்றாலும் புதிய தொழில் கூட்டாளி ஒப்பந்தம் செய்ய ஏற்ற காலம் இல்லை. வீடு வாகன யோகம் சிறப்பாக உள்ளது. சிலர் தீபா வளி ஆபரில் பழைய வாகனத்தை கொடுத்து விட்டு புதிய வாகனம் வாங்குவார்கள். மகாளய அமாவாசையன்று புனித நதிகளில் நீராடவும்.

'பிரசன்ன ஜோதிடர்'

ஐ.ஆனந்தி

செல்: 98652 20406

Similar News