கடகம் - வார பலன்கள்

வார ராசிபலன்

Published On 2023-09-25 03:48 GMT   |   Update On 2023-09-25 03:48 GMT

25.9.2023 முதல் 1.10.2023 வரை

விரயத்தை கட்டுப்படுத்த வேண்டிய வாரம். 3,12-ம் அதிபதி புதன் தனாதிபதி சூரியனுடன் பரிவர்த்தனை பெறுவதால் சுப விரயங்கள் சுப செலவுகள் அதிகரிக்கும்.சிலருக்கு அடுத்தவர்களுக்காக கடன் படுதல், கொடுத்த பணம் திரும்பி வராது போகுதல் போன்ற பிரச்சினை இருக்கும் என்பதால் கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை. திரைப்படம், விருந்து, கலை நிகழ்ச்சி என குடும்பத்துடன் குதூகலமாக இருப்பீர்கள். தாய் மாமன் உறவுகளால் அனுகூலம் உண்டாகும். வீடு கட்ட மத்திய அரசின் மானியம் கிடைக்கும்.புதிய நபரால் உங்களுக்கும் உங்கள் துணைக்கும் இடையில் ஏற்பட்ட கருத்து வேறுபாடு மறையும்.இந்த வாரத்தின் அனைத்து நாட்களும் பயனுள்ளதாக இருக்கும். ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். பெற்றோர்கள் பக்க பலமாக இருப்பார்கள்.26.9.2023 இரவு 8.28 மணி முதல் 28.9.2023 இரவு 8.28 வரை சந்திராஷ்டமம் இருப்பதால் மனக் கட்டுப்பாடு குறையும். பேச்சில் நிதானமும் பொறுமையும் தேவை. மகாளய பட்ச காலத்தில் வயது முதிர்ந்த தாத்தா, பாட்டியின் நல்லாசிகளைப் பெறவும்.

'பிரசன்ன ஜோதிடர்'

ஐ.ஆனந்தி

செல்: 98652 20406

Similar News