கடகம் - வார பலன்கள்

இந்தவார ராசிபலன்

Published On 2023-10-02 02:00 GMT   |   Update On 2023-10-02 02:01 GMT

2.10.2023 முதல் 8.10.2023 வரை

புதிய வாய்ப்புகள் பெருகும் வாரம். முயற்சி, சகாய ஸ்தான அதிபதி புதன் உச்சம் பெற்று தன ஸ்தான அதிபதி சூரியனோடு இணைவ தால் எண்ணங்கள் லட்சியங்கள் நிறை வேறும். தடைகற்கள் படிக்கற்களாக மாறும். தோற்றம் பொலிவு பெறும். தாராள தன வரவு ஏற்பட்டு குடும்பத்தில் மகிழ்ச்சியும் சுபிட்சமும் நிறையும். இடமாற்றம் வேலை மாற்றம் ஏற்படும். உடன் பிறந்த வர்களால் ஏற்பட்ட மனசஞ்சலம் மாறும். அசையாச் சொத்துக்களால் லாபம் உண்டாகும். சொத்துக்களின் மதிப்பு உயரும். பூர்வீகப்பிரச்சினைகள் கட்டுக்குள் இருக்கும். குடும்பத்தில் சுப காரியப் பேச்சுவார்த்தை நடக்கும். உத்தியோகஸ்தர்கள் எதிர்பாராத உயர்வினை பெறலாம். தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு புதிய வாய்ப்புகள் தேடி வரும்.கடன் தொல்லை குறையும். சக பணியாளர்களால் ஏற்பட்ட இன்னல்கள் அகலும். சமையல் கலைஞர்கள் விவசாயிகள் ஏற்றம் பெறுவார்கள்.பிரிந்த தம்பதிகள் கூடி மகிழ்வார்கள். பரம்பரை நோய், கர்ம வினை நோய்க்கு செய்யும் சிகிச்சைகள் பலன் தரும். நெடுந்தூர வெளிநாட்டு பயணம் அல்லது தீர்த்த யாத்திரை செய்ய ஏற்ற காலம். மகாளயபட்ச காலத்தில் தயிர் சாதம் தானம் வழங்கவும்.

'பிரசன்ன ஜோதிடர்'

ஐ.ஆனந்தி

செல்: 98652 20406

Similar News